அப்பர் பெருமான் அருளிச்செய்த
போற்றித் திருத்தாண்டகம்
முடியார் சடையின் மதியாய் போற்றி
முழுநீறு சண்ணித்த மூர்த்தி போற்றி
துடியா ரிடையுமையாள் பங்கா போற்றி
சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி
அடியா ரடியாமை யறிவாய் போற்றி
அமரர் பதியாள வைத்தாய் போற்றி
கடியார் புரமூன்று மெய்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி. (29)
அடியேன் சென்றது மத்திய அரசு நடத்தும் யாத்திரை, இவ்வழியாக செல்ல முடியாமல் நேபாளம் வழியாக செல்ல விரும்புகின்றவர்களுக்கும் உதவும் விதமாக, அவ்வழி செல்கின்ற யாத்திரிகள் திருக்கயிலாயம் எவ்வாறு செல்கின்றனர் என்பதை சுருக்கமாக தருகின்றேன்.
பசுபதி நாதர் ஆலயம்
சென்னையிலிருந்து இரயில் மூலமாகவோ அல்லது விமானம் மூலமாகவோ டெல்லி சென்று பின் அங்கிருந்து விமானம் மூலம் நேபாள தலை நகர் காத்மாண்டுவை அடைகின்றனர். ஒரு சில சுற்றுலா நிறுவனங்கள் பெங்களூர் சென்று அங்கிருந்து நேராக காத்மாண்டுவை அடைகின்றனர். நாங்கள் குஹூவில் சந்தித்த குழுவினர் அவ்வாறே வந்திருந்தனர், இவர்களுக்கும் பாஸ்போர்ட் அவசியம் ஆனால் விசா காத்மாண்டுவில் வழங்கப்படுகின்றது, இங்கும் குழு விசாதான் வழங்கப்படுகின்றது குறைந்தது ஐந்து பேராவது ஒரு குழுவிற்கு வேண்டும்.
அடியேன் நண்பர் திரு. இராஜேஸ்வர் அவர்கள் நேபாள் வழியாக ஜூலை மாதம் 2006ல் யாத்திரை மேற்கொண்டார் அவரது அனுபவத்தை விவரித்துள்ளேன், அவர் சென்னையில் உள்ள Travel masters India (TMI) என்ற நிறுவனத்தின் மூலம் இந்த யாத்திரையை மேற்கொண்டார். நேபாள் பகுதியில் Heritage tours and travels என்ற நிறுவனத்தினர் இவர்களது யாத்திரை சம்பந்தமான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டனர். அவர் டெல்லி சென்று பின் அங்கிருந்து காத்மாண்டுவை அடைந்தார். முதல் நாள் காத்மாண்டு்வில், ஹோட்டலிலே தங்க வைக்கப்பட்டார் அன்று யாத்திரை பற்றிய குறிப்புகள் வழங்கப்பட்டது.
முதல் நாள் நிலச் சரிவு
இரண்டாம் நாள் காலையில் காத்மாண்டுவில் பசுபதி நாதர் கோவில் , சக்தி பீடமான குஹ்யேஸ்வரி கோவில் போதிநாத் ஆலயம் (புத்த விகாரம்) ஆகிய கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர். மதியத்திற்கு மேல் யாத்திரைக்கு தேவையான பொருட்களை சுற்றுலா நிறுவனத்தினர் வழங்கினர். ஒரு பை, எண் இடப்பட்டது , ஒரு மூக்கு கவசம், ஒரு தூங்கும் பை ( Sleeping bag), ஒரு பெரிய கோட் முதலியன அனைவருக்கும் வழங்கினர், கைத்தடி வேண்டியவர்களுக்கு அடக்க விலையில் விற்றனர். அவர் கொண்டு சென்ற பொருட்களை (suit caseல் கொண்டு சென்றதை ) அந்த பைக்கு மாற்றிக் கொண்டார். அடையாளத்திற்காக எண் இடப்பட்டிருப்பதால் அவரவர்களுடைய பை சரியாக அவரவர்களின் அறைக்கு செர்பாக்களால் சேர்க்கப்பட்டதாக கூறினார். முந்தைய நாள் யாத்திரிகள் அதிகமாக சென்றதால் ஜ“ப்பிற்கு சிறிது சிரமம் ஏற்பட்டது ஆனால் எப்படியோ சுற்றுலா நிறுவனத்தினர் மாற்று ஜ“ப்புகளை ஏற்பாடு செய்து கொடுத்தார்களாம்.
நேபாளத்தையும் சீனாவையும் இணைக்கும் நட்பு பாலம்
மூன்றாம் நாள் காத்மாண்டுவிலிருந்து கோடாரி வழியாக ஜாங்மூக்கு புறப்பட்டனர். யாத்திரையின் முதல் நாளே அவரது குழு ஒரு நிலச்சரிவை சந்திக்க வேண்டி வந்தது எனவே அவர்களது பயணம் நான்கு மணி நேரம் தாமதப்பட்டது. ஆயினும் நேபாள சீன எல்லை எப்போதும் மாலை 6 மணிக்கே மூடப்படுவது, அன்று இவர்கள் செல்லும் வரை திறந்திருந்ததாக கூறினார். ஒரு ஜ“ப்பில் யாத்திரிகள் நால்வர் ஒரு ஓட்டுனர், ஒரு சேர்பா என ஆறு பேர் பயணம் செய்தார்களாம். சில பைகள் ஜ“ப்பிலேயே சென்றன, மற்றவை லாரி மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. பின் நட்புப்பாலம் வழியாக நடந்து žனாவிற்குள் நுழைந்து நுழைவு சம்பிரதாயங்களை முடித்து ஜாங்மூ (3800மீ)அடைந்தனர். பன்னாட்டு எல்லையை கடக்க வண்டிகள் அனுமதிக்கப்படுவது இல்லையால் அவர்களது பொருட்கள் இறக்கப்பட்டு பின் போர்ட்டர்கள் மூலம் சீனாவிற்குள் எடுத்து செல்லப்பட்டதாம். ஜாங்மூவிலிருந்து பின் žன Land Cruiser ஜ“ப்களில் நைலமூ(3750 மீ) அடைந்து அங்கு ஹோட்டலில் தங்கினர், நாள் ஒன்றுக்கு 30 யுவான்கள் வரை சுற்றுலா நிறுவனத்தினர் செலுத்துகின்றனர், அதிகமான வாடகை உள்ள ஹோட்டல்களில் தங்க விரும்பினால் அவ்வாறு தங்க அனுமதித்தார்களாம், ஆனால் அதிகப்படியான கட்டணத்தை யாத்திரிகளே செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன். அவர்கள் குழுவில் இந்தியாவிலிருந்து சென்ற முப்பது பேர்களும், மற்றும் மலேசியாவிலிருந்து வந்திருந்த 14 பேர்களும் கூடவே யாத்திரை செய்தார்களாம். யாத்திரையின் மூன்றாம் நாள் அவர்கள் கிட்டத்தட்ட 150 கி.மீ பயணம் செய்தார்களாம்.
நான்காம் நாள் நைலாமூவில் ஓய்வு நாள் உடல் உயர் மட்ட பயணத்திற்கு தயார் ஆகவதற்காக. .
வழியெங்கும் நீர்விழ்ச்சிகள்
ஐந்தாம் நாள் நைலாமூவிலிருந்து புறப்பட்டு லா பக் கணவாய் பெக்கு-சோ வழியாக சாகாவை (4450 மீ) அடைகின்றனர். பாதை மிகவும் ரம்மியமாக இருந்தது 100 அடிக்கு ஒரு நீர் வீழ்ச்சி, வழியில் இயற்கையின் அழகை இரசித்துக் கொண்டே சென்றார்களாம். அவர்கள் பயணம் சென்றதும் நதியை ஒட்டியே, நேபாளத்தையும், சீனாவையும் பிரிக்கும் ஆறு. சுற்றுலா நிறுவனத்திரே சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்கின்றனர். சமையல்காரர்கள், மற்றும் சமையலுக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் அவர்களே லாரிகளில் எடுத்து செல்கின்றனர். காலையில் எளிய உணவே வழங்குகின்றனர். பகலும் இரவும் அனைவருக்கும் ஏற்ற உணவை வழங்கினார்கள் என்று கூறினார். பரிக்கிரமாவின் போது கூட மதிய உணவிற்காக சிறிது உணவு கட்டி கொடுத்து விட்டார்களாம். ஆகவே எந்த சமயத்திலும் உணவிற்காக இவர்களுக்கு பிரச்சினை இருக்கவில்லை. இன்று இவர்கள் யாத்திரையின் மிகவும் கடினமான மற்றும் மிகவும் நீண்ட தூரமான பயணத்தை மேற் கொண்டார்களாம். மிகவும் களைத்து விட்டதாக நண்பர் கூறினார். 12 மணி நேரத்திற்கு மேலாக பயணம் செய்து சாகாவை அடைந்தார்களாம். சாகாவிலும் ஒரு ஹோட்டலில் தங்கினார்களாம். ஹோட்டலுக்கு அருகிலேயே சீன ராணுவ முகாம்கள் இருந்ததாம், அங்கங்கு ராணுவ தளங்களை புகைப்படம் எடுக்கவேண்டாம் என்று எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன என்று கூறினார். சென்ற வருடம் முதல் சாகாவில் பிரமபுத்திராவின் குறுக்கே ஒரு பெரிய பாலம் கட்டப்பட்டிருப்பதால் இவர்கள் படகு மூலம் பிரமபுத்திராவை கடக்க வேண்டிய அவசியமேற்படவில்லை என்றார். அதனால் கிட்டதட்ட நான்கு மணி நேரம் படகுக்காக காத்திருக்க வேண்டிய சமயம் குறைந்தது என்றார். தற்போது சீனப்பகுதியிலும் யாத்திரிகளுக்கான வசதிகளில் முன்னேற்றம் ஏற்படுகின்றது என்பதற்கு இது ஒரு சான்று.
ஆறாம் நாள் சாகாவிலிருந்து புறப்பட்டு பரியாங் (4600 மீ) என்னும் இடத்தை அடைந்து அங்கு தங்குகின்றனர். இன்று இவர்கள் 185 கி, மீ ஜ“ப்பில் பயணம் செய்கின்றனர்.
*********
Om Namah Shivay
Kailashi ji.
I was part of the 7th batch in 2007 - 7th July to 31st July 2007.
I have posted some photos at
picasaweb.google.com/jeyceebee
You can check this and may pass on the link to fellow yatris.
இப்பதிவுகளை கண்ட ஒரு அன்பர் ஜகதீஸ் அவர்கள் தாம் சென்ற யாத்திரையின் புகைப்படங்களை பிகாசோவில் இட்டிருப்பதை கூறினார் அவ்விடமும் சென்று தரிசனம் பெற வேண்டுகிறேன்.