கயிலை மலையானே போற்றி போற்றி
மலையரையன் பொற்பாவை
உடனாய திருக்கயிலை நாதரின் திருவடி பணிந்து இப்பதிவை தொடங்குகிறேன். சென்ற தடவை திருக்கயிலை சென்ற போதே இனி மேல் திருக்கயிலாய யாத்திரை வேண்டாம் அதற்கு ஆகின்ற செலவை வேறு எதாவது ஆன்மிக காரியங்களுக்கு அல்லது புத்தகங்கள் வெளியிடுவதற்கு பயன் படுத்திக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். அவ்வாறே சில வருடங்கள் சென்றன. இவ்வருடம் (2019) அடியேனுடைய
நண்பர் ஒருவர் அழைத்து திருக்கயிலாயம் செல்லலாம் என்று நினைக்கிறேன் சிறிது வழிகாட்டவும் என்று கேட்டார் என்னையும் அறியாமல் ஒன்றும் கவலை வேண்டாம் அடியேனும் உடன் வருகிறேன் என்று
கூற வைத்தது அவர் அருள். முன்னர் அடியேனிடம்
பல அன்பர்கள் நாங்களும் திருக்கயிலாயம் வருகிறோம் என்று கூறியிருந்தார்கள். எனவே அவர்களை அழைத்து இவ்வருடம் ஜூன் மாதத்தில் திருக்கயிலாயம் செல்ல திருவருள் கூடி வந்துள்ளது. தாங்களும் முடிந்தால் வந்து கலந்து கொள்ளுங்கள் என்று அழைக்க பத்து அன்பர்கள் அடியேனுடன் சேர்ந்து
கொண்டனர். சென்னை மயிலையில்
ஒரு சுற்றுலா நிறுவத்தினரிடம் முன் பணம் கொடுத்து, விமான பயணத்திற்கான
முன் பதிவினை செய்து, கபாலீஸ்வரம் சென்று
கற்பகாம்பாளையும் கபாலீஸ்வரரையும் வணங்கி யாத்திரை புறப்படும் நாளுக்காக காத்துக்கொண்டிருந்தோம்.
யாத்திரை கிளம்புவதற்கு முன்னர் திருமயிலையில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் தரிசனம்.
பச்சை சட்டை அணிந்த
திரு சுந்தர் அவர்கள் இப்புகைப்படங்களை எல்லாம் எடுத்தவர்.
சென்னை விமான நிலையத்தில்
பெங்களூர் விமான நிலையத்தில் பெஜாவர் மடாதிபதி
சுவாமிஜீயின் ஆசி
சுவாமிஜீயின் ஆசி
நேபாளம் செல்லும் விமானத்தில்
காத்மாண்டு விமான நிலையத்தில்
யாத்திரைக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் சிறுக, சிறுக சேர்த்தோம். இவ்வருட
யாத்திரை எவ்வாறு இருந்தது எப்படி ஏமாற்றப் பட்டோம் என்பதை அறிந்து கொள்ள
உடன் வாருங்கள் அன்பர்களே.
யாத்திரைக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் சிறுக, சிறுக சேர்த்தோம். இவ்வருட
யாத்திரை எவ்வாறு இருந்தது எப்படி ஏமாற்றப் பட்டோம் என்பதை அறிந்து கொள்ள
உடன் வாருங்கள் அன்பர்களே.
No comments:
Post a Comment