Showing posts with label கோரா. Show all posts
Showing posts with label கோரா. Show all posts

Wednesday, August 14, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -40 (திருக்கயிலாய யாத்திரை-2012)

மூன்றாம் நாள் கிரி வலம் 

மூன்றாள் நாள் கிரி வலத்தை துவக்குகின்றோம்

கிரி வலத்தின் போது அமீத் அஹர்வால்

                                                              கிரி வலத்தின் போது நிஷ்டா பாண்டே

சீரான பாதை  வெயிலாகவும் இருந்தது 

ஜாங் ஜெர்பூ ஆற்றின் இரு கரையிலும் வாகனம் செல்லும் வகையில்
 பாதைகள் தயார் ஆகிக் கொண்டுள்ளன


கிரிவலப்பாதையிலிருந்து குர்லா மாந்தாதா  மலைச் சிகரம்






பிரார்த்தனை ஸ்தலம்



எங்கள் குழுவினர்



கருட தரிசனம் 

 சிலர் குதிரையில் பயணம் செய்தனர்

 அஜய் கௌசிக்


திபெத்திய குழந்தை - தாய்


கோரா வரும் திபெத்தியப் பெண்

 முதலில் மண்டியிடுகிறார்


பின்னர் சாஷ்டாங்க நமஸ்காரம்



இறுதியில் அஷ்டாங்க நமஸ்காரம் 

இப்படியே  முழு கிரி வலப் பாதையும் அடி விழுந்து கும்பிட்டு கோராவை முடிக்கின்றனர்.


10ம் நாள் கிரி வலம் முடித்து சாகா வரை பேருந்து  பயணம் (580 கி.மீ)

மறு நாள் காலை எப்போதும் போல் எழுந்து காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு கிரி வலத்தை முடிக்க கிளம்பியபோதுதான் தெரிந்தது  வலது முழங்காலை நகர்த்த முடியவில்லை என்று, எப்படியாவது சென்று விடலாம் என்று சிறிது தூரம் நடக்க முயற்சி செய்தேன் முடியவில்லை. வேறு வழியில்லை குதிரையில்தான் செல்ல முடியும் என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டு நின்ற போது இரு குதிரைக்காரர்கள் கண்ணில் பட்டனர். ட்ராங்டோ வருகின்றீர்களா? என்று கேட்க 100 யுவான்களுக்கு வர சம்மதித்தனர். இவ்வாறாக கிரி வலத்தின் மூன்றாம் நாளும் குதிரையில் பயணம் செய்யும்படி ஆனது. வரும் வழியில்  திவ்யமாக மானசரோவர் மற்றும் குர்லா மாந்தாதா மலைச் சிகரங்களின் தரிசனம் கிட்டியது. மூன்று நாள் கிரி வலத்திலும் இன்றைய தினம்தான் மிகவும் சுலபமானது. பாதையும் சமவெளியில் உள்ளது, ஒரி சிறிதளவுதான் ஏற்ற இறக்கம், நன்றாக வெயில் அடித்தது. யாருக்கும் எந்தவித சிரமமும் இருக்கவில்லை.

கருப்புக் கண்ணாடி அணியாமல் பனிப்பகுதியில்  யாத்திரை செய்த எங்கள் குழுவைச் சார்ந்த திரு.முகர்ஜி அவர்களுக்கு கண்கள் சிவந்து விட்டது கன்னமெல்லாம் கன்னிப் போய் ரோஜா நிறம் ஆகிவிட்டது. எங்களிடம் இருந்த கண் மருந்து போட்டோம். ஆகவே அவசியம் புறஊதா கதிர்களை தடுக்கக்கூடிய கருப்புக் கண்ணாடி எடுத்துச்சென்று பயன்படுத்துங்கள்.  பின்னர் அனைவரும் மதியம் சுமார் 12 மணியளவில் ட்ருங்டோ (Trungto) வந்து சேர்ந்தோம். எந்த குறையும் இல்லாமல் அருமையான தரிசனம், மற்றும் கிரி வலத்தை  முடிக்க அருள் புரிந்ததற்காக முக்கண் முதல்வருக்கும், அன்னை மலை மகளுக்கும் நன்றி கூறினோம்.   பின்னர் எங்களுக்காக அங்குக்  காத்துக்கொண்டிருந்த பேருந்தில் ஏறி டார்ச்சன் வந்தடைந்தோம்.






Monday, September 12, 2011

திருக்கயிலாய யாத்திரை 2011 -7

அம்பலத்தில் ஆனந்த தாண்டவம் ஆடும் ஐயனின் தரிசனம் காண புறபட்ட ஒன்பதாம் நாள் (15-05-2011) யாத்திரிகள் அம்மையப்பர் நித்ய வாசம் செய்யும் திருக்கயிலை மலையின் முழு தரிசனம் பெற்றனர் மற்றும் கிரிவலமும் செய்தனர்.

டார்ச்சன் முகாமில் இருந்து தெற்கு முகத்தின் மேல் பகுதியும், கிழக்கு முகத்தின் முன் பகுதியும் தரிசனம் செய்கின்றனர். பின்னர் யமத்துவாரம் வரை வண்டியில் பயணம் செய்து அங்கிருந்து ஐயனின் தெற்கு முகத்தின் முழு தரிசனம், கணேசர் தரிசனம் செய்து. யமத்துவாரத்தில் நுழைந்து யமபயம் தவிர்த்த, ஐயனின் தேவபூமியில் நடந்து சென்று பின் மேற்கு முக தரிசனம் செய்து பின் வடக்கு முகத்தின் எதிரில் உள்ள முகாமிற்கு சென்று தங்கினர். இவ்வாறு இன்றைய தினம் ஐயனின் நான்கு முகங்களையும் தரிசனம் செய்தனர்.






யமதுவாரம்




இதுவரை பூவுலகில் இருந்த நாம் இதற்குள் நுழைந்தபின் ஐயனது சிவலோத்திற்குள் நுழைகின்றோம் என்பது ஐதீகம். யமத்துவாரத்திற்குள் நுழைந்து சிவபெருமானை தரிசனம் செய்பவர்களுக்கு யமபயம் கிடையாது. அகால மரணமும் கிடையாது. ஐயனால தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த பாக்கியம் கிட்டும். இங்கிருந்துதான் கைலாய கிரிவலம் தொடங்குகின்றது. மொத்தம் 52 கி.மீ தூரம் மூன்று நாட்களில் யாத்திரிகள் கிரி வலத்தை முடிக்கின்றனர்.






யமதுவாரத்தில் இருந்து அகோர முக தரிசனம்






புராணங்களின் படி இம்முகம் தொங்கிய தாடி உடையதாய் வெளிப்பட்ட பற்களுடையதாகி, கண்டோர்க்கு அச்சமாய் கரிய நிறமாகி ( அல்லது நீலநிறமாகி) வயதான முகம் போல் வலத்தோளில் தெற்கு நோக்கி இருக்கும் முகம். இம்முகம் தனி சிவனாரான தக்ஷிணாமுர்த்தியை குறிக்கின்றது. பஞ்ச பூதங்களில் இம்முகம் அக்னியை குறிக்கின்றது. ஐந்தொழிலிலே அழித்தல் தொழிலை (சம்ஹார காரண முகம்) குறிக்கின்றது. ஐந்தெழுத்தில் 'சி'. ஐயன் அகோர ருத்ர ரூபம். அம்மை இச்சா சக்தி. இம்முகம் நீலக்கடலைப் போன்ற நீல ஒளி விடும் நீலக்கல்லாக ஒளிர்கின்றது என்பது ஐதீகம். இந்தியாவை நோக்கி உள்ள முகம் இதுதான். நமக்கு முதலில் தரிசனம் தரும் முகம். ஜடா முடியும் திரி நேத்ரங்களும் உள்ள முகம். அகோர முகம் மனக்குழப்பங்கள் உடனடியாக தீரும், எல்லா விதமான நோய்கள் போக்கும். அறிவுத்திறனும் ஞாபகத்திறமையும் அதிகரிக்கும்.



ஐயனுக்கு வலப்பக்கத்தில் உள்ள சிறு குன்றுதான் கணேசர். ஐயனின் தெற்கு முகத்தை தரிசனம் செய்யும் போது முதலில் அம்மையப்பரை கிரிவலம்செய்த கணேசரையும் தரிசனம் செய்கின்றோம்.சொர்ணமயமான ஊஞ்சலில் கமனீயமாய் அமர்ந்திருக்கும் பால் வெண்ணிறணிந்த பவள நிற எம்பெருமானையும், பச்சை நிற அம்பாளையும் எப்போதும் தமது மூச்சுக்காற்றால் குளிர்வித்துக் கொண்டு இருப்பவர் நந்தியெம்பெருமான். அவரையும் இம்முகத்திற்கு எதிரே மலை ரூபமாக தரிசனம் செய்கின்றோம். அசுர பலம் கொண்ட இராவணன் கயிறு கட்டி கைலாய மலையை இழுத்த வடு இந்த முகத்தில் நமக்கு காணக்கிடைக்கின்றது.









சத்யோஜாத முகம்








சத்யோஜாதம் என்று அழைக்கப்படும் இம்முகம் புராணங்களின் படி அரசம் பூ போல் வெண்மை நிறமாய் பிடரியில் மேற்கு நோக்கி இருக்கும் முகம். பஞ்ச பூதங்களில் பூமியை குறிக்கின்றது , ஐந்தொழிலில் படைத்தல் தொழிலைக் குறிக்கின்றது (பிரம்ம ஸ்ருஷ்டி காரண முகம்). ஐந்தெழுத்தில் ''. இம்முகம் செந்றம் கொண்ட மாக்கக் கல்லாக ஒளிர்கின்றது என்பது ஐதீகம். இம்மும் அடிமுடி காணவவொண்ணா அண்ணாமலையாக, எவரும் அண்ணாத ( அண்டாத அண்டமுடியாத) அக்னி மலையாக, நெருப்புத்தூணாக, இயன் முதன் முதலில் திருஉருக்கொண்ட ஸ்தாணு லிங்க உருவாக வராக உருவில் திருமாலையும் தன்னோடு கொண்ட விஷ்ணு பாகத்தை குறிக்கின்ரது. கைலாயத்தில் மற்ற முகங்கள் குவிந்து உள்ளன ஆனால் இம்முகம் மட்டும் குழியாக உள் வாங்கி இருக்கின்றது. அனேகமாக பெரும்பாலான திருக்கோவில்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் போது கிழக்கு முக மண்டலமாகவோ அல்லது மேற்கு முக மண்டலமாகவோதான் பிரதிஷ்டை செய்வர். திருமயிலையிலே கபாலீஸ்வரர் சத்யோஜாத மூர்த்தியாக மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.


உறைந்த லா சூ ஆறு





இந்த ஆற்றின் கரையோரமாகவே முதல் நாள் கிரிவலம் செய்கின்றனர் யாத்திரிகள் இந்த ஆறே சிந்து நதியாக பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பாய்கின்றது.






மேற்கு முகத்தின் பல்வேறு தோற்றங்கள்

















யாத்திரை தொடரும்…