Monday, December 02, 2019

வெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 8

டோலேஸ்வரம் தரிசனம்

ஆலயம் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டுள்ளது

காத்மாண்டுவில் தங்கிய நான்காம் நாள் டோலேஸ்வரம் மற்றும் படான் அரண்மனை சதுக்கம் செல்ல திட்டமிட்டிருந்தோம். அதன் பிரகாரம் காத்மாண்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள டோலேஸ்வர் சிவாலயத்திற்கு முதலில் பயணித்தோம். காத்மாண்டி நகருக்கு வெளியே ஒரு கிராமம் போல இருந்தது. ஆலயத்திற்கு வரவேற்பு வளைவு கட்டுவதற்கான அஸ்திவாரப்பணிகள் நடந்துகொண்டிருந்தன. கூட்டம் இருக்கவில்லை.  இவ்வலயத்திற்கு கேதார்நாத்துடன் தொடர்பு  உள்ளது என்பது இவர்கள் நம்பிக்கை. பீமனிடமிருந்து தப்பிக்க சிவபெருமான் காளை ரூபத்தில் பூமிக்குள் புகுந்த போது அவரின் உடல் பகுதிகள் இந்தியாவில் ஐந்து தலங்களில் வெளியே வந்தன அவை பஞ்சகேதாரங்கள் என்றழைக்கப்பட்டு வணங்கப்படுகின்றன. அப்போது ஐயனின் திருமுகம் வெளிப்பட்ட இடம் நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் ஆலயம் என்றே இதுவரை படித்திருக்கின்றேன். இவ்வாலயத்திற்கு வந்த போது திருமுகம் வெளிப்பட்ட தலம் பசுபதிநாத் அல்ல பக்தபூரில் அமைந்துள்ள  இவ்வாலயம் என்பது இவர்கள் நம்பிக்கை.



டோலேஸ்வரர்

பெரிய கல் நந்தி


திரிசூலம், கமண்டலம், வாசுகி நாகம்


உடுக்கை, சிமிட்டி

அதற்கு சான்றாக இவர்கள் கூறுவது ஐயனின் திருமேனிமற்ற கேதாரங்களில் உள்ளது போலவே இத்தலத்தில் ஐயன் மலையின் கொடுமுடியாக அருள் பாலிக்கின்றார்மேலும் துங்கநாத்தில் எவ்வாறு சாய்ந்த கோலத்தில் அருள் பாலிக்கின்றாரோ அதே போல இடது பக்கம் ஒய்யாரமாக  சாய்ந்த கோலத்தில்  இத்தால்த்தில் அருள் பாலிக்கின்றார்தற்போது பழைய எளிமையாக இருந்த பழைய  ஆலய கட்டிடத்தை இடித்து விட்டு,  நேவாரி பாணியில் இரண்டு பகோடா அமைப்பில்  புதிய ஆலயம் கட்டிக்கொண்டிருக்கின்றனர்.  மிகவும் அமைதியாக உள்ளது ஆலயம்எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமர்ந்து ஐயனை தரிசித்துக்கொண்டிருக்கலாம்பசுபதிநாதர் ஆலயம் போலவே கருவறைக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை மற்றும் உள் பிரகாரத்தில் சுற்றி வந்து ஐயனை நான்கு திசைகளில் இருந்தும் தரிச்சிக்கலாம்.






பசுபதி நாதர்




ஆலயத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளி






கிராம சந்தை

வெளிப் பிரகாரத்தில் பெரிய உலோக நந்தியும்சிறு கல் நந்தியும் ஐயனை நோக்கியவாறு அருள் பாலிக்கின்றனர்மேலும் பிரம்மாண்ட திரிசூலம்உடுக்கைவாசுகி நாகம்சிமிட்டி,  கமண்டலம்,  மற்றும் ஆஞ்சநேயர் சன்னதி அமைந்துள்ளதுஅம்மன் சன்னதியும்ஹோமகுண்டமும் ஆலயத்திற்கு பின் புறம் அமைந்துள்ளனஅருகில் ஒரு ஆசிரமம் உள்ளதுஅதில் நான்கு முக சிவலிங்க சன்னதி  மற்றும் இந்தியப்பாணியில் ஒரு சிறு சன்னதியில் ஹனுமன்துர்க்கைகட்டு சியாம்ஜி அருள் பாலிக்கின்றனர்சற்று நேரம் அமர்ந்து அருகில் உள்ள பதான் அரண்மனை சதுக்கத்தை தரிசிக்க சென்றோம்.

                                                                                                                                  யாத்திரைத் தொடரும் . . . . .