Sunday, December 15, 2019

வெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 9

பக்தபூர் சதுக்கம்

டோலேஸ்வரர் தரிசனத்திற்குப் பின் பக்தபூர் நகர சதுக்கத்தை பார்வையிட சென்றோம். முன்னர் வந்த போது படான் அரண்மனை சதுக்கத்தை சுற்றிப் பார்த்தோம் என்பதால் இத்தடவை பக்தபூருக்கு வந்தோம், விசா சமயத்தில் கிடைக்காததால் இவ்வாய்ப்புக் கிட்டியது.   காத்மாண்டு பள்ளத்தாக்கில் மூன்று நகர சதுக்கங்கள் உள்ளன. அவையாவன. காத்மாண்டு, பக்தபூர் மற்றும் லலித்பூர் ஆகும்காத்மாண்டு நகரத்திலிருந்து 13 கி.மீ தூரத்தில் பக்தபூர் அமைந்துள்ளது.   யுனெஸ்கோ இச்சதுக்கத்தை உலக பாரம்பரிய தலமாக (World Heritage site) அறிவித்துள்ளது. மல்ல அரசர்கள் இந்நகரை முதலில் நிறுவினர். பின்னர் கூர்க்கா அரசர் பிரிதிவி நாராயண் ஷா போரில் மற்றவர்களை வென்று முழு காத்மாண்டு சமவெளியையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். 14 -16  நூற்றாண்டுகளில் காத்மாண்டுவிற்கு முன்னர் பக்தபூர் நேபாளத்தின் தலைநகரமாக இருந்துள்ளது. இந்நகரத்தில் பக்தபூர் அரண்மனை, தௌமதி சதுக்கம், தத்தாத்திரேயர் சதுக்கம், மண்பாண்ட சதுக்கம் என நான்கு சதுக்கங்கள் உள்ளன.  படான் சதுக்கத்தைப் போலவே இச்சதுக்கத்திலும் நுழைவுக்கட்டணம் வசூலிக்கின்றனர். நேபாள நாணயங்களை மட்டுமே செலுத்த வேண்டும். நேவாரி கலாச்சாரத்தை இந்நகரில் நாம் முழுமையாகக்  காண முடிகிறது.







பக்தபூர் வரைபடம்


பக்தபூர் நகராட்சி கட்டிடம்





படிக்கிணறு

உக்ர சண்டி

உக்ர பைரவர்

சிம்மம்





திருக்கேதாரம்


பூரி ஜெகந்நாதம்



அரண்மனை சதுக்கத்தின் முக்கிய கட்டிடம் 55 சாளர அரண்மனை ஆகும். 1427ல் புபேந்திர மல்லன் என்ற அரசன் இவ்வரண்மனையை கட்ட ஆரம்பித்தார் பின்னர் அவரது மகனான ரஞ்சித் மல்லன் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டதுமுழுவதும் செங்கல்லால் கட்டப்பட்ட அரண்மனையில் மர சாளரங்களில் உள்ள நுண்ணிய வேலைப்பாடு மிகவும் அற்புதம்அரண்மனையின் தங்கத்துவாரமும் அருமையான கலை அம்சம் கொண்டதுஅரண்மனைக்கு எதிரே ஒரு கம்பத்தில் மேல் கரங்கள் குவித்த நிலையில் உள்ள  பூபேந்திர மல்ல அரசரின் சிலை  அமைந்துள்ளதுஅடியோங்கள் சென்ற சமயம் அரண்மனைக்குள் அனுமதிக்கவில்லை பின்னர் வந்து தரிசித்துக்கொள்ளலாம் என்று மற்ற இடங்களை தரிசிக்கச்சென்றோம்.




துவாரகை

கலை அருங்காட்சியகம்
(2015  நிலநடுக்கத்தில் சேதமடைநதால் முட்டுக் கொடுத்திருக்கிறார்கள்)



தர்பார் சதுக்கத்தின் நுழைவாயிலில் ஒரு தண்ணீர் தொட்டி உள்ளதுஅடுத்து 18  கரங்களுடன் கூடிய உக்ர சண்டி மற்றும் உக்ர பைரவர் சிலைகளை கண்டு களிக்கலாம்அதற்கடுத்துள்ள கட்டிடத்தின் வாயிலை இரண்டு பிரம்மாண்டமான சிம்மங்கள் காவல் காக்கின்றன எனவே இது சிம்மத்துவாரம் என்றும் அழைக்கப்படுகின்றதுதற்போது இக்கட்டிடம் ஒரு தேசிய அருங்காட்சியகமாக (National Mueseum) உள்ளதுஇச்சதுக்கத்தில் பாரத தேசத்தின் நான்கு தலங்களான (சார் தாம்பத்ரிநாத்துவாரகைபூரி (கோபிநாத்), இராமேஸ்வரம் ஆகியவற்றைக் குறிக்கும் ஆலயங்கள் அமைந்துள்ளனகாத்மாண்டுவில் உள்ளது போல பசுபதிநாதரின் ஆலயமும் அமைந்துள்ளதுஒரு அரசனின் கனவில் வந்து இறைவன் ஆணையிட்டதால் இவ்வாலயம் கட்டப்பட்டதாக ஐதீகம்.  இக்கோவிலை சிறிய பசுபதி நாதர் ஆலயம் என்றழைக்கின்றனர்வத்சலா தேவி ஆலயம் என்றழைக்கபப்டும் துர்க்கையின் ஆலயமும் அருகே அமைந்துள்ளது. 2015ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல் வேறு ஆலங்கள் சேதமடைந்தன அவற்றுள் இவ்வாலயமும் ஒன்றுஎனவே பழைய ஆலயத்தை முழுவதுமாக இடித்துவிட்டு தற்போது புது ஆலயம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.  

No comments: