Showing posts with label சியூ கோம்பா. Show all posts
Showing posts with label சியூ கோம்பா. Show all posts

Wednesday, February 25, 2015

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் - 14

மானசரோவர் கரையில் ஹோமம் 


அதிகாலை நேரத்தில் திருக்கயிலை நாதர் தரிசனம் 


இரவில் சந்திர ஓளியில் மானசரோவரின் அழகையும் நிர்மலமான வானத்தில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களையும் கண்டு களித்தோம். அதிகாலையில் அருணோதய காலத்தில்  திருக்கயிலாயத்தின் அழகையும்  மானசரோவரின் அழகையும் கண்டு களித்தோம்.


சூரிய உதயத்தின் போது மானசரோவரின் அழகு 



 உதய கால வர்ண ஜாலம் 


இன்றைய தினம் மானசரோவரின் கரையில் ஒரு முக்கியமான கடமையை முடித்தோம்.  சிவசக்திக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக யாகங்கள் செய்தோம். முதலில் அனைவரும் மானசரோவரில் புனித நீராடிவிட்டு, தங்கள் தங்கள் பூஜா மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்து அலங்காரம் முடித்து ஹோமகுண்டத்தின் அருகில் அனைவரும் அமர்ந்தோம். 


பூஜா மூர்த்தங்கள் 



மேகம் நிறைந்த நிலையில் மானசரோவரின் அழகு

யாகத்தை ஆசீர்வதிக்கும் திருக்கயிலைநாதர்



யாகம் துவக்கம் 

கணபதி  ஹோமம், மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம், பஞ்சாட்சர ஹோமம், துர்கா ஹோமம் என்று ஹோமங்கள் செய்து சிவசக்திக்கு நன்றி செலுத்தினோம். ஒரு குழுவினர்  வேதம் ஓதினர், ஒரு குழுவினர் திருமுறைகள் இசைத்தனர். ஒரு பக்கம்  ஓம் நமசிவாய மந்திரம்   ஓதுபவர்கள் என்று தெய்வீக சூழல் நிலவியது.  அனைத்து பக்தர்களும் கொண்டு வந்த யாக பொருட்களால் மிகவும் திருப்திகரமாக  யாகம் முடிவடைந்தது. 

 திருமுறைகள் இசைப்போர் 



ருத்ரம் மற்றும் சாம வேதம் ஓதும் குழுவினர் 



வலம் சுழித்து எழுந்த யாகத்தீ 

யாத்திரையின் போது எல்லா தேவைகளையும் கவனித்துக்கொண்ட சேர்ப்பாக்கள் 




 சியூ கோம்பாவின் அழகு

இத்தார்சாலை டார்ச்சன் வரை செல்கின்றது

மானசரோவரின் கரையில் ஒரு முக்கிய கடமையை திருப்திகரமாக முடித்தபின் பேருந்து மூலம் டார்ச்சன் புறப்பட்டு சென்றோம்.


திருமகன் முருகன் தேவியேல் உமையாள்
திருமகள் மருமகன் தாயாம்
மருமகன் மதனன் மாமனேல் இமவான்
மலையுடை யரையர்தம் பாவை
தருமலி வளனாம் சிவபுரன் தோழன் 
தனபதி சாட்டியக் குடியார்
இருமுகம் கழல் மூன்று ஏழுகைத்தலம் ஏழ்
இருக்கையில் இருந்த ஈசனுக்கே   

-கருவூர் தேவர் விசைப்பா

                                                                                                                                              யாத்திரை தொடரும் . . . . . . . . .

Friday, June 14, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -26 (திருக்கயிலாய யாத்திரை-2012)

மானசரோவரின் அதிகாலை அழகு

அருணோதய காலத்தில் மானசரோவர் தடாகம்
(முழு நிலா இன்னும் மறையவில்லை)



                                              அதிகாலையில் பூபாளம் பாடும் பறவைகள்





சூரிய உதயத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்

அதிகாலை வேளை வர்ண ஜாலம்

நெருப்புப் பிழம்பாக தோன்றும் மேகம் 
(படத்தை பெரிதாக்கிப் பார்க்கவும்)


சூரிய கிரணங்களினால் பொன் மயமாக மின்னும் தடாகம் 

சூரிய நமஸ்காரம் செய்யும் அன்பர்


உதய காலத்தின் இன்னுமொரு அழகு

உச்சி சூரிய ஓளியில் மிளிரும் மானசரோவர்

காலை சூரிய ஒளியில் பொன் வண்ணமாய்
 சியூ கோம்பா


அந்தி சாயும் நேரத்தில் சியூ கோம்பா 

இது ஒரு பொன் மாலைப் பொழுது

அதிகாலை நேரத்தில் மானசரோவர் கரையில்
 கௌசிக் குடும்பத்தினர்


முந்தைய பதிவில் குளிர் நிலவின் கிரணங்களால் ஏற்படும் வர்ண ஜாலத்தைப் பார்த்தோம், இப்பதிவில் சூரியனால் ஏற்படும் மகேந்திர ஜாலத்தை காண்கின்றீர்கள்.சூரியன் உதிப்பதற்கு முன்னர் வரும் செக்கர் வான சிவப்பும், சூரியன் உதித்தவுடன் ஏற்படும் பொன் நிறத்தையும் காண்கின்றீர்கள். நிமிடத்திற்கு நிமிடம் மாறும் அழகுடையது மானசரோவர், அதுவும் தட்பவெட்ப நிலையைப் பொறுத்து அமையும். மேலும் காலை கிழக்கில் உதிக்கும் சூரியன் மாலை  சியூ கோம்பா அமைந்துள்ள சிறு குன்றின் பின்னே மறையும் அழகையும் காண்கின்றீர்கள். என்ன தங்களுக்கும் திருக்கயிலாய யாத்திரை செல்ல ஆவல் எழுகின்றதா? தங்கள் எண்ணம் ஈடேற சிவசக்தியை வேண்டிக் கொள்கிறேன்.     


*****************
திருஞான சம்பந்தர் தேவாரம்

திருக்கயிலாயம்

 அகத்தீஸ்வரர்


அண்ணாமலையார்

பாடல் எண் : 6
தாதார் கொன்றை தயங்குமுடியர் முயங்கு மடவாளைப்
போதார்பாக மாகவைத்த புனிதர் பனிமல்கும்
மூதாருலகின் முனிவருடனா யறநான் கருள்செய்த
காதார்குழையர் வேதத்திரளர் கயிலை மலையாரே.


பொருள் :


கயிலைமலை இறைவர், மகரந்தம் நிறைந்த கொன்றைமாலை விளங்கும் முடியினை உடையவர். தம்மைத் தழுவிய உமையம்மையை மென்மையான இடப்பாகமாக ஏற்றதூயவர். குளிர்ந்த இவ்வுலகின்கண் வயதால் முதிர்ந்த சனகர் முதலிய முனிவர்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும் அருளிச் செய்தவர். வலக்காதில் குழை அணிந்தவர். வேதவடிவாய் விளங்குபவர்.

தேவாரம் முழுவதையும் பொருளுடன் படிக்க இங்கு செல்க    http://thevaaram.org/

யாத்திரை தொடரும்....................