Friday, October 28, 2011

திருக்கயிலாய யாத்திரை 2011 -8

முதல் நாள் கிரி வலத்தின் போது யமதுவாரத்தில் நுழைந்து ஐயனின் தெற்கு முக தரிசனம் மற்றும் நந்தி, கணேசர் தரிசனம் பெற்று அங்கிருந்து கால்நடையாகவும், குதிரை அல்லது யாக்கின் மேல் பயணம் செய்து டேராபுக் நோக்கி லா சூ நதியின் கரையோரமாக பயணம் செய்து வரும் வழியில் முதலில் ஐயனின் சத்யோஜாத முகமான மேற்கு முகத்தின் தரிசனம் பெற்றபின் பெறும் தரிசனங்கள் இவை.






சத்யோஜாத முகத்தின் முன்புறம் உள்ள
நந்தியெம்பெருமான் தரிசனம்



மேற்கு முகமும் வடக்கு முகமும் இனைந்த காட்சி
மற்றும் நந்தி




மேற்கு வடக்கு முக தரிசனம்




வடக்கு முகத்தின் உச்சியில் ஐயனின் நாகக்குடையை ஸ்பஷ்டமாக தரிசனம் செய்கின்றீர்கள்.






வடக்கு முக தரிசனம்



காப்பு மலைகளாக அவலோகேஸ்வரர் மற்றும் வஜ்ரபாணிக்கிடையே உதிக்கின்ற செங்கதிர்போல திருக்கயிலாயம்














முதல் நாள் டேராபுக் முகாமில் யாத்த்ரிகள் தங்குகின்றனர். இம்முகாம் வடக்கு முகத்தின் நேர் எதிரே அமைந்துள்ளது. நாங்கள் சென்ற வருடம் திருக்கயிலையின் பக்கம் ஜன்னல்கள் இருந்தன தற்போது அதை மாற்றி கதவுகள் அப்பக்கம் அமைத்துள்ளனராம். அறையின் உள்ளே வரும் போதும் செல்லும்போதும் ஐயனின் அருமையான தரிசனம் பெறும் ஒரு அருமையான வாய்ப்பு தற்போது கிட்டுகின்றது.













அதிகாலையில் பொன் வண்ண எம்பிரான்






16-05-2011 கிரி வலத்தின் இரண்டாம் நாள் அதிகாலையிலேயே எழுந்து யாத்திரையின் மிகவும் உயரமானதும் கடினமானதுமான அன்னை மலை மகள் பார்வதியின் இருப்பிடமான டோல்மா கணவாய்க்கு சென்றிருக்க வேண்டும் ஆனால் பனிப்பொழிவு அதிகமாக இருக்கின்றது என்று காரணம் கூறி இவர்களை யாத்திரை அழைத்துச்சென்ற தனியார் நிறுவனத்தினர் அனுமதி கொடுக்காததால் டேராப்புக்கில் அதிகாலை சூரிய உதய தரிசனம் பெற்று பின் திரும்பி ஆதார முகாமிற்கு திரும்பி வந்து விட்டனர்.



















முதலில் அருணொதய காலத்தில் சிவப்பு வர்ணம்





வெயில் நன்றாக அடிக்கும் போது
ஸ்வேத வர்ணத்தில் எம்பிரான்










வாம தேவ முகம்: மாதர் முகம் போல் ஆபரணமந்து வெட்சிபூ றமாய் இடத்தோளின் மீது வடக்கு நோக்கி இருக்கும் முகம், பஞ்ச பூதங்களில் நீரை குறிக்கின்றது. ஐந்தொழிலில் காத்தல் தொழிலைக் ( விஷ்ணு ஸ்திதி காரண முகம்) குறிக்கின்றது. ஐந்தெழுத்தில் ''. அம்மை ஆதி சக்தி, இம்முகம் பளபளக்கும் தங்கமாக பொன்னார் மேனியனாக திகழ்கின்றது என்பது ஐதீகம். கையிலங்கிரியிலே மிகவும் ஸ்பஷ்டமாய் தரிசனம் தரும் முகம் இம்முகம். மேலே நாகம் குடைப்பிடிக்க இடப்பக்கத்தில் அம்மையையும் அப்பரும் சிவ சக்தியாக தரிசனம் தரும் முகம் இதுதான். முக்கண் முதல்வரையும் மலையரசன் தன் பொற்பாவையையும் ஒரு சேர இம்முகத்திலே தரிசனம் செய்கின்றோம். கயிலாயம் என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும் முகமும் இதுதான். வாம தேவ முகம் சகல செய்வினை தோஷத்தை போக்கியருளும் சர்வ சக்தி படைத்த முகம், பூத பிரேத பயங்களையும், அலுவலக பணியில் ஏற்படும் அச்சதையும் தீர்க்கும்.



ஐயனின் அருள் ஒளியில் திளைக்கும் இரவி அவர்கள்









யாத்திரை தொடரும்…














































No comments: