Friday, August 15, 2008

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய யாத்திரை) -15

ஒம் நமசிவாய
8ம் நாள் காலாபனியிலிருந்து நாபிதாங் வரை (9 கி.மீ நடைப்பயணம்)
இயற்கையின் ஒரு அற்புதம் ஓம் பர்வதம்


(இயற்கையில் உருவான தேவநாகரி- பிரணவம் )

********************அப்பர் பெருமான் அருளிச்செய்த போற்றித் திருத்தாண்டகம்

திருக்கயிலாயம்உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி
ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றிஎண்ணா இலங்கைக்கோன் றன்னைப் போற்றி
இறை விரலால் வைத்துகந்த ஈசா போற்றிபண்ணா ரிசையின் சொற் கேட்டாய் போற்றி
கண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றிகண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி (11)


காலை 6 மணிக்கு கிளம்பினோம், லிபு கால்வாயை ஒட்டி பாதை செல்கின்றது, ஒரே ஏற்றம் தான் மலை உச்சியை நெருங்குவதால் மரங்கள் ஏதும் இல்லை ஒரு வகை பாசியும், கத்திரிப்பூ நிற மலர் கொண்ட செடிகள் மட்டுமே உள்ளன. இங்கு ஒரு வகை புல் வளர்ந்துள்ளது அதை காய வைத்து நல்ல வாசனையுடன் சாம்பிராணி போல் புகை தர வல்லது என்று குதிரைக்காரர் கூறினார் சரி வரும் போது பறித்துக் கொள்ளலாம் என்று நினைத்தோம். மதிய உணவிற்கு நாபிதாங்கை (3987 மீ உயரம்) அடைந்தோம்.
நபிதாங் ஒரு முக்கூடல் என்று சொல்லலாம் ஆனால் இங்கு நதிகள் சங்கமம் ஆவதில்லை ஆனால் இந்தியா, நேபாளம், சீன நாடுகளின் எல்லைகள் இங்கு சங்கமம் ஆகின்றன. மேலும் இங்கு மூன்று மலைச்சிகரங்கள் உள்ளன. அவையாவன ஓம் பர்வதம், திரிசூல பர்வதம், மற்றும் நாபி பர்வதம்.நபிதாங்கில் அமைந்துள்ள கோவில்கள்


இயற்கையின் அற்புதத்தை இங்கு நாம் காணலாம் மலையிலே யாரோ கையால் ஓம் என்னும் பிரணவத்தை எழுதியது போல் மலையிலே பள்ளம் அமைந்திருக்கின்றது. பனி நன்றாக பெய்யும் பருவத்தில் சுத்த ஓம்காரத்தை (தேவ நாகரியில் உள்ள எழுத்தைப் போல்) நாம் காணமுடியும், நாங்கள் நாபிதாங்கை அடைந்த சமயம் சிறிது மேக மூட்டம் அம்மலையின் மேல் இருந்தது, சரியாக தரிசனம் கிடைக்கவில்லை ஆனால் சிறிது நேரத்திலேயே மேகம் விலகி அருமையான தரிசனம் மாலை வரை கிடைத்தது. ஓம் பர்வதத்திற்கு வலப்புறம் திரிசூல பர்வதம் மூவிலைச் சூலம் போலவே மூன்று சிகரங்கள், சிவன், சக்தி மற்றும் கணேசன் என்பது ஐதீகம். இடப்புறம் நாபி மலை இதன் நடுவே உள்ள பள்ளம் மனித உடலில் உள்ள தொப்புளைப் போல உள்ளதால் இதற்கு இந்நாமம், இந்த இடமும் இம்மலையின் பெயராலேயே நாபிதாங் என்று அழைக்கபடுகின்றது.


நாபி சிகரமும் கீழே நாபிதாங் முகாமும்(மூன்று சிகரங்களுள் ஒன்று)


முகாமிற்கு சிறிது மேலே இரண்டு கோவில்கள் உள்ளன. விபத்தில் சிக்கி கீழே விழுந்த ஒரு ஹெலிகாப்டரின் எஞ்சிய பகுதிகள் இன்னும் அங்கேயே கிடக்கின்றன. நாம் இந்தியப்பகுதியில் எடுத்த புகைப்பட சுருள்களையும், டிஜிட்டல் கேமராவின் மெமெரி சிப்பையும் இங்கு விட்டு செல்லலாம். சீனர்கள் கையில் இவை கிடைக்கமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு. வரும் போது இவற்றை திரும்ப வாங்கிக் கொள்ளலாம். எங்களில் பலரிடம் ஒரே memory chip இருந்ததால் அவ்வாறு செய்யமுடியவில்லை, முடிந்தால் தாங்கள் இரண்டு சிப் எடுத்துச் செல்லவும். அடுத்த நாள் காலை 4 மக்கே கிளம்ப வேண்டும் என்பதால் சீக்கிரம் தூங்கச் சென்றோம்.
ஓம் பர்வதம் எங்களுக்கு கிடைத்த தரிசனம்(பனிக்காலம் அல்ல என்பதால் தெளிவாக இல்லை பிரணவம்)


மலைகள் தான் எத்தனை முகங்களை காட்டியது இப்பயணத்தில், சில இடங்களில் மொட்டையாக , சில இடங்களில் மரங்கள் அடர்ந்து, பச்சை பசேல் என்று, பனி மூடி, திரி சூலம், ஓம், நாகம், சிவப்பு றத்தில், ஆனால் வழியெங்கும் நிலச்சரிவுகளின் வடுக்கள் காணக்கிடைக்கின்றன.இந்த எட்டாவது நாள் மலைச்சிகரங்களின் நாள்.
நபிதாங்கின் மூன்றாவது சிகரம் திரிசூல பர்வதம்
(முச்சிகரங்கள் சிவன் பார்வதி கணேசர் என்பது ஐதீகம்)

****************************

9ம் நாள் நாபிதாங்கிலிருந்து லிபு கணவாய் நடைபயணம்( 9 கி.மீ)ஒரு குழு திபெத்துக்குள் செல்லும் போது சரியாக இன்னொரு குழு தரிசனம் முடித்து வெளியே வரும் வகையில் அட்டவனை அமைக்கப்பட்டுள்ளது, லிபு கணவாயில் பிராண வாயு குறைவு என்பதால் அதிக நேரம் அங்கு தங்கவும் முடியாது, பனிப் பொழிவு அதிகமாக இருக்கலாம். எனவே காலை 7 மணியிலிருந்து 9 மணிக்குள் நாம் லிபு கணவாயை கடக்க வேண்டும். எனவே அதிகாலை 4 மணிக்கே புறப்பட்டோம். காலையில் நல்ல குளிர் நான் நான்கு அடுக்குகள் ஸ்வெட்டர் அந்திருந்தும் குளிர் தெரிந்தது. இன்றைய தினம் கைகளுக்கு கையுறை, கால்களுக்கு கம்பளி சாக்ஸ் முதலியன மிகவும் அவசியம், கை வசம் பச்சை கற்பூரம் இருக்கட்டும். நாபிதாங்கிலிருந்து ஒரே ஏற்றம், வழியிலே பனியிலே நடந்து செல்ல வேண்டி இருந்தது. சுமார் 7 ம அளவில் லிபு கணவாயை ( 5334 மீ உயரம்) அடைந்தோம்.


இந்தியப்பகுதியின் உயரமான இடம் இதுவே. அந்த கருணா மூர்த்தியின் கருணையால் žதோஷணம் மிகவும் ரம்மியமாக இருந்தது. சூரியன் நன்றாக பிரகாசித்தான். žனப்பகுதியிலிருந்து வர வேண்டிய பேருந்தில் ஏதோ கோளாறு காரணமாக அவர்கள் கால தாமதமாக வந்தனர், எங்கள் குழுவினர் எனவே லிபு கணவாயில் சுமார் அரை ம நேரம் காக்க வேண்டி வந்தது. ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே காத்திருந்தோம். அந்த குழுவினர் (12 வது குழு) வந்ததும் ITBP அதிகாரிகள் žன அதிகாரிகளிடம் எங்களை ஒப்படைத்துவிட்டு வந்த குழுவினரை அழைத்து சென்றனர். போர்ட்டரும், குதிரைக்காரரும் விடைபெற்றனர்.நபிதாங் செல்லும் பாதை

இவ்வாறு ஆலந்தான் உகந்து அமுது செய்த உம்பர் கோனின் அருளினால் முதல் சோதனையில் எந்த துன்பமும் இல்லாமல் சுகமாக கடந்தோம் இனி வருகின்ற நாட்களில் இவ்வாறே அருள வேண்டும் என்று திங்கள் தங்கிய சடையுடையானை வேண்டிக்கொண்டோம். நாபிதாங்கிலிருந்து கிளம்பிய அன்றே லிபு கணவாயைக் கடந்து தக்லகோட் நகரத்தை அடைகின்றோம்.
மிகவும் கடினமான லிபு கணவாயில் வரும் குழுவிற்காக காத்திருக்கும்
ஆசிரியர் மற்றும் தபஸ்வி அவர்கள்
இந்த ஒன்பதாவது நாள் மலை முகட்டின் நாள். இந்தியப்பகுதியில் செல்லும் பயணம் நிறைவடைந்த நாள். அடுத்த பதிவில் இருந்து சீனப்பகுதியின் பயணத்தைப் பற்றி காணலாம்.

No comments: