Friday, December 20, 2013

திருக்கயிலாய யாத்திரை சென்றவர்களுக்கு தமிழக அரசு மானியம்

தினமலர் நாளிதழில் வந்த செய்தி. 2013- 2014 நிதியாண்டில்  திருக்கயிலாயம் மற்றும் முக்திநாத் புனித யாத்திரை மேற்கொண்டவர்கள்  இந்த மானியாத்திற்காக விண்ணப்பம் செய்யலாம்.

செய்தி சுட்டி இதோ:

http://temple.dinamalar.com/news_detail.php?id=25895

செய்தி இதோ:

புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்!
டிசம்பர் 20,2013

அ-
+
Temple images
சென்னை: மானசரோவர், முக்திநாத் புனித தலங்களுக்கு சென்று வந்த, யாத்ரீகர்களுக்கு, தமிழக அரசின் சார்பில், மானியம் வழங்கப்படுகிறது. இதில், பயன் பெற விரும்புகிறவர்கள், அடுத்த மாதம், 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்கிநாத் புனித தலங்களுக்கு சென்று வந்தவர்களுக்கு, இந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஆண்டுதோறும், மானியம் வழங்கப்படுகிறது. இரண்டு புனித தலங்களுக்கும் சென்று வந்த, தலா, 250 பேருக்கு மானியம் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும், 250க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டால், அவற்றிலிருந்து குலுக்கல் முறையில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்படும். பயன் பெற விரும்புகிறவர்கள், அடுத்த மாதம், 18க்குள், விண்ணப்பிக்க வேண்டும். www.tnhrc e.org என்ற இணைய முகவரியில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


அரசிதழில் வெளியிடப்பட்ட அரசு ஆணைக்கான சுட்டி இதோ:

http://tnhrce.org/Maanasarovar.pdf


விண்ணப்பப் படிவத்திற்கான சுட்டி இதோ :

http://tnhrce.org/manosarover-tamil.pdf

முக்கிய அம்சங்கள்: 

1. தமிழகத்தை சார்ந்த இந்துக்கள் மட்டுமே விண்ணப்பம் செய்யலாம். வட்டாச்சாரியர் சான்றிதழ் தேவை.

2. 2013-2014 நிதியாண்டில் யாத்திரை செய்தவர்கள்  விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 70 வயதுள்ளவர்கள் தகுதி உடையவர்கள்.

3. ஒரு மாதத்திற்குள்ளாக வேண்டிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

4. இரு யாத்திரைகளிலும்  250 யாத்திரிகளுக்கு மானியம் வழங்கப்படும்.  திருக்கயிலாய யாத்திரைக்கு ரூ. 40000/- மற்றும் முக்திநாத யாத்திரைக்கு ரூ. 10000/- மானியம் வழங்கப்படும்.

5. வருமானம் குறைந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 250 பேருக்கு மேல் இருந்தால் குலுக்கள் நடத்தப்படும்.

6. திருக்கயிலாய யாத்திரையில் அரசு யாத்திரை மூலமாக செல்பவர்களுக்கு முன்னுரிமை, நேபாள் வழியாக சென்றவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.

7. திருக்கயிலாய யாத்திரை சென்றவர்கள் உரிய படிவத்தில், வட்டாட்சியர் சான்று, இருப்பிட சான்று, வயது சான்று, கட்டண சான்று நகல், கடவு சீட்டு நகல், விசா நகல் மற்றும் பயண அட்டையுடன்  18-01-2014க்கு முன்பாக  இந்து சமய  நிலைத் துறை ஆணையருக்கு விண்ணப்பம் செய்யவும். 

8. முக்திநாத் யாத்திரை சென்றவர்கள் உரிய படிவத்தில், வட்டாட்சியர் சான்று, இருப்பிட சான்று, வயது சான்று, பயண சீட்டு நகல், புகைப்படங்கள் -3   மற்றும் பயண  திட்ட நகலுடன்  18-01-2014க்கு முன்பாக  இந்து சமய  நிலைத் துறை ஆணையருக்கு விண்ணப்பம் செய்யவும். 

தகுதியுள்ள அன்பர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு  வேண்டிக்கொள்கிறேன்.


Saturday, September 07, 2013

Kailash Manasarovar Yatra -2012 - 45

Stay at Kathamandu and completion of yatra



Hotel Marshyangdi 

As per the itinerary,  after competing the parikarama we were supposed to stay on the banks of Manasarovar and travel leisurely for another  two days to reach Kathmandu. But we cut short and reached Kathamndu in two days, because of which a gained a day in Kathamandu which we used for sight seeing.  We first visited Narayanhity palace museum, which we could not cover  during our  earlier sight seeing trip. The museum show cased the rise and fall of the Nepal monarchy. The entry  fees are different for Nepalease, SAARC citizens and other foreigners, here they accept only Neapali currency, so we excahnged the Indian rupees and paid the same. But in general all the hotels,  taxis and commercial establishments accept Indian currency.  So while negotiating fares better be clear whether the fare is in Indian rupees or Nepali rupees. As Kathamandu is a tourist paradise it is possible to covert the currencies easily. 


.
 Some members of our group in front of the hotel

Leisurely breakfast at the hotel


Narayanhity palace museum

In the evening many yatris decided to take a well deserved rest. But myself and Sundar went to Dhulikel  where  152 ft Shiva statue is located. This is the tallest Shiva statue and has been constructed by a Indian business man. The statue is situated on a hillock and vehicles ply upto that place. One can also have the darshan of  of Shiva family and Nandi and  12 Joytir Lingas here and fully landscaped gardens. There is an restaurant and spa situated at that place.   

Dhulikel 152 ft tall Shiva statue.




Close-up  shot of the  Lord

Nandhi

Shiva family


Others went for shopping in the busy Thamel area. Many  Buddhist artifacts and colorful precious and semi precious stone chains and paintings are available here which one can pick as a souvenir. In the evening we got back our bags. In the Hotel we met a group of yatris from Thanjavur. They told us that they had been denied permission for entry into tibet for the next three days as Dolma is still covered with snow. May be due the fall and injury to the German tourist on the day in which we undertook the parikrama. We also felt lucky thgat by the grace of Shivasakthi we could complete the parikrama.  Thus we had a complete rest day at Kathmandu   




Mountain flight 

Bird's eye view of peaks of Nepal


Some of our group members booked for the mountain flight the next day morning and had the beautiful view of the peaks of the Himalayas from above and returned back safely. Some of us visited Pasupathinath temple and thanked the Lord  for a nice darshan and parikrama.



Shopping on the streets of Kathmandu 


Due to denial of entry into Tibet, the hotels of Kathmandu was overflowing with Kailash Yatrisk In the evening we left Kathmandu and reached Delhi where we stayed for that night and left for Chennai the next day. Thus this yatra concluded happily and satisfactorily.

Spice jet flight from Kathmandu to New Delhi

At Delhi Airport


Rudrabishekam 
.
With this post this yatra is complete, when I get some more photos and some more details about the yatra let us meet again  until then thanks for all those who followed the yatra along with us.

OM Namashivaya 

Kailash Manasarovar Yatra -2012 - 44


Saga to Kathamandu

Greener Saga to Nylam Road

Nice Tar Road

Serene atmosphere

Prayer flags in between .....




Tunnels

Waterfalls

Nylam Town

Kodari Border

Friendship Bridge - Kodari




Waiting at Kodari for Bus

Happy playing Children of Kodari



Bus to Kathmandu

Saga is a garrison  town  and there are many military  establishments situated in this town. We got up early in the morning and  went around the town we saw many  school going kids in uniform and there were many nice hotels in the town. After  breakfast we left for Kathamndu, unlike the earlier day as the altitude was less the route was greener.  As usual the bus journey was pleasant we bypassed Nylam and reached Kodari around noon time, there was no problem in emigration we were cleared quickly. All us were happy that we are back from Tibet. But our luggage was retained there itself. Shreshta informed us that they will collect the same the next day and will deliver them at the hotel. We had lunch at Kodari and were waiting for the bus. During that time we watched the children of Kodari playing merrily and collecting  gifts from  the yatris.

The bus journey from Kodari was very slow because of heavy congestion in that route we recollected the places we passed during the onward journey, but here was no check by military as during the onward journwy. We reached Kathamandu at around seven in the night. We were accommodated in  Marshyangdi Hotel in busy Thamel area. After about ten days we had a full bath and had a nice sleep after an arduous yatra. 




Thursday, September 05, 2013

Kailash Manasarovar Yatra -2012 - 43

Return Journey from Darchen to Saga

Full view of  Kailash

Journey through semi desert

 Better Tar road .....

made the journey faster ......

and comfortable


 Our photographer Sundar

Tortuous road up the mountain

Nearing saga we had the taste of earlier dust road


As we were just outside darchen we had the fine darshan and full view of the south face of Mt. Kasilash along with eastern extension. We completed the Manasarovar parikrama and reached Hore. Thanked Shivasakthi for a nice darshan and successful parikrama and left for Saga. On the return journey we  travelled along the tortuous  tar road, as the road has been laid recently the journey was faster and comfortable. On the way we saw many mountain goats, grazing yaks,  sheep, snow covered peaks and lakes.  Nearing saga  we had the taste of the old mud road, for the one Km journey it took about one hour. Late in the night at about 10 Pm we reached Saga. Here also we stayed in ordinary accomodation.


Wednesday, September 04, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -45 (திருக்கயிலாய யாத்திரை-2012)

காத்மாண்டில் இரு நாள் 

யாத்திரை நிறைவு

மர்ஸ்யாங்க்டி ஹோட்டல்


திட்டப்படி கிரி வலம் முடித்த அன்று மானசரோவர் கரையில் தங்கி மறு நாள் சாகா வந்திருக்கவேண்டும் ஆனால் நாங்கள் நேராக அன்றே சாகா வந்து விட்டதால் ஒரு நாள் அதிகமாக காத்மாண்டுவில் கிட்டியது. நேபாள தலை நகரில்  கடைகள் மற்றும் ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள் இந்திய ரூபாயை எற்றுக்கொள்கிறார்கள். ஆகவே ஆட்டோகாரர்களிடம் பேரம் பேசும் போது சரியாக இந்திய ரூபாயா? அல்லது நேபாள ரூபாயா? என்று சரியாக கூற வேண்டும். சுற்றுலாப் பயணிகள் அதிகம் என்பதால் எங்கு வேண்டுமென்றாலும் பணத்தை மாற்றும் வசதியுள்ளது.  


.
 ஹோட்டல் முன் எங்கள் குழுவினர் 

ஹோட்டலில் காலை உணவு


நாராயண ஹிட்டி அரண்மணை

அந்த இரு நாட்களில் முதல் நாள் காலை நாராயண ஹிட்டி அரண்மணை சென்றோம், தற்போது அது ஒரு அருங்காட்சியகமாக மாறியுள்ளது. நேபாள் குடிமக்களுக்கு குறைவான கட்டணமும், தெற்கு ஆசிய கூட்டமைப்பு குடிமக்களுக்கு அதை விட அதிகமான கட்டணமும், மற்ற வெளி நாட்டினருக்கு என்று மூன்று வித கட்டணங்கள் வசூலிக்கின்றனர். நேபாள ரூபாய்தான் ஏற்றுக் கொள்கிறார்கள் எனவே அருகில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று இந்திய ரூபாய்களை மாற்றிக்கொண்டு வந்து தந்தோம்.  அரசர்களின் வாழ்க்கை முறை எவ்வாறு இருந்தது மற்றும் எவ்வாறு ஒருவரின் தவறினால் அரச பதவி பறி போனது  என்பதை எல்லாம் நேரில் பார்க்க முடிந்தது.


துலிக்கெல் 152  அடி உயர சிவன் சிலை 




நந்தியெம்பெருமான்

அந்தி சாயும் வேளையில் சிவ குடும்பம்


அன்று மாலை அடியேனும்  திரு. சுந்தர் அவர்களும் துலிக்கேல் (Dhulikel) சென்று 152 அடி சிவபெருமானை தரிசனம் செய்து விட்டு புகைப்படங்கள் எடுத்து விட்டு வந்தோம். ஒரு இந்தியர் தான் இந்த உலகத்திலேயே உயரமான சிலையை ஒரு சிறு குன்றின் உச்சியில்  சிவபெருமான் சிலையை நிறுவியுள்ளார். வண்டி மூலமாகவும் மேலே செல்ல முடியும், ஆனால் நாங்கள் சென்ற சமயம் சாலை மராமத்து வேலை நடந்து கொண்டிருந்ததால் நடந்தே மேலே சென்றோம்.  இதனுடன் இணைந்த ஒரு சுற்றுலா விடுதியும் அமைத்துள்ளார், பயணிகள் தங்கிச்செல்வதற்காக. சிவ குடும்பமும், நந்தியும் மற்றும்   பன்னிரு ஜோதிர்லிங்கங்கள் அமைத்துள்ளார்.  ருமையான பூந்தோட்டங்களும் உள்ளன. தரிசிக்க வேண்டிய ஒரு இடம் என்பதில் ஐயமில்லை.


மற்றவர்கள் ஹோட்டலின் அருகிலேயே  உள்ள கடைகளில் பொருட்களை வாங்கியும், ஓய்வு எடுத்தும்  சுற்றிப்பார்த்தும் நேரத்தைக் கழித்தனர். மாலைதான் கொடாரியிலிருந்து  எங்களுடைய பைகள் எல்லாம் திரும்பி வந்து சேர்ந்தன. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் திருக்கயிலாயம் செல்ல விழையும் இன்னும் சில குழுவினர் தங்கியிருந்தனர். அதில் தஞ்சாவூரைச் சேர்ந்த  ஒரு குழுவினரும் இருந்தனர். அவர்களுக்கு மூன்று நாட்களுக்கு திபெத்தில் நுழையும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறினார்கள்.  பனி முழுதும் உருகாததால் ஒரு ஜெர்மன் யாத்திரி விழுந்து அடிபட்டதன் விளைவு இது. மூன்று நாட்களுக்கு கிரி வலத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டதாம். அவனருளால் அவன் தாள் வணங்க முடிந்தது என்று நன்றாக புரிந்தது.  அவர்ன் அருளால் அவனது தரிசனமும் கிரி வலமும் சித்தித்தது.  இன்றைய தினம் காத்மாண்டுவில் ஓய்வுநாள்.




மலைச் சிகர தரிசனம் 

இமயமலையின் சிகரங்கள் 

மறுநாள் காலை எங்கள் குழுவினரில் சிலர் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் அருகில் உள்ள சுற்றுலா நிறுவனத்தினர் மூலமாக முன் பதிவு செய்து சிறு விமானம் மூலம் எவரெஸ்ட் உள்ளிட்ட நேபாளத்தில் உள்ள  உயர்ந்த பனி மூடிய சிகரங்களை சென்று பார்த்துவிட்டு வந்தனர். அந்த அனுபவம் அருமையாக இருந்தது  என்று கூறினர்.




காத்மாண்டுவின் கடை வீதி


இன்றைய தினம் அடியேனும் சுந்தர் பாபு ஆகிய மூவரும் எளி வந்த கருணையினால் அருமையான தரிசனமும், கிரி வலம் முடிக்க அருள் புரிந்த பரம்பொருளுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் பசுபதி நாதர் ஆலயம் சென்று அவரை வணங்கி நன்றி கூறிவிட்டு வந்தோம்.  மதியம் 12 மணிக்கே அறையை காலி செய்ய வேண்டியிருந்தது, பல குழுக்கள் திபெத்துக்குள் செல்லாமல் காத்மாண்டுவிலேயே நின்றதால் அறைகளுக்கு சரியான கிராக்கி இருந்தது. சிறிது நேரம் காத்மாண்டின் வீதிகளில் சுற்றி விட்டு வந்து  மாலை 6:30  அந்தி சாயும் நேரத்தில் Spicejet விமானமேறி டில்லி வந்து சேர்ந்தோம்

தில்லி திரும்பிகிறோம்

தில்லி விமான நிலையத்தில் 

நண்பர் உதயகுமார் வீட்டில் தங்கியிருந்து மறு நாள்  சென்னை வந்து சேர்ந்தோம் இவ்வாறு அவனருளால் இந்த இரண்டாவது யாத்திரையும் மிகவும் அற்புதமாக  அமைந்தது. ஒவ்வொன்றிலும் ஒரு அனுபவம் ஆனால் ஆனந்த அனுபவம். 


பின்னர் இல்லத்தின் பரம கருணாமூர்த்தியான சிவபெருமானுக்கும்  அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கும் அருமையாக கிரி வலம் முடிப்பதற்கு வாய்ப்பும் கொடுத்ததற்காக  இல்லத்தில் ருத்ர அபிஷேகம் செய்து அவன் தாள் வணங்கினோம்.

 இத்துடன் 2012ம் ஆண்டின் திருக்கயிலாய யாத்திரைத் தொடர் நிறைவு பெறுகின்றது. இது வரை வந்து தரிசனம் பெற்ற அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. சிவசக்தி அனைவருக்கும் அருள் வழங்க வேண்டுகிறேன்.  வரும் நாட்களில் மேலும் புகைப்படங்கள் கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன் அது வரை மற்ற வலைத் தலத்தில் சந்திக்கலாம் அன்பர்களே.

ஓம் நம சிவாய