Sunday, April 12, 2015

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் - 24

டார்ச்செனில் இருந்து டோக்சென் திரும்பும் போது கிடைத்த தரிசனம் 

அதிகாலை நேரத்தில் டார்ச்சன்

பொன்னார் மேனியன் தரிசனம் 

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
 மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைகேனே
  


கிட்டப்பார்வையில் ( Close-up) ஐயனின் தெற்கு திருமுகம்
மேகப்போர்வையுடன் 

மலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரை திவ்யமாக வலம் வந்த அடியோங்கள் டார்ச்சன் திரும்பிய போது மற்ற யாத்திரிகள் தயாராக இருந்தனர். மதிய உணவை முடித்துக்கொண்டு  பேருந்தில் கிளம்பினோம்.   


மேகம் இல்லாமல் 

டார்ச்செனில் இருந்து பார்க்கும் பொழுது தெற்கு முகத்தின் மேல் பகுதி மட்டுமே தெரியும் இதுவரை அந்த காட்சிகளைக் கண்டீர்கள். இனி டார்ச்செனில் இருந்து டோக்சென் செல்லும் போது கிடைத்த அருமையான தரிசனத்தைக் காணலாம். 


டோக்செனில் இருந்து டார்ர்ச்சென் சென்ற போது எப்படி ஐயனின் திவ்ய தரிசனம் கிட்டியதோ அதே போல திரும்பும் போது தரிசனம் கிட்டியது. நடு நடுவே மேகம் வந்து ஐயனை மறைத்துக்கொண்டது ஐயன் எங்களுடன் கண்ணாமூச்சி ஆடுவது போல இருந்தது. 

தெற்கு முகம் மற்றும் கிழக்கு முகத்தின் நீட்சி 

முழு முக தரிசனம் 






பேருந்தில் ஐயனை பார்த்து திரும்பி அமர்ந்து கொண்டு இந்த அற்புத காட்சிகளை கண்டு கொண்டே வந்தோம். 


கிழக்கு முகத்துடன்  


டோக்சென்னை நெருங்க நெருங்க ஐயனிடமிருந்து விலகி மானசரோவர் அருகில் வந்து சேர்ந்தோம். 

 குர்லா மாந்தாதா மலைத்தொடர் மற்றும் மானசரோவர் ஏரி  



நிறைவாக டோக்சென் வந்து சேர்ந்தோம். நிறைவாக அருமையான தரிசனம் தந்த சிவசக்திக்கு ஆனந்தத்துடன்  அனைவரும் ஒன்றாக கூடி நின்று சிவபுராணம்   பாடி அடி வீழ்ந்து வணங்கி இல்லம் நோக்கி புறப்பட்டோம்.  


டோக்செனில் உள்ள  காரியாலய கட்டிடம் 



கிரி வலம் முடித்த எழுவர் 






சிவபுராணம் பாடுகின்றோம் 

நீங்கள் காணும் நீல நிற பேருந்தில்தான் மானசரோவரில் இருந்து திருக்க்யிலாயம் சென்று திரும்பி வந்தோம். இனி எப்போது ஐயன் அழைப்பார் அவரை தரிசிப்போம் என்பது தெரியாததால் அந்த தரிசனத்தை மனதில் பதிய வைத்துக்கொண்டோம். மொத்தமாக பார்த்தால் இந்த யாத்திரை மிகவும் அருமையாக அமைந்தது. ஒரே ஒரு சிறு குறை அஷ்டபத் சென்று ஐயனை அருகாமையில் தரிசனம் செய்ய முடியவில்லை, சீன அரசு தற்போது அஷ்டபத் செல்ல அனுமதிப்பதில்லை என்று கூறினார்கள். சிவசக்திக்கு நன்றி கூறி பின்னர் நாங்கள் சென்ற பேருந்திற்கு மாறி  புது டாங்போ நோக்கி புறப்பட்டோம்.

மாணிக்கவாசகர் அருளிய கண்டபத்து  

பத்திமையும் பரிசும் இலாப் பசுபாசம் அறுத்து அருளி
பித்தன்இவன் எனஎன்னை ஆக்குவித்து பேராமே
சித்தமெனும் திண் கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல் விளங்குதில்லைக் (கயிலை) கண்டேனே! (7)


No comments:

Post a Comment