Wednesday, January 07, 2015

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் -8


நைலத்திலிருந்து டோங்பா பயணம் 

திருக்கயிலாய யாத்திரையின் ஐந்தாம் நாள் காலை நைலத்தில் இருந்து  புறப்பட்டு  பல அரிய காட்சிகளை கண்டு களித்துக்கொண்டே பேருந்தில் பயணம் செய்து பழைய  டோங்பா அடைந்து அங்கு தங்கினோம். 

வழியில் ஓய்வெடுத்தோம் 

சீன அரசு ஒரு பேருந்தில் 18 யாத்திரிகள்தான் பயணம் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்திருந்தது போலவே மிக வேகமாக பேருந்தை ஓட்டக்கூடாது என்றும் கட்டுப்பாடி விதித்திருந்தது எனவே ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இவ்வளவு நேரத்திற்கு அப்புறம்தான் செல்ல வேண்டியிருந்தது. வேகமாக சென்றால் வண்டி ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்படும் என்பதால் அவர்கள் பல இடங்களில் தேவையில்லாமல் பேருந்தை நிறுத்தினார்கள். அவ்வாறு நிறுத்திய ஒர் இடம்.   

திபெத்திய சிறுவன் 

அவ்வாறு வண்டி நின்றவுடன் அருகில் இருந்த ஒரு திபெத்திய கிராமத்தில் இருந்து ஒரு சிறுவன் வேக வேகமாக ஒடி வந்து பிச்சையெடுக்க ஆரம்பித்துவிட்டான். 

தூரத்தில் மலையடிவாரத்தில் புராதான திபெத்திய கிராமம் 

அரட்டையடிக்கும் திபெத்திய வண்டி ஓட்டுநர்கள் 

இன்றைய தினம் முதலில் லா லுங் லா என்ற 5100 மீ உயர  கணவாயை முதலில் கடந்தோம்,  ஆனால் அங்கு நிற்கவில்லை. பின்னர் உலகின் உச்சி என்று அழைக்கப்படும் பீடபூமியில் பயணம் செய்தோம், ஒரு பக்கம் நெடிதுயர்ந்த பனி மூடிய சிகரங்கள் கொண்ட மலைத்தொடர்,  மறு பக்கம் ஏரிகள்,  நடு நடுவே குறு கிராமங்கள் எங்காவது யாக் மற்றும் செம்மறி ஆட்டு மந்தைகள்  மேய்க்கும் திபெத்தியர்கள் என்று பலதரப்பட்ட  காட்சிகளை கண்டு  கொண்தே அருமையான தார் சாலையில் பயணம் செய்தோம். 

                           

இப்பாதை நட்புப்பாதை ( Friendship HIghway) என்றழைக்கப்படுகின்றது


பனி படர்ந்த மலைச் சிகரங்கள்


பாதையின் ஒரு புறம் சீ சா பாங் மா மலைத் தொடர்கள் எம்மை தொடர்ந்து வந்தன. அவற்றை யாம் கண்டு களித்தோம். யாம் பெற்ற இன்பம் இவ்வையகாத்தாரும் பெருக. சீனத்தின் இந்த பாலைவன மலங்காட்டில் ஏற்பட்டுள்ள முன்னேறத்தைக்கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. மின்சாரமும், தொலைத்தொடர்பும், சூரிய ஓளி விளக்குகளையும் வழியெங்கும் காணக்கிடைக்கின்றது. இதை பார்த்தால் நாம் இன்னும் பல் வருடங்கள் பின் தங்கியுள்ளோம் .


பைகூ சோ ஏரி


ஒரு பக்கம் மலைத்தொடர் மறு பக்கம் ஏரிகள் என்று கண்டோம். தாங்கள் காணும் ஏரி பைகு சோ ஏரி. இது ஒரு உப்பு நீர் ஏரி. பனி உருகி ஒடி வரும் நீரால் உருவானது.   பின்னர் சாகா என்னும் ஊரை நெருங்குவதற்கு முன்னர் பிரம்மாபுத்ரா நதியைக் கண்டோம், அதன் கரையில் வண்டிகளை நிறுத்தி மதிய உணவு உண்டோம். 

நெளிந்து வளைந்து செல்லும் நட்புப்பாதை 


சாகாவை நெருங்குவதற்கு முன்னர் பாதை இன்னும் பழைய மண்பாதையாகவே உள்ளது.   

பிரம்மபுத்ரா ஆறு 

 நதிக்கரையில்  நாங்கள் 

 குழுவினர் அனைவரும் 

பின் புலத்தில் சாகா நகரத்தைக் காண்கின்றீர்கள் அன்பர்களே. 

மதிய உணவை சுவைத்தோம்


இன்னும்  சில  பனிச்சிகரங்கள்

இவ்வாறு அருமையாக காட்சிகளை இரசித்துக்கொண்டே கடினமான மலைப்பாதையில் கடுங்குளிரில் பயணம் செய்து டாங்போவை அடைந்தோம். இங்கும் தற்போது கழிவறை வசதிகள் உள்ளன. இருவர் மட்டுமே தங்கக்கூடிய சுடு தண்ணீர் வசதி மற்றும் வெப்பக் கட்டுப்பாட்டுடன் கூடிய அறைகள் இங்கு உள்ளன. இருவர் அதிகப்படியாக 100 யுவான்கள் செலுத்தி இவ்வறையில் தங்கினர். 

                            
                                                              தங்கும் விடுதி

டாங்போ நகரம்

நைலம் நகரைப் போலவே இங்கும் கட்டிட வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தன. இப்பகுதி மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றது என்பதற்கு இதுவும் ஒரு அறிகுறி.


திட்டமிட்டபடி முழு நிலவன்று மானசரோவரின் கரையில் இருந்திருக்க வேண்டும் ஆனால் நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் ஒரு நாள் யாத்திரை தாமதம் ஆனது எனவே அடியோங்கள் டோங்பாவில் இருந்தோம். 

நிலவொளியில்  தங்கும் விடுதி 

பிரார்த்தணைக் கொடிகள்

இவ்வாறாக இன்றைய தின சுமார் 400 கி.மீ தூரப்பயணம் நன்றாக அமைந்தது 


எழில் பெறும் இமயத்து இயல்புடை அம்பொன்
பொதுதரு புலியூர்ப் பொதுவினில் நடநவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு 
அருளிய திருமுகத்து அழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவரோடும்
பொலிதரு புலியூர்ப் புக்கு இனிது அருளினன்
ஒலிதரு  கைலை உயர்கிழவோனே! 

யாத்திரை தொடரும் . . . . . . . . .







4 comments:

  1. கட்டுரையும் புகைப்படங்களும் வெகு அருமை.

    ReplyDelete
  2. மிக்க நன்றி மணி அவர்களே. தொடர்ந்து வந்து தரிசனம் பெறுங்கள்.

    ReplyDelete
  3. புகைப்படங்கள் மிக அருமை ஐயா. தொடருங்கள்.

    ReplyDelete
  4. வரும் பதிவில் ஐயனின் முதல் தரிசனம் தொடர்ந்து வாருங்கள் ஐயா.

    ReplyDelete