செல்லும் போது உடல் உயர் மட்டத்திற்கு ஏதுவாக வேண்டும் என்பதற்காக நாதுலா செல்வதற்கே மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டனர் ஆனால் திரும்பி வரும் போது இறக்கம் என்பதால் எந்த சிரமும் இல்லாமல் காங்மாவில் இருந்து நேரடியாக காங்டாங் வந்து சேர்ந்தனர்.
புத்த விகாரம்
இடையில் ஒரு கிராமத்தில் குழுவினர் அனைவரும்
எப்போதும் போல இந்தியப்பகுதியில் I.T.B.P யினர் பாதுகப்பி அளித்ததுடன் அனைத்து உதவிகளையும் செய்தனர். இங்கு அவர்களின் விருந்தோம்பலை ஏற்றுக்கொள்கிறார்கள் யாத்திரிகள்.
அனைவருக்கும் யாத்திரை முடித்த சான்றிதழ் வழங்கப்படுகின்றது.
வெற்றிகரமாக யாத்திரை முடித்த அன்பரை வரவேற்கும் உற்வினர்கள். கோவையை சார்ந்த நாச்சியப்பன் (மாலையுடன் நிற்பவர்) என்ற இந்த அன்பர்தான் யாத்திரை துவங்குவதற்கு முன்பே Whatsappல் ஒரு குழு அமைத்து யாத்திரிகள் அனைவரும் அவர்களது குடும்பத்தினரும் யாத்திரையை நேரடி ஒலிபரப்பு போல தரிசிக்க காரணமானவர்.
இப்பதிவுடன் 2015ன் நாதுலா கணவாய் வழியாக சென்ற திருக்கயிலாய யாத்திரை பதிவுகள் ‘நிறைவு பெற்றன. அவனருளால் இனி வரும் காலத்தில் மற்றுமொரு யாத்திரை விவரங்களுடன் சந்திக்கலாம் அன்பர்களே.