திருக்கயிலாய கிரிவலம் - முதல் நாள்
இவ்வழியில் முதலில் யாத்திரை மேற்கொண்ட மற்ற குழுக்கள் எல்லாம் டார்ச்சனில் இருந்து மானசரோவர் ஏரிவலம் மற்றும் யாகம் முடித்து மீண்டும் திருக்கயிலாய கிரிவலம் மேற்கொண்டு பின்னர் அங்கிருந்து அப்படியே டாங்போ திரும்பினார்கள். ஆனால் இவர்கள் முதலில் டார்ச்சனில் இருந்தே திருக்கயிலாய கிரி வலத்தை மேற்கொண்டார்களாம். முதல் நாள் கிரி வலத்தின் சில காட்சிகளை இப்பதிவில் காண்கின்றீர்கள்.
டார்ச்சனில் இருந்து திருக்கயிலாய தரிசனம்
டார்ச்சனில் இருந்து தெற்கு முகத்தின் உச்சியின் தரிசனம் மட்டுமே கிட்டுகின்றது அக்காட்சியை கான்கின்றிகள்.
யமத்துவாரம்
பொதுவாக யாத்திரிகள் யமதுவாரத்தில் நுழைந்து தெற்கு முகத்தையும் கணேசரையும், நந்தியெம்பெருமானையும் தரிசனம் செய்து ஐயனை அடிவீழ்ந்து வணங்கி பின்னர் கிரிவலத்தை துவக்குகின்றனர். இதற்கு மேல் உள்ள பகுதி தேவ பூமி என்பது ஐதீகம்.
கிரி வலப்பாதை
அடி விழுந்து வணங்கி கிரிவலம் செய்யும் திபெத்தியர்கள்
கிரி வலம் செய்யும் வழியில் ஒரு அருவி
இந்த முதல் நாள் கிரி வலத்தின் போது ஐயனின் அனைத்து முகங்களையும் தரிசனம் செய்யும் பாக்கியம் உள்ளது. டார்ச்சனில் இருந்து தெற்கு முகத்தின் உச்சி, யமதுவாரத்தில் இருந்து தெற்கு முகத்தின் முழு தரிசனம், பின்னர் மேற்கு முக தரிசனம், முதல் நாள் கிரி வலத்தின் நிறைவாக டேராபுக்கில் வடக்கு முகத்தின் திருவடியில் தங்குகின்றனர்.
மேற்கு முக தரிசனம்
வடக்கு முக நதி
வாமதேவம்
யாத்திரை தொடரும் . . . . . .