தாதோபாணியில் ஓரிரவு
நிலச்சரிவின் காரணமாக யாத்திரையின் இரண்டாம் நாள் நேபாளத்தின் எல்லை நகரமான தாதோபாணியில் ஓரிரவு தங்க வேண்டி வந்தது. வாருங்கள் ஐயம் நடத்திய ஒரு அற்புதத்தைப் பற்றி காணலாம்.
அடுக்குப் பாசனம்
பாரேபிஸே என்னும் இடத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டு பேருந்து மூலம் கொடாரிக்கு பேருந்து மூலம் புறப்பட்டோம்.வழியெங்கும் மலைகள் மரகதப் போர்வை போர்த்திக்கொண்டு பச்சை பசேல் என்று காட்சியளித்தன. எண்ணற்ற அருவிகள் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல இரு பக்கமும் வீழ்ந்து கொண்டிருந்தன.அதிகமாக பெய்த மழையின் காரணமாக பல இடங்களில் சேதம் ஏற்பட்டிருப்பதைக் காண முடிந்தது. ஒரு இடத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த தடுப்பு அணை அடித்துச்செல்லப்பட்டிருந்த்தது. வீடுகளில் மக்காச்சோளம் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. முடியும் இடங்களில் எல்லாம் பாசனம் செய்திருந்தனர். இவையெல்லாவற்றையும் இரசித்துக்கொண்டே தாதோபாணி என்னும் இடத்தை அடைந்தோம். நிலச்சரிவின் காரணமாக, எல்லையைக் கடந்து நைலம் சென்றிருக்க வேண்டிய நாங்கள் இங்கேயே தங்கினோம் இதனால் யாத்திரை ஒரு நாள் தள்ளிப்போனது.
வழியில் ஓர் அருவி
சீனப்பகுதியில் யாத்திரை அழைத்துச் சென்ற
நிறுவனத்தினர்
பொதுவாக தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா நிறுவனத்தினர் நேபாளத்தில் உள்ள ஒரு சுற்றுலா நிறுவனத்தினருடன் உடன்பாடு வைத்துக்கொள்கின்றனர். இந்நிறுவனத்தினரின் சேர்ப்பாக்களே திருக்கயிலாய யாத்திரை முழுவதும் யாத்திரிகளின் உணவு, உறையுள் மற்றும் அனைத்து தேவைகளையும் கவனித்துக் கொள்கின்றனர்.
தாதோபாணி கொடாரிக்கு அருகிலுள்ளது. இங்கு ஒரு சுடு தண்ணீர் ஊற்று உள்ளது எனவே இந்தப்பெயர் அங்கு Himalayan Eco Resorts என்ற தங்கும் விடுதியில் தங்கினோம்.
மேலே உயர்ந்த விடுதி
கோசி நதியின் கரையில் நெடிதுயர்ந்த இந்த விடுதி அமைந்துள்ளது. பாதாளத்தில் கோசி நதி பாய ஐந்தடுக்கு விடுதி வானத்தை தொடுவது போல உயர்வாக உள்ளது. அது வானத்திற்கும் பூமிக்கும் பாலம் அமைப்பது போல இருந்தது.
கீழே போடே கோசி நதி
விடுதியின் அறைகள்
இரவு தூங்கும் போது சல சல என்று நதி ஓதிக்கொண்டிருந்தது தாலாட்டு பாடுவது போல சுகமாக இருந்தது.
அருமையான புல்வெளி
பன்னிரு திருமுறைகளை பண்ணுடன் இசைத்து
இறைவனை மகிழ்வித்த குமாரசாமி ஐயா
மாலை நேர பிரார்த்தணை
எப்போதும் போல் மாலை ஆறுமணிக்கு சத்சங்கத்தில் பன்னிருதிருமுறை இசைக்க கூடிய போது மழை பெய்ய ஆரம்பித்தது. அனைவரும் குமார்சாமி அவர்கள் தலைமையில் மனமுருக
காவாய் கனகத்திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!
மழையை சிறிது நேரத்திற்கு நிறுத்த வேண்டும் என்று வேண்ட பவமாயம் காத்து என்னை ஆண்டு கொண்ட பரஞ்ஜோதி, அத்திக்கு அருளி அடியேனை ஆண்டு கொண்ட அரிய சிவம், அரை ஆடு நாகம் அசைத்த பிரான் சிவபெருமானும் சிறிது நேரத்திற்கு அப்படியே அருளினான், பின் எப்போதும் போல திருமுறைகள் இசைத்து முடித்து அனைவரும் தங்கள் அறைக்கு சென்ற பின் மழை மீண்டும் பெய்தது. இது ஐயன் நடத்திய ஒரு அற்புதம்.
காலை நேர பிரார்த்தணை
விடுதியின் படிக்கட்டுளில் குழுவினர்
பின்புலத்தில் கோசி நதி
நதியை இரசிப்பதற்காகவும், நதியில் கால் நணைக்க செல்லவும் நதிவரை படிகள் அமைத்துள்ளனர்.
சேர்ப்பாக்களுடன் அடியோங்கள்
எல்லையைக் கடக்க தயாராக அமர்ந்துள்ளோம்
குழந்தைகளுக்கு பரிசு பொருள் அளிக்கின்றனர்
வீதியில் விளையாடும் பள்ளிக் குழந்தைகள்
பின்னர் எப்பொழுதும் போல நட்பு பாலத்தில் வரிசையில் கடவு சீட்டுடன் நின்று எல்லையைக் கடந்தோம். பொதுவாக
சீன வழிகாட்டி வந்து அமெரிக்க டாலர்களில் சீன அரசிற்கு செலுத்தவேண்டிய கட்டணத்தை
கட்ட வேண்டும் பின்னர் நம்முடைய பைகள் மற்றும்
சமையல் பொருட்கள் எல்லாம் எல்லை தாண்டி சென்றபின்தான் நம்மை எல்லையை கடக்க
அனுமதிக்கின்றனர். சிறிது நேரத்தில் எந்த்வித சிரமமும் இல்லாமல் எல்லையைக் கடந்தோம். கடைகளில் சென்று பண மாற்றம் செய்ய வேண்டிய அவசியமேற்படவில்லை. சில பெண்கள் கையில் சீன யுவான்களுடனும்
கால்குலேட்டருடனும் சீன யுவான் வேண்டுமா? என்று சுற்றிக்கொண்டிருந்தனர். நாங்கள்
கொடாரியில் மாற்றியதை விட இவர்களிடம் அதிகமாகவே யுவான் கிட்டியது. எங்கள் குழுவில் சேர்ப்பாக்க்ளுடன் சேர்த்து 60 அன்பர்கள் இருந்தோம், சீன அரசு ஒரு பேருந்தில் 18
யாத்திரிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்று கட்டுப்பாடு விதித்ததால் மூன்று
பேருந்துகளில் பயணம் செய்தோம். இத்தடவை நேராக நைலாம் சென்று அங்கு Nylam Tourist Inn என்ற
தங்கும் விடுதியில் தங்கினோம்.
புனித யாத்திரை தொடரும் . . . . . . . . .