இந்நூலின் முதல் பதிப்பு 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. சிறு திருத்தங்களுடன் பின்னர் 2011ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டது.
இந்த மூன்றாம் பதிப்பு இவ்வருடம் மார்ச் மாதம் வெளி வந்தது. முதல் இரண்டு பதிப்புகளிலும் இந்திய வழி செல்லும் யாத்திரை பற்றிய விவரங்கள் மிகுந்திருந்தன, இப்பதிவில் இந்திய வழி மற்றும் நேபாள் வழியாக செல்லும் யாத்திரை பற்றிய விவரங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நூலைப் பற்றிய சில விமர்சனங்கள்:
தினமலர்
- டாக்டர். கமலம் சங்கர்
திருக்கயிலாயம் சீன ஆதிக்கத்தில் உள்ள திபெத்தில் இமயமலையின் வடகிழக்குப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 20 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது என்பது புவியியல் செய்தி. 1962ல் இந்திய சீனப்போரின் போது இந்தியா வசமிருந்த அது சீனர் வசம் ஆனது என வரலாற்றுச்செய்தி. யாத்திரை ஏற்பாடு. பாதுகாப்பு வழங்கும் இந்திய திபெத்திய எல்லைப்படை, உணவு, போக்குவரத்து உறையுள் என்னும் அடிப்படைத் தேவைகளை செய்து தரும் உத்தராஞ்சம் மானிலத்தின் சுற்றுலாத்துறை, விண்ணப்பம் அனுப்பும் முறை, மருத்துவ சோதனை, செலவு என்பன போன்ற வழி காட்டுதல்கள் என ஆசிரியர் உரையே ஒரு 'குட்டி வழிகாட்டி நூல்' புத்தக கட்டமைப்பு, புகைப்பட - வரைபட வெளியீட்டுத்தாள் என அட்டை முதல் இறுதி வரை காட்டியுள்ள அக்கறை பாராட்டுதற்குரியது.
C.Manohar from Dindigul:
I have read your Kailash yatra
publication recently which is very useful for my journey arranged by Sri
Annapoorani yatra Services, Chennai. Kindly send me a copy of Application form
along with special G.O copy.
பொன்னுத்தம்பிரான்- நாகர்கோவில்
ஐயா நாகர்கோவிலில் புத்தகக்கண்காட்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நான் தாங்கள் எழுதிய "திருக்கயிலாயம் மானசரோவர் தரிசனம்" என்ற புத்தகம் என் கண்ணில் தென்பட்டது. அதில் தாங்கள் திருக்கயிலாத்தில் யாத்திரை பற்றிய விவரங்கள் மற்றும் சிவபெருமானின் தரிசனம், மானசரோவர் ஏரியின் மகிமை பற்றி மிக அருமையாக எழுதி இருந்தீர்கள். படிக்கப்படிக்க என் உடல்தான் இங்கு இருந்ததே தவிர என் உள்ளம் திருக்கயிலாத்தை சுற்றியே இருந்தது. என்னால் அங்கு போக முடியாவிட்டாலும் என் ஆத்மா திருக்கயிலாயத்திற்கு சென்று வந்ததைப்போல ஒரு திருப்தி ஏற்பட்டது. அதற்கு அந்தத் திருக்கயிலை நாதனுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சின்னப்பாப்பையா - சென்னை
தங்களின் "திருக்கயிலாயம் மானசரோவர் தரிசனம்" என்ற நூலைப் படித்தவுடன் திருக்கயிலாயம் செல்ல வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. தினமும் இந்நூலில் உள்ள போற்றித்திருத்தாண்டகம் பராயணம் செய்தோம். மனப்பாடம் ஆகிவிட்டது. இந்த வருடம் (2014) தம்பதிகளாக சென்று திருக்கயிலை நாதனை தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது. திருக்கயிலை நாதருக்கு மிக்க நன்றி.
V.S பாலசுப்பிரமணிய பிள்ளை - வீரவநல்லூர்
தாங்கள் எழுதிய "திருக்கயிலாயம் மானசரோவர் தரிசனம்" என்ற நூலைப் படித்து இந்த வருடம் (2015) அரசின் யாத்திரைக்கு விண்ணப்பத்திருந்தேன், லிபு கணவாய் செல்லும் 17வது குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். திருக்கயிலை நாதர் தரிசனம் மற்றும் மானசரோவர் குளியல் சித்திக்க வேண்டும் என்று திருக்கயிலை நாதரிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.
V.K. Subramanyam K.K.Nagar Chennai
I read your book on Kailash -Manasarovar Yatra, from Dist Library Ashok Nagar. I haven't got the opportunity to visit yet. But you have taken me around - such a wonderful narration.
இந்நூல் வேண்டும் அன்பர்கள் அடியேனை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

No comments:
Post a Comment