நந்தி கிரி வலம் நிறைவு
(President of India, born 1931)
2007ம் வருடம் முதல் தடவை சென்ற போதே திரு.கயிலை பாலா அவர்கள் நந்தி கிரி வலமும், உள் கிரி வலமும் செய்ய வேண்டும் என்று கனவு கண்டார் சிவ சக்தியின் அருளால் அந்த கனவு நிறைவேறியது என்று சிவசக்திக்கு நன்றி செலுத்துகிறார் அவர்.
நந்தி கிரி வலத்தின் 10 முக்கிய இடங்களின் முக்கிய நிகழ்வுகளை இந்த படத்தின் மூலம் விலக்குகின்றார் கயிலை பாலா. டார்ச்சன் தொடங்கி டார்ச்சன் வரை சுமார் 11 மணி நேரத்தில் இவர்கள் நந்தி கிரி வலத்தை அவனருளால் அவன் தாள் வணங்கி நிறைவு செய்தார்கள் ஐவரும்.
சப்த ரிஷி குகையில் சுமார் ஒன்றரை மணி நேரம் அமர்ந்து சிவ புராணம், தேவார திருவாசகம் பாடி அம்மையப்பருக்கு நன்றி கூறி, மதிய உணவு உண்டு அடுத்த அரை கி. மீ ஏற்றத்திற்கு தங்களைத்தானே தயார் செய்து கொண்டனர். இந்தஅரை கி. மீ தூரம் திருக்கயிலை நாதர் மற்றும் நந்தி இருவருக்கும் உள்ள இடத்தை அடைவதற்காக. பாதை மிகவும் கடினமானதாக இருந்ததாம், சில இடங்களில் வெறும் ஒரு அடி அகலபாதையில் கத்தி மேல் நடப்பது போல் நடக்க வேண்டி வந்ததாம். இப்பாதையின் இரு பக்கமும் செங்குத்தான சரிவுகள் ஆகவே வெகு கவனமாகவும், நிதானமாகவும் செல்ல வேண்டி இருந்ததாம்.
சப்த ரிஷி குகையில் சுமார் ஒன்றரை மணி நேரம் அமர்ந்து சிவ புராணம், தேவார திருவாசகம் பாடி அம்மையப்பருக்கு நன்றி கூறி, மதிய உணவு உண்டு அடுத்த அரை கி. மீ ஏற்றத்திற்கு தங்களைத்தானே தயார் செய்து கொண்டனர். இந்தஅரை கி. மீ தூரம் திருக்கயிலை நாதர் மற்றும் நந்தி இருவருக்கும் உள்ள இடத்தை அடைவதற்காக. பாதை மிகவும் கடினமானதாக இருந்ததாம், சில இடங்களில் வெறும் ஒரு அடி அகலபாதையில் கத்தி மேல் நடப்பது போல் நடக்க வேண்டி வந்ததாம். இப்பாதையின் இரு பக்கமும் செங்குத்தான சரிவுகள் ஆகவே வெகு கவனமாகவும், நிதானமாகவும் செல்ல வேண்டி இருந்ததாம்.
இந்தப் பாதையெங்கும் கற்களாக இருந்ததாம். அவையெல்லாம் மேலே திருக்கயிலாய மலையிலிருந்தும், நந்தி மலையிலிருந்தும் விழுந்த கற்கள் இவர்கள் மேலே ஏறும்போது கூட கற்கள் விழுவதால் உண்டாகும் ஒலி கேட்டுக்கொண்டே இருந்ததாம் இது ஐயன் தனது உடுக்கையை ஒலிப்பது போல் நாதமாகத் தோன்றியதாம். அவரருளால் யார் மேலும் கற்கள் விழவில்லையாம்.
நந்தி கிரி வலத்தின் உயரமான இடத்தில்
கிரி வலத்தின் உயரமான இடம் சுமார் 20000 அடி உயரமான நந்தி மற்றும் திருக்கயிலாயத்திற்கு இடையில் உள்ள இடம். வெகு சில பேறு பெற்றவர்கள் மட்டுமே இவ்விடத்தை அடைந்து ஐயனின் திருவடி ஸ்பரிசமும், நந்தி எம்பெருமானின் முன் பக்க தரிசனமும் பெற முடியும். இங்கிருந்து வெகு தொலைவில் இருந்து மட்டுமே தரிசிக்கக் கூடிய (தென்)கிழக்கு முகத்தையும் அதிலிருந்து ஓடி வரும் எப்போதும் உருகாத பனியாற்றையும் கண்டு களித்தார்களாம். கீழே இறங்கும் போது நந்தி தீர்த்தம் சென்று தீர்த்தம் முகர்ந்து கொண்டு பின்னும் கீழே இறங்கினார்களாம்.
வரும் வழியெங்கும் மூலிகைச்செடிகள் நிறைந்திருந்தனவாம். கபாலா மற்றும் கவாலா ஏரிகள் இரண்டும் கண்ணீல் படவில்லையாம்.
Rare few get the blessing of the lord for hem to be here
SOUTH EASTERN KAILASH
சிவசக்தியின் மிக அருகாமை தரிசனம் பெற்று அவர்களின் திருவடிகளில் மலர் தூவி வழிபட்டு நந்தியெம்பெருமானின் கிரி வலத்தையும் வெற்றி கரமாக அவனருளாலே அவன் தாள் வணங்கி முடித்த ஐவரும் இரவு சுமார் 7:30 மணியளவில் சிலுங் புத்தவிகாரத்தை வந்து அடைந்தனர். பின்னர் அங்கிருந்து பேருந்து மூலமாக டார்ச்சன் முகாமை அடைந்து சிவசக்தியின் கருணையினால் கிடைத்த ஆனந்த அற்புத எழில் தரிசனத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனராம்.
Stunning scenery as we reach a higher ground.
Every step is an effort......
The pass in between Nandhi and Kailash
ஐயனின் திருவடிகளைப் பற்றி அப்பர் பெருமான் இவ்வாறு பாடுகின்றார்.
அரவனையான் சிந்தித்து அரற்றும் அடி ( மஹா விஷ்ணு)
அருமறையான் சென்னிக்கு அணியும் அடி ( பிரம்ம தேவர்)
சரவணன்தான் கைதொழுதுகாணும் அடி ( முருகப்பெருமான்)
சார்ந்தார்க்கு எல்லாம் சரணம் அடி
பரவுவார் பாவம் பறைக்கும் அடி
பதினெண்கணங்களும் பாடும் அடி
திரை வரவு தென் கெடில நாடன் அடி
திருக்கயிலாயத்து (திருவீரட்டானத்து) என் செல்வன் அடி
அத்திருவடியில் ஐந்து அன்பர்கள்.
Kailashi Ananda from Chennai, he was very helpful throughout our inner parikrama
Very steep descent for about 1 to 2 km which finally took us to the valley on the other side of Kailash.
South Eastern Kailash - A beauty on its own.
This is on the Southern side of the mountain were you see vertical clefts called the "celestial steps", and this is supposedly going to the celestial throne of Lord Siva.
ஐயனின் ஜடாமுடியும் முக்கண்ணும் மிக அருகாமை தரிசனம்.
Thick glacier formation which is present throughout the year.
எப்போதும் உருகாத பனியாறு அற்புதமாக பாயும் காட்சி
நந்தி கிரிவலம் முடித்த அன்பர்கள்
இப்பதிவுடன் நந்தி கிரி வல பதிவுகள் நிறைவுற்றன. இன்னும் உள் கிரி வலப் பதிவுகளுடன் பின்னும் சந்திக்கலாம் அன்பர்களே.
ஐயனின் அருள் மழை தொடரும் ..............
5 comments:
அற்புதமான அருகாமைப் புகைப் படங்கள். மிகவும் நன்று. நன்றி.
மிக்க நன்றி பித்தன் ஐயா. இனி வரும் உள் கிரி வலத்தையும் வந்து தரிசனம் செய்யுங்கள்.
GREAT! GREETINGS FROM NORWAY!
காணக்கிடைக்காத தர்சனம் கண்டோம்.
எல்லாம் அவரின் கருணை. மிக்க நன்றி மாதேவி
Post a Comment