Sunday, January 26, 2020

வெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 16

மானசரோவர் புனித நீராடல்

மானசரோவரின் கரையில் இரவு தங்கினோம். அதிகாலையில் இருள் பிரியாத நிலையில் எழுந்து சில அன்பர்கள் மானசரோவரில்  இறங்கி குளிக்கும் பாக்கியம் கிட்டியது. சூரிய வெளிச்சம் வந்த பின் எழுந்தவர்களுக்கு அப்பாக்கியம் கிட்டவில்லை. தங்கும் விடுதிகளுக்கு அருகில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்திருந்தனர். மேலும் எங்களை அழைத்து சென்ற சேர்ப்பாக்களும் யாராவது ஏரியில் இறங்கி குளித்தால் எங்களது அனுமதி இரத்தாக்கும் எனவே எங்களுடன் ஒத்துழையுங்கள், என்று வாளிகளில் மானசரோவர் தீர்த்தத்தை முகர்ந்து கொடுத்தனர்பெருபான்மையோர் கரையில் நின்று அத்தீர்த்தத்தில் குளித்தோம். ஒரு வருடம் மே மாதம் யாத்திரை செய்த போது ஏரி முழுவதும் உறைந்திருந்தது. அவ்வருடம் எனவே பனியை உடைத்து தண்ணீரை இவ்வாறு வாளியில் முகர்ந்து குளித்தோம். இவ்வருடமும் அதே போலத்தான் குளிக்க முடிந்தது.
மானசரோவர் கரையிலிருந்து திருக்கயிலை நாதர்  தரிசனம்
புனித நீராடல் 
அபிஷேகம் 

அடுத்து அவரவர்கள் கொண்டு வந்திருந்த மூர்த்திகளை மானசரோவரின் கரையில் வைத்துஎதிரே இருக்கின்ற திருக்கயிலை நாதருக்கு அபிஷேகம்பூசைகள் செய்வது போல பாவித்து அபிடேகம் செய்து பூசனைகள் செய்தோம்நன்றாக மழை பெய்து அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று மலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரை இறைஞ்சினோம்


 வில்வ தளங்களால் அர்ச்சனை
அடுத்து  சுற்றுலா நிறுவனத்தினரின் சார்பில் நடைபெற்ற யாகத்தில் பங்கேற்றோம்பௌர்ணமியன்று நடைபெற்றிருக்க வேண்டிய யாகம் தாமதமாக வந்ததினால் மூன்று நாள் கழித்து நடைபெற்றதுயாத்திரிகளில் ஒரு சிவாச்சாரியார் இருந்தார் அவரே யாகத்தை சிறப்பாக நடத்தினார்அனைவரும் பிரசாதம் பெற்றுக்கொண்டோம்.
மானசரோவர் கரையில் யாகம்


சியூ புத்த விகாரம்மானசரோவர் விடுதி

பிறகு மதிய உணவிற்குப்பின் டார்ச்சனுக்கு புறப்பட்டோம்இத்தடவை சியூ புத்த விகாரம் செல்ல முடியவில்லைடார்ச்சன் செல்லும் வழியிலும் ஐயனின் அருமையான வெள்ளிக் கவசம் போர்த்திய தரிசனம் கிடைத்ததுஎந்த வித சிரமமும் இல்லாமல் டார்ச்சன் வந்தடைந்தோம்இங்கும் சென்ற தடவை போல சோதனை இருக்கவில்லைஇங்கும் ஏமாற்றம் தொடர்ந்தது அவர்கள் கூறியபடி தங்கும் விடுதியில் தங்க வைக்கவில்லை ஒரு மோசமான விடுதியில் தங்க வைத்தனர்.. ஐயனின் பல்வேறு கோலங்களை தரிசித்தோம்.


டார்ச்சனில் இருந்து திருக்கயிலாய தரிசனம் 


சரியாக உடல் பலப்படாததால் பலருக்கு உடல் நிலை சரியாக இல்லாமல் இருந்தது சேர்ப்பாக்கள் அனைவரது இரத்த அழுத்தத்தையும்உடலில் உள்ள பிராண வாயுவின் அளவையும் பார்த்துசரியாக உள்ளவர்களை மட்டுமே கிரி வலத்திற்கு அனுமதித்தனர்அடியேனுக்கு இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருந்ததால்  கிரி வலம் செய்யும் வாய்ப்பு இத்தடவை கிட்டவில்லைஎல்லாம் அவன் செயல்என்று மனதை தேற்றிக்கொண்டு அவரின் காலடியில் அமர்ந்திருந்தேம்குழுவினரில் பாதிக்கு மேற்பட்டவர்கள்  செல்ல முடியாமல் போனதுகிரி வலத்தை அனைவரும் முழுதாக முடித்தனரா என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே

Wednesday, January 22, 2020

வெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 15

ஐயனின் முதல் தரிசனம் 


மானசரோவரை நோக்கி செல்லும் வழியில் திருமுறைகளைக்  பாடிக்கொண்டே சென்றோம். இரு பக்கமும் இருந்த மலைகள் அனைத்து வெள்ளிப் போர்வை போர்த்த்க்கொண்டிருந்தன. ஜூன் மாதம் என்பதால் பனி முழுமையாக உருகாமல் இன்னும் இருந்ததே அதற்கு காரணம் அதனால் குளிரும் கடுமையாகவே இருந்தது. ஓட்டுனர் பொறுமையாக போக்குவரத்து ஏதும் இல்லா தார் சாலையில் வண்டியை ஒட்டிச் சென்றார். இவ்வாறாக பயணம் செய்து டோக்சன் (Tokchen) என்னும் இடத்தை அடைந்தோம். மானசரோவர் ஏரியின் கரையில் அமைந்துள்ள இவ்விடத்தில் தான் மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரை முதலில் தரிசிப்போம்.வழியெங்கும்  மஞ்சு கொஞ்சும் முகடுகள்
ஆனால் அடியோங்கள் சென்ற சமயம் ஐயனை மேகம் சூழ்ந்திருந்தது தரிசனம்  கிட்டவில்லைஅங்கிருந்த வரவேற்பு வளாகத்தில் சிறிது நேரம் தங்கி போற்றித் திருத்தாண்டகம் படித்தோம் மேகமூட்டம் விலகவில்லைசரி மானசரோவர் ஏரி வலத்தை துவக்கலாம் என்று வண்டியில் புறப்பட்டோம்சென்ற யாத்திரையின்(2014) போது இவ்விடத்தில்  பாதுகாப்பு கெடுபிடிகள் கடுமையாக இருந்ததுஅடியோங்கள் பயணம் செய்த வண்டியை இங்கே நிறுத்திவிட்டு சீன நிறுவனத்தின் வண்டியில் பயணம் செய்யக்கூறினர்இத்தடவை பாதுகாப்பு சோதனை ஏதும் இருக்கவில்லைமேலும் அடியோங்கள் வந்த வண்டியையே மேலே செல்ல அனுமதித்தனர்.
அடியோங்களை அழைத்துச்சென்ற  சேர்ப்பா குழுவினர்


இடையில் மதிய உணவு 


டோக்சன் வரவேற்பு வளாகம்


திருக்கயிலாயம் மானசரோவர்   வரைபடம்ஐயனின் அற்புத முதல் தரிசனம் 


திருக்கயிலாயமும், மானசரோவரும் இணைந்த கௌரி-சங்கர் தரிசனம் 


அரிய வகை பொன் வாத்துக்கள் 


மானசரோவர் ஏரி மானசரோவரின் கிரி வலத்தை துவக்கினோம்சூரிய ஒளி பட்டு அலைகள் வைரம் போல் ஜொலிக்கும்  அழகையும்பல் வேறு விதமான பறவைகள் மானசரோவரில் மேல் பறக்கும் அழகையும்நீலம்கருநீலம்பச்சை என்று மாறி பல வர்ணத்தில் காட்சியளிக்கும் மானசரோவரின் எழிலையும் இரசித்துக்கொண்டே ஐயனின் ஐந்தெழுத்தை ஓதிக்கொண்டே ஏரி வலத்தைத் தொடர்ந்தோம்ஏரியை சுற்றிலும் கம்பி வேலி அமைத்திருந்ததை கவனித்தோம்சென்ற வருடத்தில்(2018) இருந்து யாத்திரிகள் யாரும் மானசரோவில் இறங்கி நீராடக்கூடாது என்ற கட்டுப்பாட்டை சீன அரசு புதிதாக கொண்டு வந்ததுஅதற்காக இவ்வாறு ஏரியைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்துள்ளனர்
ஏரி வலம் தொடர்ந்த போது மேகங்கள் விலகி ஐயனின் தரிசனம் கிட்டத்தொடங்கியதுஅனைவரும் ஆனந்தத்துடன் திருக்கயிலை நாதரை தரிசனம் செய்தோம்மானசரோவ்ரின் இக்கரையில் நின்று தரிசனம் செய்வது என்பது கௌரிசங்கர் தரிசனம் என்றழைக்கப்படுகின்றதுகயிலை மலை சிவமாகவும்மானசரோவர் சக்தியாகவும் பக்தர்களுக்கு அம்மையப்பர் வழங்கும் சிவசக்தி தரிசனம் இதுமிகவும் மகிழ்ச்சியுடன் உமையம்மைக்குரிய அபிராமி அந்தாதிப் பாடல்கள்லலிதா சகஸ்ரநாமம் ஆகியவற்றையும் துதித்து சிவ சக்தியை வணங்கினோம்.  முழுவதுமே பனி நிறைந்திருந்திதால் ஐயன் இத்தடவை வெள்ளிக் கவசத்தில் அடியோங்களுக்கு அருட்காட்சி வழங்கியது போல உணர்ந்து மகிழ்ந்தோம்               திருக்கயிலாய மலைத்தொடர்  முழுவதும் பனிப்போர்வையில்

குர்லா மாந்தாதா மலைத் தொடர்


( மானசரோவர் ஏரியும், இராட்சத ஏரியும் திருக்கயிலாய மலைத்தொடர் மற்றும் குர்லா மாந்தாதா மலைத் தொடர்களுக்கு இடையே அமைந்துள்ளன.  )
இடையில் வண்டி மாட்டிக்கொண்டது

அந்தி சாயும் நேரம்


இரவில் மானசரோவரின் அழகு


ஏரி வலப்பாதை முழுவதுமாக தார் சாலை அல்ல என்பதால் சென்று கொண்டிருக்கும் போது ஓரிடத்தில் வண்டியின்  பின் சக்கரம் மணலில் புதைந்து விட்டதுஓட்டுனர் வண்டியை வெளியே எடுக்க பெரும் முயற்சி செய்தார் ஆனால் எதுவும் பலிக்கவில்லைஅடியோங்கள் வண்டிக்கு வெளியே நின்று ஐயனை அருமையாக தரிசனம் செய்து கொண்டு  கோளறு பதிகம் பாடி வந்த கோளாறு நீங்க வேண்டும் என்று திருக்கயிலை நாதரை பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம்டோக்சனில் தரிசனம் தராததால் இவ்வாறு வண்டியை சிக்கச்செய்து நெடு நேரம் அவரை அடியோங்கள் தரிசிக்க ஐயன் செய்த திருவிளையாடல் போல தோன்றியதுசுமார் ஒரு மணி நேரம் கழித்து ஒரு பெரிய வண்டி அப்பக்கம் வந்தது அவ்வண்டியில் கயிறு கட்டி இழுத்து ஒரு வழியாக வண்டியை வெளியே இழுத்தனர்பின்னர் ஏரி வலம் தொடர்ந்ததுமாலை நேரம் ஆகிவிட்டதுஅந்தி சாயும் நேரத்தில்  ஐயனின் அழகை வண்டியில் இருந்தே தரிசனம் செய்தோம்மானசரோவரில் கரையில் அமைந்துள்ள தங்கும் விடுதியை அடைந்த போது இருட்டிவிட்டது குளிரும் கடுமையாக இருந்தது எனவே சீயூ புத்தவிகாரத்தை சென்று பார்க்க சமயம் கிட்டவில்லைஅனைவரும் உறங்கச்சென்று விட்டோம்மானசரோவரில் மறு நாள் நீராட முடிந்ததாஎன்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.