Saturday, February 28, 2015

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் - 16

முதல் நாள் கிரி வலம் -1 

லா  சூ நதி

மூன்று நாட்கள் கிரிவலத்தில் முதல் நாளுக்கு சில சிறப்புகள் உள்ளன அவையாவன இன்றைய தினம் மட்டுமே நமக்கு ஐயனின் நான்கு முகங்களையும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டுகின்றது.  காலையில் கிரி வலம் டார்ச்சனில் கி  மேலும் இன்றைய தினம்தான் நாம் தேவ பூமியில் நுழைகின்றோம். மேலும் இரவு ஐயனுக்கு மிக அருகில் நாம் தங்குவதும் இன்றைய இரவுதான். 


பல்வேறு முகங்கள் காட்டும் மலை உச்சிகள் 






மேலும் இன்றைய தினம் நாம் சுமார் 12  கி.மீ தூரம் கடக்கின்றோம் ஆனால் ஏற்ற இறக்கங்கள் அவ்வளவு கடுமையானவை அல்ல சமதளம் போலத்தான் உள்ளது . மேலும்  பாதை தற்போது வண்டிகள் செல்லும் விதமாக இரட்டைப்பாதை ஆகிவிட்டது. தார் சாலையாகும் காலம் வெகு விரைவில் ஆகும் என்றே தோன்றுகிறது. எனவே எந்த யாத்திரியும் மிகவும் துன்பமில்லாமல் முதல் நாள் கிரி வலத்தை முடித்து விட்டு ஐயனின்  நான்கு முகங்களையும் தரிசித்த ஆனந்தத்தில் திரும்பி வரலாம். எங்கள் குழுவில் சிலர் இவ்வாறு திட்டமிட்டே வந்தனர்.

கிரி வலப்பாதை இரட்டை பாதை ஆகிவிட்டது

மில்ரெபாவின் காலடியில் குமாரசாமி ஐயா 

வழியெங்கும் அநேக சிட்டுக்குருவிகள் 



பல்வேறு பறவைகள் வழியெங்கும் நிறைந்திருந்தன, குறிப்பாக சிட்டுக்குருவிகள் கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டிருந்தன. மேலும் அண்டங்காக்கைகள், வாலாட்டிக்குருவிகள், கழுகுகள் ஆகியவற்றை இன்றைய தினம் கண்ணுற்றோம்.


அண்டங்காக்கைகள் 

குதிரையில் கிரி வலம் செய்யும் குமாரி அம்மா

இளங்கோவன் ஐயா

அவசர உதவிக்கான வண்டி

மருத்துவ வண்டி (Ambulance) மற்றும் அவசர உதவிக்கான  இராணுவ வண்டிகள் கிரிவலப்பாதையில் எப்போதும் ரோந்து வந்து கொண்டிருக்கின்றன. டேராப்புக்கில் உள்ள சில உணவகங்களுக்கு வேண்டிய பொருட்கள் தற்போது வண்டிகள் மூலமாகவே கொண்டு செல்லபப்டுகின்றது.  

  நதியின் குறுக்கே ஒரு பாலம் 

 சீன குதிரை வருடம் என்பதால் கிரிவலம் செல்பவர்கள் அதிகமாகவே இருந்தனர். வழியில் லா சூ நதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ள ஒரு பாலம் பிராத்தனை கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதை காண்கின்றீர்கள். 

கிரி வலம் தொடர்கின்றது

இராஜன்   -    சேர்ப்பா -  சுகந்தி 

திபெத்திய போர்ட்டர்கள் இல்லை என்பதால் எங்களை அழைத்துச் சென்ற சேர்ப்பாக்களே போர்ட்டர்களாக பணியாற்றினர்.     மலை உச்சியிலும்  செல் போன் கோபுரங்கள் அமைத்திருந்தனர்  என்பதால்  கிரி வலப் பாதையில் எங்கிருந்து பேச வாய்ப்பிருந்தது. 

                                                                                                                                                                          வழியில் பார்த்த  ஒரு அருவியின் தடம் 

கிரிவலபாதையில் இது போல பெயர்ப்பலகைகள் அமைத்துள்ளனர். சில முக்கிய இடங்களில் சீன பாணி கழிவறைகள் அமைத்துள்ளனர். அங்கங்கே குப்பைத் தொட்டிகளும் இருந்தன ஆனால்  இந்த வருடம் கூட்டம் அதிகம் என்பதாலோ என்னவோ  வழியெங்கும் குப்பை நிறைந்திருந்தது. வழியெங்கும்  பல இடங்களில் சிற்றுண்டி சாலைகளும்  புதிதாக அமைத்திருந்தனர். 

வழியில் ஒரு உணவு விடுதிக்கான பெயர்ப்பலகை 

மெல்ல மெல்ல நடந்து  மேற்கு முகத்திற்கு அருகில் வந்து சேர்ந்தோம். இது வரை எந்த சிரமமும் இருக்கவில்லை. இனி மேற்கு முக தரிசனம் எவ்வாறு இருந்தது என்பதை அடுத்த பதிவில் காணலாமா அன்பர்களே. 

                                                                                                                             யாத்திரை தொடரும் . . . . . . 

No comments:

Post a Comment