Showing posts with label மானசரோவர் தடாகம். Show all posts
Showing posts with label மானசரோவர் தடாகம். Show all posts

Sunday, June 09, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -23 (திருக்கயிலாய யாத்திரை-2012)

மானசரோவர் தடாக  வலம்


புனித மானசரோவர் தடாக வலம் செல்லும் பாதை 


சூரிய ஒளியில் மின்னும் மானசரோவர் 

குர்லா மாந்தாதா மலை சிகரங்கள் 

குர்லா மாந்தாதா மலை தொடர்  மற்றும் லாயமலைத்தொடருக்கும் இடையில் மானசரோவர் மற்றும் இராக்ஷஸ் தால் ஏரி அமைந்துள்ளன

மானசரோவரில் பொன் வாத்துக்கள்

மானசரோவரில் கடற்பறவைகள்

மானசரோவரில் வந்து கலக்கும் ஆறு


 மானசரோவரின் வர்ண ஜாலம்

கரையெங்கும் கற்களை அடுக்கி வைத்துள்ள சிறு வீடுகள் 

மானசரோவரின் கரையில் உள்ள ஒரு புத்த விகாரம்

மானசரோவரின் ஒரு கரை
எடி, கவுசிக், சுதார், முகர்ஜி, ஸ்வாதி

குஹூ புத்த விகாரம்
( கடந்த யாத்திரையில் இங்குதான் இரண்டு நாட்கள் தங்கினோம்)

மானசரோவரின் இன்னொரு வர்ணஜாலம்



வெள்ளி பனி, கருப்பு மலை, பல நீல வர்ண பொய்கை, சிவப்பு மண் என்னே இறைவனின் கை வண்ணம்.

 மானசரோவரின்  கரையில் தொலைத்தொடர்பு கம்பங்கள்

ஒரு பகுதி தார் சாலை ஆகிவிட்டது

வண்டி சத்தத்தை கேட்டு மிரண்டு ஓடும் யாக் எருமைகள்


ஐயனின் அற்புதமான முதல் தரிசினத்திற்கு பின், நாங்கள் மானசரோவரின் கரையிலுள்ள ஹோர்ச்சூ (Horchu) என்று அழைக்கப்படும் ஹோரேவிலிருந்து (Hore) தடாக வலத்தை துவங்கினோம். வழியில்  பல வண்டிகளைப் பார்த்தோம் அதாவது நிறைய பக்தர்கள் ஐயனை தரிசனம் செய்ய வந்துள்ளனர் என்பது மட்டும் புரிந்தது. கிளம்பிய சமயம் நல்ல வெயில் சூரிய ஒளி பட்டு மானசரோவரின் அலைகள் வைரம் போல் மின்னுவதைப் பார்த்தோம். . ஏரியெங்கும் பல வித பறவைகள், பல வண்ண பறவைகள் ஆனந்தமாக பறந்து கொண்டிருந்தன ஒரு பொன் வாத்தையையும் கண்டோம். பின்னர் இராக்ஷஸ்தால் ஏரியின்  கரையில் பேருந்தை நிறுத்தி அந்த ஏரியின் அழகையும் படம்  எடுத்துக்கொண்டோம். நிமிடத்திற்கு நிமிடம் மாறும் மானசரோவரின் அழகையும் வர்ண ஜாலங்களையும்  கண்டு இரசித்தோம்.பின்னர்  மானசரோவர் கரையில் உள்ள குஹூ கோம்பாவையும் (Quhu-சென்ற யாத்திரையின் போது இங்கு தான் இரு நாட்கள் தங்கினோம்) அப்படியே பார்த்துக்கொண்டு குர்லா மந்தாதா மலைச்சிகரங்களின் அழகை இரசித்துக்கொண்டு சியூ கோம்பாவை வந்தடைந்தோம். இந்த இடம் ஜைடி(Zaidy) என்றும் அறியப்பட்கின்றது. இங்குதான் தங்கினோம்.

அங்கு அடைந்த சமயம் சூரியன் மானசரோவர் ஏரியின் மறு பக்கத்தில் இறங்கிக் கொண்டிருந்தான் அதன் மஞ்சள் கிரணங்கள் மானசரோவரை ஒரு பொன் வண்ண வட்டில் போல மாற்றியிருந்தது அப்படியே அந்த அழகை இரசித்தோம். இவ்வாறு இன்றைய தினம் ஹோரேவிலிருந்து சியூ வரையிலான பாதி ஏரி வலத்தை முடித்தோம். மானசரோவர் ஏரி வலப்பாதை பெரும்பகுதி முன் போலதான் உள்ளது.  தக்லகோட்டிலிருந்து ஜைடி வரும் பாதை தார் சாலை ஆகிவிட்டது. வரும் காலத்தில் மானசரோவர் கிரிவலப் பாதை முழுவதும் தார் சாலை ஆகும் வாய்ப்புகள் உள்ளன. இன்றைய தினம் இங்கு மானசரோவரின் கரையில் முழுமதி நாளில் தங்கினோம்.  


*****************
திருஞான சம்பந்தர் தேவாரம்

திருக்கயிலாயம்

யானை வாகனத்தில் அகத்தீஸ்வரர்

பாடல் எண் : 3

மாவினுரிவை மங்கைவெருவ மூடி முடிதன்மேல்

மேவு மதியு நதியும்வைத்த விறைவர் கழலுன்னும்

தேவர்தேவர் திரிசூலத்தர் திரங்கன் முகவன்சேர்

காவும்பொழிலுங் கடுங்கற்சுனைசூழ் கயிலை மலையாரே.


பொருள் : திரங்கிய தோலை உடைய குரங்குகள் வாழும் காடுகளும் பொழில்களும் மலையிடையே இயற்கையாக அமைந்த சுனைகளும் சூழ்ந்த கயிலைமலைப் பெருமானார் உமையம்மை அஞ்ச யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டு முடிமீது பிறை கங்கை ஆகியவற்றைக் கொண்ட இறைவர், தம் திருவடிகளை நினைந்து போற்றும் தேவர்களின் தேவர். முத்தலைச் சூலத்தை உடையவர்.


தேவாரம் முழுவதையும் பொருளுடன் படிக்க இங்கு செல்க    http://thevaaram.org/

யாத்திரை தொடரும்....................



Saturday, June 08, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -22 (திருக்கயிலாய யாத்திரை-2012)

முக்கண் முதல்வரின் முதல் தரிசனம் 


ஹோரேவை நெருங்கும் போது முதல்  தரிசனம் 

அம்மையப்பரின் அற்புத தரிசனம்


ஐயனைக் கண்ட ஆனந்தத்தில் பறவை போல் பறந்தோம்
ஆனந்தக் கூத்தாடினோம்

அடி விழுந்து வணங்கினோம்

நின்றும்  கிடந்தும்  இருந்தும் வணங்கினோம் 
( C.K. வைஷ்ணவ் தம்பதிகள்)

ஆனந்தக் கண்ணீர் வடித்தோம்

(பின் புலத்தில் குர்லா மாந்தாதா மலைச் சிகரங்களையும்,
 மானசரோவர் ஏரியையும் காண்கிறீர்கள்)


அன்னபூரணி அன்னமும் பாலித்தாள்

(சேர்பா ரஞ்சித்,  சுதார்,  சேர்பா சோனம்
எடி அகர்வால், ஸ்வாதி அகர்வால்)

சகோதர சகோதரி யயாங் பாண்டே மற்றும்
 நிஷ்டா பாண்டே ஸ்வாதி அவர்களுடன்

குடும்பம் குடும்பமாக வணங்கினார்கள்
(ரமன், சதிஷ், கைலாஷ் கௌசிக்)

தம்பதிகளாக சேவித்தார்கள்
விஜய் குமார்- ரஷ்மி மஹாஜன்

பறவைகளுக்கு அன்னம் பாலித்தோம் 


அனைவரும் ஒன்றாக கூடி கிரிவலமும் சித்திக்க வேண்டும் 
என்று மனதார இறைஞ்சினோம்

ஆனந்தத்தில்  வானத்தில் மிதந்தோம்

பேருந்தின் முன்னர் நிஷ்டா பாண்டே,
 அமீத் அஹர்வால்
கட்டிட வேலைகள் நடைபெறுகின்றன 
இவ்வாறு   மலை பாலைவனத்தில்  பயணம் செய்து மாயும் லா கணவாயைக் (5200 மீ) கடந்து  மதிய வேளைக்கு மானசரோவரின் வட கரையில் உள்ள ஹோரே (Hore) திபெத்தில் ஹோர்ச்சூ என்னும் கிராமத்திற்கு வந்தோம். ஹோரேவை நெருங்கும் போதே ஐயனின்  முதல் தரிசனம் கிட்டியது அனைவருக்கும் ஐயனின் தரிசனம் பாருங்கள் என்று கூறினோம். மேக மூட்டம் எங்கும் இல்லை வானம் நிர்மலமாக இருந்தது, ஆனால் பனி காற்றில் இருந்ததால் சூரிய ஒளி பிரகாசமாக இல்லாததால், மங்கலாக இருந்தது. எதற்காக இவ்வளவு சிரமம் எடுத்து வந்தோமோ அந்த எண்ணம் அவனருளால் நிறைவேறியது. ஆம் அந்த முக்கண் முதல்வரின் முதல் தரிசனம் திவ்யமாக கிட்டியது. 

முதலில் தரிசனம் தந்த அம்மையப்பருக்கு அடி வீழ்ந்து வணக்கம் செய்தோம். ஆனந்தக் கூத்தாடினோம், அப்படியே பறவைகள் போல வானத்தில் மிதந்தோம். ஆனந்த கண்ணீர் வடித்தோம். நின்றும் இடந்தும் கிடந்தும் அமையப்பரை  வணங்கி நன்றி செலுத்தினோம். அந்த ஆனந்தத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. சென்ற  தடவை அடியேன் யாத்திரை செய்த போது இருந்த ஒரே குறையான முதல் தரிசனத்தை இந்த யாத்திரையின் போது தந்தருளிய தாயினும் தயாவான தத்துவனை கண்ணுதலானை, காமகோபனை, ஆணோ பெண்ணோ அலியோ என்று யாரும் அறியா சிவனை, உண்ணா முலை உமையாளொடு உடனாகிய அண்ணாமலை அண்ணலை, சிவபுராணம் பாடி வணங்கினோம். மற்றவர்கள் அனைவருக்கும் இது தாம் முதல் யாத்திரை அவர்கள் அனைவரும் அடியேனும் அருளாளா, அய்யா, அணங்கின் மணவாளா, ஆனந்த கூத்தா இது போலவே உன் கிரி வலமும் சித்திக்க வேண்டும் என்று மனதார கோரிக்கை வைத்தோம்.  

அருகிலேயே மானசரோவர் ஏரி என்பதால் அங்கிருந்து பல கடற்பறவைகள் பறந்து வந்தன அவற்றுக்கும் அன்னம் பாலித்தோம். அந்த இடத்தில் தற்போது பல கட்டிடங்கள் கட்டிக்கொண்டு இருக்கின்றனர். வரும் காலத்தில் யாத்ரிகள் இங்கேயே தங்கி ஐயனை திவ்யமாக தரிசனம் செய்ய இயலும். சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்து சிவ சக்தியை தியானம் செய்து விட்டு புனித  மானசரோவர் ஏரியின் வலத்தை பேருந்து மூலமாவே துவக்கினோம்.

(தரிசனத்திற்கு காத்திருக்கும் திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களுக்கும் மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதர் தரிசனம் சித்திக்க அவர்களின் திருப்பாதங்களில் வீழ்ந்து வேண்டிக்கொள்கிறேன்.)


*****************
திருஞான சம்பந்தர் தேவாரம்

திருக்கயிலாயம்

திருக்கயிலாய வாகனத்தில் அகத்தீஸ்வரர்

பாடல் எண் : 2

புரிகொள்சடைய ரடியர்க்கெளியார் கிளிசேர் மொழிமங்கை
தெரியவுருவில் வைத்துகந்த தேவர் பெருமானார்
பரியகளிற்றை யரவுவிழுங்கி மழுங்க விருள்கூர்ந்த
கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலை மலையாரே.

பொருள் : பெரிய யானையை மலைப்பாம்பு விழுங்கி மறையும் இருள்மிக்க கயிலைமலையில் விடம் உண்ட கரியகண்டராய்ச் சிவந்த திருமேனியராய் விளங்கும் இறைவர் வளைத்துக்கட்டிய சடைமுடியை உடையவர். அடியவர்க்கு எளிமையானவர். கிளி போன்ற மெல்லிய மொழி பேசும் உமையம்மையை பலருக்கும் தெரியுமாறு ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்ததேவர் தலைவராவார்.

தேவாரம் முழுவதையும் பொருளுடன் படிக்க இங்கு செல்க    http://thevaaram.org/

யாத்திரை தொடரும்....................