Monday, February 23, 2015

வெள்ளிப் பனித்தலையர் அழைக்கின்றார் - 2

௧ -                                   திருக்கயிலாய மானசரோவர்  யாத்திரை 2015






 இந்த வருடம் சிக்கிம்மில் உள்ள நாது லா  வழியாக யாத்திரை  செல்வதற்கான புதுவழியையும் முடிவு செய்வதற்காக நேரம் ஆனதால், இந்த வருடத்திற்கான  விளம்பரம் தாமதமாக வெளியிடப்பட்டது. எனவே   திருக்கயிலாய யாத்திரை செல்ல விரும்பும் அன்பர்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கான  சமயம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலில்  31  நாள்  மார்ச் மாதம் 2015  ஆக இருந்த விண்ணப்பம் செய்வதற்கான நிறை நாள் ஏப்ரல் மாதம் 10 நாளாக  மாற்றப்பட்டுள்ளது. 

மேலும் நாது லா வழி செல்லும் யாத்திரையின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பயணம் முழுவதும் டார்ச்சன் வரை பேருந்து பயணம் தான். ஆகவே நேபாளம் வழி யாத்திரை போல  திருக்கயிலாய கிரி வலம் மட்டுமே நடைப்பயணம். 

முதல் நான்கு நாட்கள்  டெல்லியில் மருத்துவ பரிசோதணை பின்னர் அங்கிருந்து  விமானம் மூலம் பாக்டோரா (Bagdogra)  என்னும்  விமான தளம் உள்ள ஊரை அடைந்து அங்கிருந்து பின்னர் சிக்கிம் மாநிலத்தின் தலை நகரான காங்டாங்கில் தங்கல்.  மறு  நாள் 15 மைல் (15th Mile) என்ற ஊரில் தங்குதல். அடுத்து செரதாங்( Sherathang) என்ற ஊரில்  மருத்துவ பரிசோதனை மற்றும் சுங்க பரிசோதனைக்காக தங்குதல்.  இவ்வாறு சுமார் ஐந்து நாட்களுக்குப்பின் நாது லா (Nathu La Pass)  கணவாய் வழியாக திபெத்தில் நுழைந்து பேருந்து வழியாக காங்மா என்ற ஊரை அடைந்து அங்கு தங்குகின்றோம். மறு நாள் காங்மாவில் (Kangma) கன்க்ம)  இருந்து லாஜி (Lazi) என்ற ஊரில் தங்குதல் அடுத்து  ஜோங்பா(Zhongba) அடைந்து  பின்னர்    அஷ்டபத் தரிசனம். அங்கிருந்தே இரண்டு நாட்கள் மானசரோவர் ஏரிவலம் முடித்து பின்னர் வழக்கம் போல் மூன்று நாட்கள் திருக்கயிலாய கிரி வலம் முடித்து டார்ச்சன்  வழியாக லாஜி அடைந்து தங்குதல். பின்னர் சென்ற வழியே  திரும்பி் டெல்லி திரும்புதல். ஆக மொத்தம் 23 நாட்கள் யாத்திரை.  காங்டாங்கில் இருந்தே தங்கள் ஊர் திரும்புபவர்கள் அவ்வாறே செய்யலாம்,  முழு அட்டவணையையும் இங்கே காணலாம். 


http://mea.gov.in/Images/pdf/Itinerary_KMY2015_9feb2015_Nathula.pdf

விரும்பும் அன்பர்கள் அனைவரும் விண்ணப்பித்து சிவசக்தியின் தரிசனம் பெறுமாறு தாழ்மையுடன் வெண்டிக்கொள்கிறேன்.  



No comments:

Post a Comment