Monday, July 21, 2025
திருக்கதவம் தாழ் திறந்தது
வணக்கம் சிவ அன்பர்களே. நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
கோவிட் மற்றும் கல்வானில் சீனர்களுடன் ஏற்பட்ட கைகலப்பு ஆகியவற்றால் நிறுத்தப்பட்டிருந்த திருக்கயிலாய யாத்திரை, சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவனருளால் மீண்டும் துவங்கியது என்பது ஒரு மிகவும் மகிழ்ச்சியான செய்தி.
சீனாவுடனான ஒப்பந்தம் முடிய காலம் ஆனதால் இவ்வருடம் மொத்தம் 750 பக்தர்களுக்க மட்டுமே இவ்வாய்ப்பு கிட்டும். உத்தரகாண்டில் உள்ள லிபு கணவாய் வழியாக ஐந்து குழுவினரும், சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் வழியாக பத்து குழுவினரும் செல்ல உள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் அதிகபட்சம் ஐம்பது பேர் அடங்குவர்.
அடியேன் லிபு லே கணவாய் வழியாக சென்ற போது நடந்து மலையேறி சென்ற பாதை இப்போது வாகனம் செல்லும் பாதையாக மாறிவிட்டதால் இப்போது நபிதாங் வரை வாகனத்தில் செல்ல முடியும். எனவே யாத்திரை காலமும் 21 நாட்களாக குறைந்து விட்டது என்பதும் இன்னொரு ஒரு மகிழ்ச்சியான செய்தி.
இவ்வருடத்திற்கான விண்ணப்பம் மற்றும் பக்தர்கள் தேர்வு எல்லாம் முடிந்தது. முதல் குழுவினர் இரு வழிகளிலும் புறப்பட்டு சென்று விட்டனர். முடிந்தால் அடுத்த வருடம் ஐயனை தரிசிக்க அழைக்குமாறு அவரிடம் விண்ணப்பம் வித்திருக்க்கின்றேன் அவர் அடியேனது விண்ணப்பத்திற்கு செவி சாய்க்க வேண்டும்.
அதே சமயம் இந்த ஐந்து வருடங்களாக நேபாளம் வழியாக நடந்த கொண்டிருந்த யாத்த்திரை ஜூலை மாதம் நேபாளத்தில் போடே கோசி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் நேபாளத்தையும் சீனப்பகுதியையும் இணைக்கும் ருசுவாகதி என்ற இடத்தில் அமைந்துள்ள, அடியோங்கள் 2019ம் ஆண்டு கடந்து சென்ற நட்பு பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் தடைபட்டிருக்கின்றது. இவ்வெள்ளம் மிகுதியான மழையால் ஏற்பட்ட மழையன்று ஆனால் பனி உருகி ஏற்பட்ட வெள்ளம் என்பது மாறி வரும் உலக வெப்பமயமாதலின் வெளிப்பாடு என்பது ஒரு கவலைக்குரிய செய்தி. முன்னர் சென்று கொண்டிந்த கொடாரி நட்பு பாலத்திலும் இன்னும் போக்குவரத்து துவங்கவில்லை என்பதால் தற்போது நேபாளம் செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. நிலைமை எப்போது சரியாகும் என்று தெரியவில்லை. எல்லாம் அவன் செயல்.
Subscribe to:
Comments (Atom)
