Tuesday, October 22, 2019

வெள்ளிப் பனி மலையார் தரிசனம் -1

அவனருளால் இன்னொரு முறை இவ்வருடம் திருக்கயிலாய யாத்திரை வாய்ப்பு சித்தித்தது. அதை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவுகள். 


டார்ச்சனிலிருந்து ஐயனின் தெற்கு முக தரிசனம்


திருக்கயிலாயமும் மானசரோவரமும் இணைந்த கௌரி சங்கர் தரிசனம்


மானசரோவர் தடாகம் 


துயர்க்கெலாம் கூடாய தோற்குரம்பை புக்கு
மயக்குஇல் வழிகாண மாட்டேன் - வியற்கொடும்போர்
ஏற்றானே வண்கயிலை எம்மானே என்கொலோ
மேற்றான் இதற்கு விளைவு - நக்கீர நாயனார் (பதினொன்றாம் திருமுறை -  கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி)


பரிசறியேன் பற்றிலேன் கற்றிலேன் முற்றும்
கரியுரியாய் பாதமே கண்டாய் - திரியும்
புரம்மாளச் செற்றவனே பொற்கயிலை மன்னும்
பரமே அடியேற்குப் பற்று  -  பதினொன்றாம் திருமுறை · திருஆலவாய் உடையார்


ஒவ்வொரு முறையும் கிடைக்கும் தரிசனம் ஒவ்வொன்றாக இருக்கும் இவ்வருடம் முழுவதும் பனி மூடிய நிலையில் வெள்ளிப் பனி மலையராக ஐயன் தரிசனம் தந்தருளினார். அந்த அற்புத தரிசனத்தின் சில காட்சிகள் இப்பதிவில் இடம் பெறுகின்றன.







காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்   
வேலையே   போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்   
தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவற்கு  
வீங்கிருளே போலும் மிடறு.  -  பதினொன்றாம் திருமுறை காரைக்காலம்மையார் அருளிச்செய்த அற்புதத்திருவந்தாதி




இவ்வருடமும் நேபாளம் வழியாக பேருந்தில் பயணம் செய்தோம். முதலில் சென்ற வழியல்ல இது ஒரு மாற்றுப்பாதை. இவ்வருடம் எவ்வழியாக சென்றோம்,  இவ்வருட அனுபவங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.

யாத்திரை தொடரும்

4 comments:

  1. ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  2. விரைவில் பகிர்ந்து கொள்கிறேன் ஐயா.

    ReplyDelete
  3. திருச்சிற்றம்பலம்
    ்அய்யா வணக்கம்
    நம்முடைய தமிழ் மரபில் ஏதும் கவிப்பாடல்களை சொல்லும் வகையில் ஆசிரியர் பெயர் பதிவிடுவது வழக்கம் அநிலும் திருமுறைப்பாடல்கள் சிவத்திருவருளால்அமையப்பெற்றது. இவ்விண்ணப்பம் தங்கள் கவனத்திற்கு
    தங்கள் திருவடியை வணங்கும்
    அன்பன்
    நமசிவய வாழ்க

    ReplyDelete
  4. மிக்க நன்றி . ஆசிரியர் பெயருடன் இனி பதிவிடுகிறேன் ஐயா.

    ReplyDelete