Saturday, February 01, 2020

வெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 17

கிரிவலம்

மறுநாள் இனிமையாக விடிந்தது, கிரி வலம் செல்லும் அன்பர்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து ஐயனை வலம் வந்து மற்ற முகங்களையும் தரிசிக்கும் ஆர்வத்தில் தயாராகி பேருந்துக்காக காத்திருந்தனர். கிரி வலத்தின் நடைப்பயணம் தற்போது யமத்துவாரத்திலிருந்துதான் துவங்குகின்றது. அது வரை பேருந்தில் செல்ல முடியும். அடியேனும் கிரி வலம் செல்லும் அன்பர்களுடன்  பேருந்தில் சென்றேன். யம துவாரத்தில் நுழைந்து தேவ பூமியில் சென்று அடி வீழ்ந்து ஐயனை வணங்கினேன். யம துவாரத்தைக் கடப்பவர்கள் யமபயத்தில் இருந்து விடுபடுவர் என்பது ஐதீகம்.


டார்ச்சனில் இருந்து நமக்கு திருக்கயிலை நாதரின் திருமுடி தரிசனம் மட்டுமே கிட்டும். இங்கு யமத்துவாரத்தில் இருந்து ஐயனின் அகோர முகத்தின் (தெற்கு முகம்) முழு தரிசனமும் கிட்டும். டோக்சனில் இருந்து பெற்றதும், மானசரோவர் கரையில் இருந்து பெற்றதும் தெற்குமுக தரிசனம் என்றாலும், யமதுவாரம் தெற்கு முகத்திற்கு அருகில் இருப்பதால் ஐயனின் அருகாமை தரிசனம் கிட்டும் கணேசரின் தரிசனத்தையும் அருமையாக பெறலாம். அடியேன் சென்ற சமயம் மேகம் மூடியிருந்ததால் முழு தரிசனம் கிட்டவில்லை.


அதிகாலையில் ஐயனின் தரிசனம்

மதிய வேளையில்


மேலும் திபெத்திய பௌத்தர்கள் வைகாசி பௌர்ணமியன்று மிகவும் உயரமான ஐந்து வர்ண கொடியை இங்கு ஏற்றுகின்றனர்சாகா தாவா என்றழைக்கப்படும் இந்த கொடி ஏற்றப்பட்டப்பின் அக்ககொடிக் கம்பத்திலிருந்து கூம்பு வடிவத்தில் பல அன்பர்கள் தங்கள் பிரார்த்தணை கொடிகளை கட்டுகின்றனர்புத்தர்களுக்கு திருக்கயிலாயம் அவர்களின் தெய்வம் எனவே அவர்கள் இவ்வாறு வழிபடுகின்றனர்அக்கொடி மரத்தையும் சுற்ரி வணங்கி விட்டு அடியேன் பேருந்தில் திரும்பி வந்தேன்  கிரி வலம் சென்ற அன்பர்கள் தங்கள் நடைப் பயணத்தை  துவக்கினர்.





டார்ச்சனில் தங்கியவர்கள்








*******************


கிரி வலம் சென்றவர்கள் பெற்ற காட்சிகள்



இனி கிரி வலம் சென்ற அன்பர்களின் அனுபவம்முதல் நாள் கிரி வலத்தின் போது யமதுவாரத்திற்கருகில் தெற்கு முகத்தின் தரிசனமும்பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்குப்பின் மேற்கு முகத்தின் தரிசனமும்அதற்குப்பின் மேற்கு முகம் மற்றும் வடக்கு முகம் இணைந்த தரிசனமும்அன்றைய கிரி வலத்தின் நிறைவாக வடக்கு முகத்தின் முழு தரிசனத்தையும் பெறுகின்றனர்அன்று டேராபுக் என்ற இடத்தில் தங்குகின்றனர்அத்தங்கும் விடுதிகள் வடக்கு முகத்திற்கு நேரெதிரே அமைந்துள்ளதுகுழுவினருக்கு வடக்கு முகத்தின் அருமையான தரிசனம் கிட்டியதுசிலர் மலையேறி வடக்கு முகத்தின் திருவடி வரை சென்று வந்தனர்



கிரிவலப்பாதை


மேற்கு முக தரிசனம் (சத்யோஜாதம்)

திரு.குமாரசாமி 


வடக்கு முக தரிசனம் ( வாமதேவம்)


கிரிவலம் சென்ற திரு.குமாரசாமி ஐயா தனது அனுபவத்தைப் பற்றி இவ்வாறு உரைக்கின்றார் “திருக்கயிலாயத்தில் அமர்நாத் தரிசனம்” . முதல்நாள் திருவலச்சுற்றில் எங்களுக்கு  காட்சி தந்த திருவருள் அதுவே எங்களுக்கு கிடைத்த பெரும் சிவப்பொருள்நிறையப்பேருக்கு  இது தெரிய வாய்ப்பில்லை எங்களோடு வந்தவர்கள் மட்டுமே அறிவர்ஐயனின் தரிசனம் அவர்களுக்கு அவ்வளவு அருமையாக இருந்துள்ளது.  ( அவரின் பல படங்கள் இப்பதிவில் இடம் பெற்றுள்ளன)





இனி டார்ச்சனில் இருந்த அன்பர்கள் ஐயனின் முன் அமர்ந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருந்தோம்நிமிடத்திற்கு நிமிடம் மாறும் ஐயனின் அழகை தரிசித்துக் கொண்டிருந்தோம்.  மனதில் ஒரு ஏக்கம் இருந்தது ஆனால் அவன் அருளால்தானே அவனை வணங்க முடியும்இறைவன் சித்தம் இதுதான் என்று மனதை தேற்றிக்கொண்டு கிரி வலம் சென்றவர்கள் அனைவரும் எச்சிரமும் இல்லாமல் கிரி வலத்தை முடிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்தோம்கிரிவலம்  எவ்வாறு நிறைவு பெற்றது  என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.