Sunday, July 12, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 7

போக்ரா திரும்பினோம்

அந்த கிராமத்தில் மதிய உணவு உண்டோம். இங்கு  உணவு விடுதிகளில் அனைவருக்கும் அளவாகவே  சாப்பாடு தருகின்றனர். ஆனால் மிகவும் சுவையாக உள்ளது. சுடு தண்ணீர் கொடுக்கின்றனர். தண்ணீர் பாட்டில் விலை  மிகவும் அதிகம்.  இதை எதற்காக எழுதுகின்றேன் என்றால் பசி தாங்க முடியாதவர்கள் கையில் பிஸ்கெட் மற்றும் நொறுக்குத்தீனி  மற்றும் குடிதண்ணீர் கையில் எடுத்துசெல்வது நல்லது. வழியில் ஒவ்வொரு இல்லத்தின் முன்னரும் சாளக்கிராமமும், திபெத்திய கலைப்பொருள்களும் விற்பனைக்காக வைத்துள்ளனர். விரும்புபவர்கள் பேரம் பேசி வாங்கிக்கொள்ளலாம்.    பின்னர் பேருந்து மூலம் திரும்பி வந்து ஜோம்சமில் தங்கினோம்.



  வழியில் ஒரு புத்த  விகாரம் 

ஒர் சிறு கிராமம்

தவளகிரியின் ஒரு சிகரம்

 மறு நாள் காலை விமான நிலையம் சென்ற போது அடியோங்கள் பயணம் செய்ய வேண்டிய விமானத்தினர் யாரையும் காணவில்லை. விசாரித்ததில் விமானம் பரிசோதனைக்கக காத்மண்டு சென்றுள்ளது எப்போது வரும் என்று தெரியவில்லை என்றார்கள். எப்படியோ 8 மணி அளவில் விமானம் வந்தது. வேண்டிக்கொண்டதின் பேரில் ஒரு சிலரை மற்றொரு  விமானத்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்து தந்தனர்.  ஏதோ ஒரு  கோணல் நடைபெறும் என்பது எங்கள் குழுவினருக்கும் சரியானதாகியது. அனைவரும் அன்று போக்ரா திரும்ப முடியவில்லை. எட்டு அன்பர்கள் ஜோம்சமிலேயே ஏகாதசி தினத்தன்று தங்கும்படியாயிற்று.


விமானத்திலிருந்து வரகு அரிசி வயல்களின் காட்சி

 மலை வளம்
ஓர்  நதி


எதிரே ஒரு சிறு விமானம்

 சென்றபோது அதிகாலையில் சென்றதால் போக்ரா விமானத்தை சரியாக பார்க்கவில்லை. திரும்பி வந்த போது எடுத்த படங்கள்.


போக்ரா விமான நிலையம் 




பூக்களால் நேபாள வரை படம்

திரும்பி வரும் போது போக்ரா நகரத்தில் உள்ள பேவா ஏரியின் (Phewa Lake)  அழகை பறவைப்பார்வையாக பார்த்து இரசித்தோம். மலைகளுக்கு நடுவில் மரகத வர்ணத்தில் மிகப்பெரிய ஏரியை பார்க்கும் ஆனந்தமே தனி. தங்கும் விடுதி வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு மதிய உணவிற்குப்பின் போக்ரா சுற்றுலாவிற்காக கிளம்பினோம். 



விமானத்திலிருந்து பேவா ஏரியின் அழகு




No comments:

Post a Comment