திருசிற்றம்பலம்
அடியேன் திருக்கயிலை பற்றிய நூலை முதலில் தமிழில் வரைந்தேன். பிரேமா பிரசுரத்தினர், அதை வெளியிட்டார்கள். இது வரை மூன்று பதிப்புக்கள் வந்துள்ளன. பல அன்பர்கள் அந்நூலை வாசித்து பலன் பெற்றுள்ளனர்.
அப்போதிலிருந்தே அப்புத்தகத்தை ஆங்கிலத்திலும் வெளியிடவேண்டும் என்ற எண்ணத்தை மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதர் அடியேனது உள்ளத்தில் ஏற்படுத்தினார். ஆயினும் பல வருடங்கள் கழித்து இப்போதுதான் திருவருள் கூடி வந்துள்ளது.
தமிழ் படிக்க முடியாத ஆங்கிலம் படிக்கக்கூடிய அன்பர்களுக்கு இந்நூல் திருக்கயிலாய யாத்திரை பற்றி அறிந்து கொள்ள இந்நூல் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்நூலை சிவசக்தியின் திருப்பாதத்தில் சமர்ப்பிக்கின்றேன்.
தற்போது அடியேன் இந்நூலை அமேசானின் Kindle Direct Publishing (Kdp) மூலமாக பதிவிட்டிருக்கின்றேன்.
என்ற சுட்டியை பயன்படுத்தி தாங்கள் புத்தகத்தை வாங்க முடியும். அமேசானில் புத்தகங்களுக்கு கட்டணம் செலுத்தவேண்டும். புத்தகத்தை வாங்க முடியாத அன்பர்கள் அடியேனுக்கு மின்னஞ்சல் செய்தால் அவர்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்கின்றேன். அடியேனது மின்னஞ்சல் முகவரி muruganandams@rediffmail.com .
நூலில் பல அரிய புகைப்படங்களுடன் இந்திய வழி மற்றும் நேபாள வழி அனுபவங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நூலை படித்தபின் தாங்களே திருக்கயிலை சென்று சிவபெருமானை தரிசித்து வந்த அனுபவத்தைப் பெற இந்நூலை படியுங்கள். தாங்கள் படிப்பதோடு மட்டும் அல்லாமல் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இச்செய்தியை கூறுவங்கள். யான் பெற்ற இன்பத்தை அனைவரும் பெறட்டும்.
கண்ணார் அமுதனே போற்றி! கயிலை மலையானே போற்றி!
ஐயா வணக்கம்
ReplyDeleteதங்கள் பயண கட்டுரை மிகவும் அருமை
எனக்கு தங்களது வழி காட்டுதல் தேவை படுகிறது என் நம்பர் 7904670895