Saturday, November 09, 2019

வெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 5


எவ்வாறு செலவழிப்பது என்று ஒரு திட்டம் தயார் செய்தோம். அதன் பிரகாரம் முதல் நாள் காத்மாண்டு அருகில் உள்ள சந்திரகிரி என்ற மலை வாசத்தலத்திற்கு சென்றோம். காத்மாண்டிற்கு தென் மேற்கே 16 கி.மீ தூரத்தில் இவ்விடம் அமைந்துள்ளது. 2551 மீ உயர இம்மலையின் உச்சியில் பாலேஸ்வர் எனப்படும் ஒரு சிவபெருமான் ஆலயம், ஒரு உணவு விடுதி மற்றும் தொலை நோக்கு கோபுரம் (View Tower) அமைந்துள்ளன. மலை  ஏறியும், வாகனத்திலும்  தற்போது   இழுவை வண்டி (Cable car) மூலமாகவும் மேலே செல்லலாம். அடியோங்களுக்கு இவ்விடத்தை பரிந்துரைத்த  அன்பர் காலையிலேயே சென்று விடுங்கள் ஏனென்றால் மாலை கூட்டம் அதிகமாக இருக்கும் என்று அறிவுறுத்தியிருந்தார் எனவே காலையிலேயே தனி வண்டி அமர்த்திக்கொண்டு சந்திரகிரி சென்றடைந்தோம்.





சந்திரகிரி மலையடிவாரத்தில்


எப்போதும் போல் காத்மாண்டுவில்  கூட்டம் அதிகமாக இருக்கவில்லைஇழுவை வண்டியில் மேலே சென்றோம்சார்க் (SAARC) அமைப்பு நாட்டினருக்குமற்ற வெளி நாட்டினரை விட குறைவான கட்டணம் வசூலிக்கப்படுகின்றதுவயதானவர்கள்மாணவர்கள்குழந்தைகள் ஆகியோர்களுக்கு சலுகைக் கட்டணம் உள்ளதுஅதற்கான அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும்.  இவ்வசதி 2016ல் ஆரம்பிக்கப்பட்டதுஇந்த இழுவை இரயிலில் 38 பெட்டிகள் உள்ளனஒரு பெட்டியில் 8  பேர் வரை பயணம் செய்யலாம்அடிவாரமான தான்கோட்டிலிருந்து சந்திரகிரி உச்சி வரை உள்ள 2.4 கி.மீ தூரத்தை கடக்க சுமார் 15 நிமிடங்கள் ஆகின்றதுகாலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இவ்வசதி இயங்குகிறதுமதிய உணவிற்காக ஒரு மணி நேரம் நிறுத்தப்படுகின்றது.




ரோப்கார் பயணம் 






மேலிருந்து காத்மாண்டு நகரின் காட்சி

சந்திரகிரி வரை படம் 

இவ்விழுவை வண்டியில் மேலே செல்வதே ஒரு தனி அனுபவம்மேலே செல்ல செல்ல சுற்றிலுமுள்ள பனி படர்ந்த  மலைச்சிகரங்கள் கண்ணில் படுகின்றனமேகங்கள் வந்து உரசி விட்டு சென்றனசுற்றியிலும் உள்ள கிராமங்கள் அருமையாக தெரிந்தனஉச்சியை அடைந்ததும் அருமையான ஒரு கோவிலை  தரிசிக்கலாம்அடியேன் பார்த்த பல ஆலயங்களில் மிகவும் தூய்மையாக பராமரிக்கப்படுகின்ற ஒரு கோவில் என்று கூறலாம்அவ்வளவு சுத்தமாக இருந்ததுநந்திவிநாயகர்அனுமன் மற்றும் சிம்மம் அனைத்தும் பள பள என்று மின்னிக்கொண்டிருந்தனவிமானமும் இன்று தான் புதிதாக வர்ணம் பூசப்பட்டது போல எழிலாக இருந்தது.    நேபாளத்தின் நாகர அமைப்பில் இரு அடுக்கு விமானத்துடன்  எழிலாக அமைந்துள்ளது ஆலயம்நேபாளத்தில் பல சிவாலயங்களில் சிவ பெருமான் பசுபதி நாதர் போல நான்கு முகங்களுடன் அருட்காட்சி தருவார்ஆனால் இவ்வாலயத்தில் இலிங்க ரூபமாகவே அருள் பாலிக்கின்றார்புராணப்படி சதி தேவியின் முன்தலை விழுந்த சக்தி பீடம் இத்தலம் என்பது ஐதீகம்எனவே பாலேஸ்வர் என்றழைக்கப்படுகின்றது.  ஒரு கந்தர்வனும், பிரா மணனும் இவரை வணங்கி சாப விமோசனம் பெற்றனர் என்ற ஐதீகங்களும்  இவ்வாலயத்துடன்  இணைந்துள்ளன.  பாலேஸ்வரரை திருக்கயிலாய தரிசனம் சித்திக்கவேண்டும் என்று
 வேண்டினோம்.







புராணப்பெருமை மற்றும் அல்ல சரித்திரப் பெருமையும் பெற்றது சந்திரகிரி அது என்ன என்று காணலாமா?  அரசர் பிருத்வி ஷா இம்மலையின் மேல் இருந்து பார்த்த போதுதான் அவருக்கு காத்மாண்டு சமவெளியின் அழகைக் கண்டு  அதை கைப்பற்றி அதை தனி சாம்ராஜ்ஜியமாக மாற்ற உறுதி பூண்டார் அவர் பின் காத்மாண்டு நேபாள நாட்டின்  தலைநகராயிற்று. இங்குள்ள பாலேஸ்வர் மஹாதேவரின் அருளினால் அரசனால் இவ்வாறு காத்மாண்டுவை வெல்ல முடிந்தது என்பதால் இங்கு வந்து வேண்டுபவர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வைக்கிறார் என்பது ஐதீகம். 




பாலேஸ்வர் மஹாதேவ் ஆலயம்









முன்புற கருட பதாகை 

பின்புற கருடபதாகை 



ஆலயத்தின் பின்புற அழகு
(மர வேலைப்பாட்டை கவனியுங்கள்)


இராமபிரான் சிற்பம்


காத்மாண்டு நகரத்தை இந்த உயரமான இடத்திலிருந்து அருமையாக கண்டு களித்தோம்ஆலயத்தை சுற்றி வரும் போது அங்கங்கே சிகரங்களின் படமும் அதன் உயரமும் குறிக்கப்பட்ட பலகைகளைப் பார்த்தோம்நாங்கள் சென்ற சமயம் மேகமூட்டத்த்தின் காரணமாக எந்த பனி படர்ந்த சிகரத்தையும் காணும் வாய்ப்புக்கிட்டவில்லைமேகம் இல்லாத சமயம் எவரெஸ்ட்அன்னபூர்ணா ஆகிய சிகரங்களைக்கண்டு களிக்கலாம்.  மிகவும் அருமையாக பராமரிக்கப்படுகின்றது இவ்விடம்.
 |

தொலைநோக்கி அமைந்துள்ள கோபுரம் 




சிகரங்களை குறிக்கும் பதாகைகள்






ஒன்
இப்புகைப்படங்களை எடுத்த சுந்தர் அவர்கள்

தேமல் பகுதியில் தங்கிய விடுதி



தொலைநோக்கு கருவியுடன் ஒரு உயர்ந்த கோபுரம் ( View Tower)  ஒன்று உள்ளதுஅதன் கீழ் தளத்தில் உணவு விடுதி அமைந்துள்ளது.  மேகமூட்டமாக உள்ளதால் அவர்களாகவே மூடி வைத்திருந்தனர்எனவே உணவு விடுதியில் சிற்றுண்டி அருந்தினோம்அவ்விடுதியில் சென்னையில் படித்த ஒரு நேபாளி மாணவர் தமிழில் பேசினார்குழந்தைகள் விளையாடும் இடம் மற்றும் தங்கும் வசதிகள் உள்ளன என்றார்இவ்வாறு சந்திரகிரியின் சுற்றுலாவை முடித்துக்கொண்டு இழுவை வண்டி வழியாக  தான்கோட் வந்தடைந்து பின்னர் வண்டி மூலம் காத்மாண்டு வந்தடைந்தோம்முதலில் தங்கிய விடுதியில் இருந்து தேமல் பகுதியில் உள்ள வேறு ஒரு விடுதிக்கு எங்களை மாற்றினார்கள் அங்கு சென்று தங்கினோம். மறு நாள் எங்கு சென்றோம் என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.





யாத்திரை தொடரும் .....

No comments:

Post a Comment