Wednesday, December 18, 2019

வெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 10

அரண்மனை சதுக்கத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு மண்பாண்ட(குயவர்) சதுக்கம் செல்லும் வழியில் பல்வேறு அங்காடிகள் உள்ளன. அருமையான கலைப் பொருட்கள், புத்த தாங்கா ஓவியங்கள், பித்தளை விக்கிரங்கள், முகமூடிகள், சிறிய மரச்சன்னல்கள், பல் வேறு நேபாள ஆடைகள் ஆகியவற்றை விற்கும் கடைகள் நிறைந்துள்ளன. கலைப்பொருட்களில் விருப்பமுள்ளவர்கள் வாங்கிச்செல்கின்றனர். அடுத்து மண்பாண்ட சதுக்கத்தை அடைந்தோம், இன்றும் மண் பானைகள் மற்றும் விளக்குகள் ஆகியவற்றை செய்கின்றனர். மேலை நாட்டினர் சக்கரத்தை சுற்றி மண்ணை குழைத்து வைத்து இவர்கள் பல்வேறு வடிவ பண்டங்கள் செய்வதி புகைப்படம், மற்றும் சலனப்படம் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு சன்மானமும் கொடுத்துவிட்டுச் செல்கின்றனர்



தங்கா படங்கள்





மண்பாண்ட சதுக்கம்

பானை செய்வதை விளக்கும் ஒரு முதியவர்





அடுத்து தௌமாதி சதுக்கம் சென்றோம் அங்கு ந்யாடபோலா  என்ர்றழைக்கப்படும் ஐந்து அடுக்குகள் கொண்ட நேபாளத்தின் உயரமான சித்தலக்ஷ்மியின் ஆலயம் அமைந்துள்ளதுஐந்து நிலை அடிவாரத்துடனும் ஐந்து நிலை பகோடாக்களுடனும் மிகவும் எழிலாக அமைந்துள்ளது இவ்வாலயம்இதன் அஸ்திவாரம் மிகவும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளதால் 1934, மற்றும் 2015  நிலநடுக்கங்களின்  
போது பல கட்டிடங்கள் சேதமடைந்த  போதிலும் மிகவும் உயரமான இவ்வாலயத்திற்கு எந்த சேதமும்  ஏற்படவில்லைநேபாளத்தில் பல ஆலயங்களில் படிகளில் ஐந்து நிலைகளில் பல உருவங்கள் இரு புறமும் அமைக்கப்பட்டுள்ளனஅதற்கான  இப்பயணத்தின் போது கிட்டியதுஇதை எங்களின் வழிகாட்டி விளக்கினார்இவ்வாலயத்தில் அமைந்துள்ள உருவங்கள் என்ன என்று காணலாமாகீழ் நிலையில் மல்லர்கள்அடுத்து யானைகள்அதற்கும் மேலே சிம்மங்கள்சிம்மத்திற்கு அடுத்து கருடன்கள் (லக்ஷ்மியின் வாகனம்), மேல் நிலையில் சிங்கினி மற்றும் பாகினி தேவதைகள் என்று அமைத்துள்ளனர்இதில் ஜெய்ப்பூர் மல்லர்கள்  சாதாரண மனிதனைவிட பத்து மடங்கு பலம் உள்ளவர்கள்யானைகள் அவர்களின் பலத்தை விட பத்து மடங்கு (அதாவது நூறு மடங்குபலம் கொண்டது இவ்வாறு சிங்கினிபாகினி பத்தாயிரம் மடங்கு பலம் வாய்ந்தவர்கள்ஆலயத்தில் உள்ள தெய்வம் இவர்களைப்போல பத்தாயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது என்று ஒரு கணக்கைக் கூறினார்.  சுமார் 100 படிகள் கொண்ட இவ்வாலயத்தின் மேல் ஏறி இறங்குவதோ ஒரு நல்ல உடற்பயிற்சியாகும்.  அம்மனை அனைவரும் தரிசிக்க முடியாது,  பூசாரிகள் மட்டும் உள்ளே சென்று பூசித்துவிட்டு வருகின்றனர்.  ஆலயத்தின் நான்கு மூலைகளிலும் விநாயகர் சன்னதிகள் அமைந்துள்ளனபைரவரின் உக்ரத்தை குறைக்க பார்வதி தேவியே சித்த லக்ஷ்மியாக இவ்வாலயத்தில் அமர்ந்ததாக ஐதீகம்ஐந்து நிலை பகோடாக்களைல் அருமையான மரவேலைப்படுகளை கண்டு களிக்கலாம்.


ஐந்தடுக்கு சித்தலக்ஷ்மி ஆலயம்

நேபாளத்தின் உயரமான ஆலயம்




மர வேலைப்பாடுகளை கண்டு களியுங்கள்




பைரவர் ஆலயம் 
2015 நிலநடுக்கத்தில் சேதமடைந்தது. புணருத்தாரணப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.




இவ்வாலத்திற்கு அருகில் மூன்று நிலை தங்கக் கவசம் பூண்ட பைரவரின் ஆலயம் அமைந்துள்ளது. 2015  நிலநடுக்கத்தில் இவ்வாலயம் சேதமடைந்ததால் தற்போது அவற்றை சீரமைக்க திருப்பணிகள் நடைபெற்று வருகின்றனஅடுத்து அரண்மனைக்கு உள்ளே அனுமதித்தனர்அரண்மனையின் உள்ளே உள்ள அரசர்கள் வழிபட்ட  தலேஜு  அம்மன் மற்றும் குமாரி ஆலயத்தையும்அரச மாதர் நீராடும் குளத்தையும் கண்டோம்அரண்மனையின் உள்ளே புகைப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.







அரசர் பூபேந்திர மல்லர்

கதவில் ஸ்ரீசக்கரம்


தங்க வாயில் 





ஷிலு மஹாதேவ் ஆலயம்











55  சாளர அரண்மனை




பாக்மதி ஆறு

விஷ்ணு பகவான் 


 அன்று மாலை மீண்டும் பசுபதி நாதர் ஆலயம் சென்று ஐயனின் ஆரத்தி தரிசனம் பெற்றோம்.  இவ்வாறு இன்றைய தினம் காலையில் டோலேஸ்வரம் மற்றும் பக்தபூர் தரிசித்தோம்மாலையில் சுற்றுலா நிறுவனத்தினர் ஒரு கூட்டத்திற்கு அழைத்தனர்அதில் ஏதாவது   நல்ல செய்தி கிடைத்ததாஎன்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.