Thursday, October 24, 2019

வெள்ளிப் பனி மலையார் தரிசனம் -2

கயிலை மலையானே போற்றி போற்றி


மலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் திருவடி பணிந்து இப்பதிவை தொடங்குகிறேன். சென்ற தடவை திருக்கயிலை சென்ற போதே இனி மேல்  திருக்கயிலாய யாத்திரை வேண்டாம் அதற்கு ஆகின்ற செலவை வேறு எதாவது ஆன்மிக காரியங்களுக்கு அல்லது புத்தகங்கள் வெளியிடுவதற்கு பயன் படுத்திக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். அவ்வாறே சில வருடங்கள் சென்றன. இவ்வருடம் (2019) அடியேனுடைய நண்பர் ஒருவர் அழைத்து திருக்கயிலாயம் செல்லலாம் என்று நினைக்கிறேன் சிறிது வழிகாட்டவும் என்று கேட்டார் என்னையும் அறியாமல் ஒன்றும் கவலை வேண்டாம் அடியேனும் உடன் வருகிறேன் என்று   கூற வைத்தது அவர் அருள். முன்னர் அடியேனிடம் பல அன்பர்கள் நாங்களும்  திருக்கயிலாயம் வருகிறோம் என்று கூறியிருந்தார்கள். எனவே அவர்களை அழைத்து இவ்வருடம் ஜூன் மாதத்தில்  திருக்கயிலாயம் செல்ல திருவருள் கூடி வந்துள்ளது. தாங்களும் முடிந்தால் வந்து கலந்து கொள்ளுங்கள் என்று அழைக்க பத்து அன்பர்கள் அடியேனுடன்  சேர்ந்து கொண்டனர். சென்னை மயிலையில் ஒரு சுற்றுலா நிறுவத்தினரிடம் முன் பணம் கொடுத்து, விமான பயணத்திற்கான முன் பதிவினை செய்து, கபாலீஸ்வரம் சென்று கற்பகாம்பாளையும் கபாலீஸ்வரரையும் வணங்கி யாத்திரை புறப்படும் நாளுக்காக காத்துக்கொண்டிருந்தோம்.



யாத்திரை கிளம்புவதற்கு முன்னர் திருமயிலையில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் தரிசனம்.





பச்சை சட்டை அணிந்த
 திரு சுந்தர் அவர்கள் இப்புகைப்படங்களை எல்லாம் எடுத்தவர்.



சென்னை விமான நிலையத்தில் 

பெங்களூர் விமான நிலையத்தில் பெஜாவர் மடாதிபதி 
 சுவாமிஜீயின் ஆசி


நேபாளம் செல்லும் விமானத்தில்


காத்மாண்டு விமான நிலையத்தில்

யாத்திரைக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் சிறுகசிறுக சேர்த்தோம்இவ்வருட
 யாத்திரை எவ்வாறு இருந்தது எப்படி ஏமாற்றப் பட்டோம் என்பதை அறிந்து கொள்ள 
உடன் வாருங்கள் அன்பர்களே

Tuesday, October 22, 2019

வெள்ளிப் பனி மலையார் தரிசனம் -1

அவனருளால் இன்னொரு முறை இவ்வருடம் திருக்கயிலாய யாத்திரை வாய்ப்பு சித்தித்தது. அதை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவுகள். 


டார்ச்சனிலிருந்து ஐயனின் தெற்கு முக தரிசனம்


திருக்கயிலாயமும் மானசரோவரமும் இணைந்த கௌரி சங்கர் தரிசனம்


மானசரோவர் தடாகம் 


துயர்க்கெலாம் கூடாய தோற்குரம்பை புக்கு
மயக்குஇல் வழிகாண மாட்டேன் - வியற்கொடும்போர்
ஏற்றானே வண்கயிலை எம்மானே என்கொலோ
மேற்றான் இதற்கு விளைவு - நக்கீர நாயனார் (பதினொன்றாம் திருமுறை -  கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி)


பரிசறியேன் பற்றிலேன் கற்றிலேன் முற்றும்
கரியுரியாய் பாதமே கண்டாய் - திரியும்
புரம்மாளச் செற்றவனே பொற்கயிலை மன்னும்
பரமே அடியேற்குப் பற்று  -  பதினொன்றாம் திருமுறை · திருஆலவாய் உடையார்


ஒவ்வொரு முறையும் கிடைக்கும் தரிசனம் ஒவ்வொன்றாக இருக்கும் இவ்வருடம் முழுவதும் பனி மூடிய நிலையில் வெள்ளிப் பனி மலையராக ஐயன் தரிசனம் தந்தருளினார். அந்த அற்புத தரிசனத்தின் சில காட்சிகள் இப்பதிவில் இடம் பெறுகின்றன.







காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்   
வேலையே   போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்   
தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவற்கு  
வீங்கிருளே போலும் மிடறு.  -  பதினொன்றாம் திருமுறை காரைக்காலம்மையார் அருளிச்செய்த அற்புதத்திருவந்தாதி




இவ்வருடமும் நேபாளம் வழியாக பேருந்தில் பயணம் செய்தோம். முதலில் சென்ற வழியல்ல இது ஒரு மாற்றுப்பாதை. இவ்வருடம் எவ்வழியாக சென்றோம்,  இவ்வருட அனுபவங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.

யாத்திரை தொடரும்