Showing posts with label டெல்லி. Show all posts
Showing posts with label டெல்லி. Show all posts

Thursday, June 19, 2008

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய யாத்திரை) -7

டெல்லியில் மூன்றாம் நாள்



அப்பர் பெருமான் அருளிச்செய்த போற்றித் திருத்தாண்டகம்

திருக்கயிலாயம்



ஒம் நமசிவாய



மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி


மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி


உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி


உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி


திருவாகி நின்ற திறமே போற்றி


தேசம் பரவப்படுவாய் போற்றி


கருவாகி ஓடும் முகிலே போற்றி


கயிலை மலையானே போற்றி போற்றி (3)




தீர்த்தா யாத்திரா கமிட்டி தலைவர் மற்றும்

L.O திரு பொனால் அவர்களுடன் ஆசிரியர்

டெல்லி அரசின் பை வழங்கும் போது

மூன்றாம் நாள் காலையில் அந்த வேயுறு தோளி பங்கர் விடமுண்ட கண்டரின் மாப்பெருங் கருணையினால் இந்திய அரசின் விருந்தாளிகளாக வெளியுறவு அமைச்சகம் சென்றோம் அங்கு எங்களுக்கு கைலாஷ் மானசரோவர் யாத்திரை பற்றிய ஒரு வீடியோப் படம் காண்பிக்கப்பட்டது. சீனப் பகுதிகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிகூறினார் இணை செயலாளர்.



கேமராவில் படம் எடுக்கும் போது சீன கட்டிடங்களை படம் எடுக்க வேண்டாம், அதே சமயம் இந்தியப் பகுதியில் எடுத்த புகைப்படங்களை சீனப்பகுதியில் கொண்டு செல்ல வேண்டாம்.



சீனக்கடைகளில் பொருள்கள் வாங்கச் செல்லும் போது கவனமாக இருக்கவும். ஒரு யாத்திரி ஒரு கணணிக் கடையில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்த போது அவர் கைபட்டு ஒரு கணணி பழுதாகிவிட்டதால் அவர் மீது கடைக்காரர் வழக்கு பதிவு செய்தார், அவர் துன்பத்திற்கு உள்ளாக நேர்ந்தது L.O அவர்களின் அரசை கலந்துகொண்டு பின் நடவடிக்கை எடுத்து வழக்கு திரும்பப்பெறப்பட்டது ஆனால் அவர் நஷ்ட ஈடு வழங்க வேண்டி வந்தது, எனவே சீனப்பகுதியில் கடைகளில் கவனமாக இருக்கவும்.



அங்கு தலாய் லாமாவைப்பற்றி யாருடனும் ஏதும் பேச வேண்டாம்.






யாத்திரிகளில் சிலர்



நாங்கள் தினமும் உங்கள் L.O உடன் தொடர்பு கொண்டு உங்கள் நலன் பற்றிய செய்திகளை அறிந்து கொண்டிருப்போம் பயப்படாமல் சென்று வாருங்கள் என்று ஆசி கூறி அனுப்பினார்கள். மேலும் KMVN க்கு தர வேண்டிய மீதி ரூபாய் 10500/- செலுத்தி இரžது பெற்றுக்கொண்டாம் எங்களது பாஸ்போர்ட்டும் திரும்பக்கிடைத்தது.


மதிய உணவிற்கு குஜராத் சதன் வந்து விட்டோம். அதற்குப்பின் டெல்லியில் கைலாய கிரிவலத்தின் போது வேண்டிய உணவுப் பொருள்களையும், மருந்துகளையும் அவரவர்களுக்கு வேண்டிய சொந்த பொருட்களையும் வாங்கிக் கொண்டோம்.


இரவு டில்லி அரசின் சார்பாக தீர்த்த யாத்திரை கமிட்டியினர் விருந்து வழங்கி கௌரவித்தனர். அப்போது டில்லி அரசின் சார்பில் அனைவருக்கும் ஒரு பை வழங்கப்படது அதில் ஒரு தொப்பி, ஒரு மழை கோட், பூஜை சமான்கள் அடங்கிய ஒரு பெட்டி முதலியன இருந்தன. பெட்டியில் கற்பூரம், ஊது பத்திகள், செந்து‘ரம், அட்சதை , ஒரு 108 ருத்ராக்ஷ்ங்கள் கொண்ட ஒரு மாலை முதலியன இருந்தன. டெல்லி வாசிகளுக்கு அந்த அரசு ரூபாய் 10000/- சன்மானமனமாக வழங்கியது அது போல குஜராத் அரசும் அந்த மாலத்தில் இருந்து யாத்திரைக்கு வருபவர்களுக்கு ரூபாய் 20000/- சன்மானம் வழங்குகின்றது. மேலும் அவர்களுக்கு ஒரு தொப்பி, ஒரு பை ஒரு பௌச் முதலியன வழங்குகின்றது, அவர்கள் டெல்லி வந்து செல்வதற்கான கட்டணத்தையும் குஜராத் அரசே வழங்குகின்றது. எனவே தானோ என்னவோ எங்கள் குழுவில் 12 பேருக்கு மேல் குஜராத் மாநிலத்தவர்கள் இருந்தனர். மற்ற குழுவினரிலும் குஜராத்தை சேர்ந்தவர்கள் அதிகம் செல்கின்றனர் என்று அறிந்தோம். மற்ற மாநில அரசுகள் ஏதும் மானியம் தருவதில்லை.



யாத்திரை சுபமாக நடக்க சிவபெருமானுக்கு பூசனை




தீர்த்த யாத்திரை கமிட்டி தலைவர் திரு ஷிவ் குமார் சர்மா ஒரு கடிதம் வாசித்து காண்பித்தார் அதில் போன வருடம் சென்ற ஒரு அம்மையார் மானசரோவர் தடாகத்தில் இரவில் தேவர்கள் நட்சத்திர ரூபமாக வந்து நீராடி கடல் தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறிலினிலடக்கிய விமலனையும், பார்வதித் தாயையும் வணங்கிச் சென்றமை குறித்து எழுதியிருந்தார். அவரும் எங்களை அதன் அற்புத காட்சியைக் காணுமாறு வேண்டினார்.






அன்று இரவு பொது பொருட்களான உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள், பூஜை பொருட்கள் அனைத்தையும் முதலில் தண்ணீர் புகாத வகையிலும் அதே சமயம் மட்டக் குதிரைகளில் எடுத்து செல்லும் விதமாகவும் கட்டி வைத்தோம்.



முதலிலேயே சொன்னது போல் நமது பொருட்கள் அனைத்தும் மேலே கோவேறு கழுதைகள் மூலம் தான் கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் வழியில் மழை, பனி, நீர் வீழ்ச்சிகள் ஆகியவற்றை கடந்து செல்லவேண்டும் என்பதால் நமது பொருட்களை தண்ர் புகாத வண்ணம் நமது பொருட்களை நன்றாக கட்டி(pack) எடுத்து செல்ல வேண்டும். ஒரு சர்ட், பேண்ட், பனியன், ஜட்டி முதலியவற்றை முதலில் ஒரு பிளாஸ்டிக் கவரில் பேக் செய்து பின் டேப்பால் அதை ஒட்டி விட வேண்டும் அதன் மேல் என்ன பொருட்கள் உள்ளன என்று எழுதினால் எடுக்கும் போது உதவியாக இருக்கும். அதே போல் எல்லா பொருட்களையும் பிளாஸ்டிக் கவர்களில் பேக் செய்து, நமது பைகளில் வைக்க வேண்டும். பின் அந்தப்பையை ஒரு உரப்பையில் வைத்து கட்ட வேண்டும் பின் இன்னொரு பையினால் மூடி து‘க்குவதற்கு ஏதுவாக கட்ட வேண்டும். ஏனென்றால் கோவேறு கழுதைகள் மேலேறும் போது மலையை உரசிக் கொண்டு தன் செல்லும், பாதையின் அடுத்த ஒரம் அதள பாதாளம் அதிலும் காளி நதி வேகத்துடன் ஓடுகின்றது என்பதால் அவை மலையை ஒட்டியே செல்லும். அப்போது நமது வெளி உரப்பை சேதமடைய வாய்ப்பு உள்ளது எனவே இரண்டு பைகளை வைத்து இரண்டையும் தனித்தனியாக கட்டுவது நல்லது. மூட்டைகளின் மேல் அடையாளத்திற்காக தங்கள் பெயர், குழு எண் (Batch No) , வருடம், மற்றும் தங்கள் வரிசை எண்ணை எழுத வேண்டும். இவ்வாறு நாங்கள் எடுத்துச் செல்லும் பொருட்கள் எல்லாவற்றையும் பேக் செய்து எங்கள் சொந்த பேக்குகள் இரண்டையும் பேக் செய்ய நள்ளிரவு ம 12 ஆனது.


இவ்வாறு எதிர்பார்ப்புகளோடும், பிரார்த்தனையோடும், மற்றவர்கள் அன்போடும் மரியாதையோடும், ஆம் எங்களுக்கு கிடைத்த மரியாதையை வர்க்க வார்த்தைகளே இல்லை. என்னுடன் பணி செய்த சகோதரி முதலிலேயே கூறி இருந்தார் மாலைகளை சுமந்து சுமந்து கழுத்தே வலித்து விடும் என்று, அவ்வாறே நடந்தது ஒவ்வொரு சமிதியினரும் வழியில் உள்ள கிராம மக்களும் காட்டிய அன்பும், மரியாதையும், பக்தியும் அளவிடமுடியாதது நம்மை சிவ சொரூபமாகவே அவர்கள் கருதுகின்றனர். இவ்வாறு டெல்லியில் மூன்று நாட்கள் கழிந்தன. அடுத்த நாள் காலை ஒரு ஆனந்த யாத்திரைக்கு புறப்படுகின்றோம் சகல புவனத்தையும் படைத்தும், காத்தும், அழித்தும் விளையாடும் அந்த சர்வேஸ்வரனையும் சர்வேஸ்வரியையும் கண்டு தரிசனம் செய்யப்போகின்றோம் என்ற நிம்மதியில் தூங்கச்சென்றோம்.



யாத்திரை தொடரும்...............



Kailash Manasarovar Darshan (yatra)-7

THIRD DAY OF STAY AT DELHI




Delhi Govt's Thirth Yatra Committe presenting bag to all yatris


Thirth yatra committee chairman Shri Shiv Sharma


and our L.O Bonal with the author


As medical examination was over and those who can undertake the yatra eas known, the third day was a day of joy for those selected and a day of despair for those were left out. This day mainly we spent on making the final preperation for the holy journey.



The lucky yatris






On the third day morning we were taken to North block, for a briefing. by Ministry of external affairs, there the joint secretary assured that every help will be extended by the Government to make the yatra a success and they also showed a video clip about the yatra and its route for the first time we had an idea of the real conditions in which we will be undertaking the yatra. From their side they also advised the yatris to be careful in taking photographs on the Chinese side and be careful while shopping . Some yatris landed in trouble when they photographed buildings in Taklakot, also some other yatri while shopping touched a computer which fell down and broke the shop keeper lodged a police complaint and with great effort L.O could manage to get the complaint withdrawn. As on the Chinese side any problem happens diplomatic efforts are also required so they requested us to be extra careful. Also they requested us not to talk about Dalai Lama on the other side and requested us to deposit our film rolls and memory chip at Nabidang so they will not fall into Chinese hands. Our Indemnity bonds were collected and we paid the remaining amount due to KMVN. Our passports were returned back to us there was no endorsement was there as only group visa was issued by Chinese Government.



The yatris dancing in ecstacy that they got the chance for darshan





After lunch we went to Chandni chowk for shopping. All the common items required like food items, packing materials including fertilizer sacks and pooja articles, havan articles, chlorine tablets , small gifts as token of remembrance to ITBP personnel were bought in Delhi from common fund. The individuals also bought the items required for them.



Pooja to Lord Shiva for a good darshan


In the evening "Thirtha yatra committee of Delhi Government" hosted a reception to the yatris in which the bag was gifted to all the yatris. The residents of Delhi were given an financial assistance of Rs. 20,000/- . Similarly Gujarat Government gives Rs 30,000/- and also a kit containing essential items to their residents, other state Governments do not provide any assistance to the yatris. The president of the committee wished all a successful yatra and also asked us to witness the spectacle of celestials bathing in Manasarovar in the form of stars, he read out a letter written by an yatri who undertook the yatra last year. We had a pooja to pray to Lord Shiva for a good darshan followed by dinner. Later we started packing the common items in secure water proof package which extended up to midnight and went for a nap with the satisfaction that the D day has arrived and we are ready to travel for the darshan of Lord and Mother in few hours.







The yatra continues............

Wednesday, June 18, 2008

Kailash Manasarovar Darshan (yatra)-6

SECOND DAY OF STAY AT DELHI




On the second day of our stay at Delhi we all of us got up early for the medical examination and went to Batra Hospital on empty stomach , where the medical examination was done but to our dismay many were disqualified in the medical examination only 32 were selected and our group became small but there was a benefit in that also that the whole group traveled together during the whole yatra. Otherwise normally the group is divided into two groups as in the Chinese side maximum of 30 persons can only be accommodated comfortably. One group will undertake Kailash parikrama first meanwhile the other group will undertake Manasarovar parikrama after 4 days then they interchange. Here I should mention about Mrs Seema Pandit from Jaipur, she is 62 years old and she could not do the TMT properly so the doctors disqualified her, but there was a doctor from Nasik Dr. Bokre in our group who suggested her to go for echocardiogram which she underwent by paying extra payment from her side. First ITBP doctors were not ready to accept her but she was firm and she was allowed to undertake the yatra. Why I narrated this incident is to show that the devotees unmindful of their health status wish to undertake the yatra, but government is not willing to allow those who are not physically fit to undertake this difficult pilgrimage. On earlier years a medical certificate was enough since some yatris misused that also then the system of conducting the medical examination at Delhi itself started. Always there will be conflict between faith and reality only we have to reconcile to the will of the Lord and take things as it comes. So that only the author undertook the yatra in middle age itself rather than waiting for old age. Most of the aspirants were disqualified on account of blood pressure only the important one being systolic pressure. So it would be better for the aspirants to first have a medical check at their native place itself before leaving to Delhi to avoid disappointment as the government is sending only the fit persons to the yatra because of the difficulties involved when someone gets sick especially on the Chinese side. We have to carry the results as well as the X-rays and tread mill results upto Gunji where the second medical test will be held for verification by ITBP doctors.




14th Batch 2005

By the grace of the Lord Shiva also called as Maheshwara,( The great Eswara) Chandra Sekara,( moon bejeweled) Pannaka Pushana ( snake ornamented), Jatadhara ( one with matted locks) the author and his roommate were selected after the medical examination , those who were disqualified tried to reason with the ITBP doctors that its their lives and they are ready to undertake the yatra, but the doctors didn’t budge and they all returned with heavy heart at around 7PM . Those who were selected then went to Canara Bank at Ashoka Hotel for foreign exchange conversion. Our L.O informed us about the serial nos of dollars which Chinese are not accepting we avoided those and converted the rupees into American dollars.




Felicitation of the yatris by Delhi Government

Before we start our journey a small introduction about the members of 14th batch of 2005 as you will be encountering them through the course of the yatra as you read this book. The oldest member was 66 year old Smt Seema Pandit from Jaipur, about whom we saw during medical examination. The next eldest was Shri Appa Rao from Omargoan , Maharashtra , 65 years old . He was siddha medicine practitioner and gave medicines for cold and diarrhea during the yatra. Apart from Mrs .Seema pandit there were four other lady yatris three came as couples they are Smt & Shri Bokre from Nasisk , Adroja couple and Kimji couple from Gujarat. Smt Sharmistha Dutta came from West Bengal. The other members were my room mate Shri Tapaswi from Nasik, he had a bhel tree in his house and used to worship Lord Shiva with Bhel leaves daily. He was really my guardian during the whole yatra , rather every body called him my elder brother, he took good care of me, normally he used reach the camps earlier and used to reserve the bed next to him for me, our relationship which started in the room no 108 of Gujarat sadan Delhi is continuing today also. An IIT professor from Kharagpur Shri Kanchan Choudahry from Wesr Bengal, Shri Joshi, Shri Goswami, Shri Jairam Donda, Shri Biharilal Purohit, Shri Dinesh Patel, Shri Sushil Kumar Modi and Shri Prjapathi all came from Gujarat. Since Gujarat government offers subsidy to Kailash yatra , in almost all the groups we can find yatris from Gujarat to be a major portion. Shri Joshi is such a sterling devotee of Lord that he walked bare foot without even chapels during the whole yatra in the cold climate and rocky terrain and carried oil for Kalapani temple all by himself , he was undertaking the yatra for the second time. Shri Goswami was well versed in Sanskrit. Modi and Prajapati were also great devotees of the Lord. Shri Mudgal from Delhi was another sterling devotee, he was also undertaking the yatra for the second time, for his credit he has worshipped the Lord at 12 Jyothir Linga temples and has also undertaken the chardham circuit ( Badrinath in the North, Puri in the east, Dwaraka in the west and Rameswaram in the south many times). Another yatri from Delhi was shri Dhanuskodi, a native of Tamilnadu serving at Delhi . Shri Indresh Purohit from Indore was also undertaking the yatra for the second time , he is the driver of Sataphti express train. Shri Sanjeev Mittal from Jaipur was also undertaking the yatra for the second time with us. Another member was Shri Manish Kumar Verma from Ferozabad. The youngest was Shri Amandeep Singh from Ganga Nagar 25 year lad a sikh. Many from our group had visited kailsh during subsequent years also really the author was lucky to have undertaken the yatra which such blessed ones. Thus our group was mix of experienced and the inexperienced, old and young a garland of different flowers.
Yatra will continue..........

Friday, June 13, 2008

கண்டேன் அவர் திருப்பாதம் -6

யாத்திரையின் இரண்டாம் நாள்



டெல்லியில் மருத்துவப் பரிசோதனை




>


அப்பர் பெருமான் அருளிச்செய்த போற்றித் திருத்தாண்டகம்

திருக்கைலாயம்





ஒம் நமசிவாய





பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி
பிறவியறுக்கும் பிரானே போற்றி
வைச்சா ட னன்று மகிழ்ந்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்றும் எய்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாக மசைத்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி(1)








கிடைத்தற்கரியது மானிடப்பிறவி. நாம் முற்பிறவியில் செய்த புண்ணிய பாவங்களின் பயனால் மட்டுமே இந்த கர்ம பூமியில் நமக்கு இறையருளால் மனிதப்பிறவி கிட்டுகின்றது. இவ்விதம் அமையும் பிறவியில் நமக்கு இறைவன் பால் ஆழ்ந்த பக்தியும் நம்பிக்கையும் தூய நெறியுடன் வாழவும் அவரது அருள் வேண்டும். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனை அல்லும் பகலும் அனவரதமும் இதயக் கமலத்தில் நிறுத்தி பூஜிக்கவும், அவருடைய திவ்விய தரிசனத்தை பெறவும் நாம் முற்பிறவியில் நற்காரியங்கள் செய்திருக்க வேண்டும். அவ்வாறு புண்ணியம் செய்திருந்த நமது பாரதத் திருநாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் இருந்து வந்த 42 பேர்

" யோ ருத்ரோ அக்நௌ யோ அப்ஸுயே
ஓஷதீஷூ யோ ருத்ரோ
விஸ்வா புவநா விவேஸ தஸ்மை ருத்ராய நமோ அஸ்து "

"எந்த ருத்ரன் அக்னி, நீர், செடி, கொடி(மூலிகைகள்), மரம், மற்றும் பிரபஞ்சம் முழுவதும் ஊடுருவி நிலைத்திருக்கின்றாரோ அந்த ருத்ர பகவானை வணங்குகிறோம்"



என்று ஸ்ரீருத்ரத்திலே சிவபெருமானின் பெருமை கூறப்பட்டுள்ளது. அவர் பார்வதியம்மையுடன் நித்ய வாசம் செய்யும் தலம் தான் திருக்கயிலாயம், அத்தலத்தை சென்று தரிசிக்கும் எண்ணத்துடன் டெல்லியில் கூடியிருந்தோம்.

முதல் நாள் நடைபெற வேண்டிய மருத்துவ பரிசோதனை எங்கள் குழுவினருக்கு இரண்டாம் நாள் அன்று தான் நடைபெற்றது. காலையிலேயே பேருந்து மூலம் வெறும் வயிற்றில் பத்ரா மருத்துவமனை சென்றுவிட்டோம். மருத்துவ பரிசோதனைக்காக ரூபாய் 2000/- கட்ட வேண்டி இருந்தது. மருத்துவமனையில் திருக்கயிலாய யாத்திரைக்காக வந்திருக்கும் அனைவருக்கும் நல்வரவு என்னும் பேனர் எங்களை வரவேற்றது. இந்த மருத்துவமனை ITBP மருத்துவமனைக்கு எதிரிலேயே இருந்தது. மருத்துவமனையில் ஒரு மருத்துவர் கூடவே இருந்து குழுவினரின் எல்லா தேவைகளையும் கவனித்துக் கொண்டார். இரத்த பரிசோதனைகளுடன், நீரிழிவு நோய் இருக்கின்றதா என்பதற்கான பரிசோதனை, நுரையீரல், இருதயம், கல்லீர மற்றும் சிறுநீரகங்களும் சரியாக செயல்படுகின்றனவா என்பதற்கான பரிசோதனைகளும் நடைபெறுகின்றன. மார்பு எக்ஸ்-ரே, TMT (Tread Mill Test), ECG , முதலிய எல்லா பரிசோதனைகளும் நடைபெறுகின்றன. எங்கள் குழுவில் நான்கு பேர் TMTனால் மருத்துவ பரிசோதனையில் தேறவில்லை. பின் மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகளைப் பெற்றுக் கொண்டு ITBP மருத்துவமனை சென்றோம் அங்கு மீண்டும் இரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டு யாத்திரைக்கு தேர்ந்தெடுக்கபட்டவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. எங்களுடன் வந்த 12 பேர் நிராகரிக்கப்பட்டனர், அவர்கள் பல மணி நேரம் ITBP மருத்துவர்களிடம் கெஞ்சிப் பார்த்தனர் ஆனால் பயன் ஒன்றும் இல்லை. அந்த ஆண்டவனின் சித்தம் அதுவானால் என்ன செய்வது என்று அவர்கள் கடைசியாக வெளியே வர இரவு 8 மணி ஆனது. இந்த மருத்துவ முடிவுகளை கூஞ்சி வரை நாம் எடுத்து செல்ல வேண்டும் அங்கு இரண்டாவது மருத்துவ பரிசோதனையின் போது. ITBP மருத்துவர்கள் அவற்றை சரி பார்க்கின்றனர்.


பின் அந்நிய செலாவணி மாற்றத்திற்காக அசோகா ஹோட்டல் கனரா வங்கிக்கு சென்றோம். அந்த வங்கி 24 மணி நேரமும் திறந்திருக்கும். நாம் சீன அரசுக்கு 601 அமெரிக்க டாலர்கள் பணம் செலுத்த வேண்டும், (2008 வருடத்தில் இத்தொகை 700 அமெரிக்க டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது) ஒரு டாலர் விசா முத்திரைக்காக. எங்களுக்கு முன்னால் சென்ற குழுவினர் எந்த வரிசை எண் (serial number) கொண்ட அமெரிக்க டாலர் நோட்டுகளை žன வங்கிகள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன என்ற விவரம் L.O மூலம் எங்களுக்கு அறிவிக்கப்பட்டது அந்த வரிசை எண்களை நாங்கள் ஒதுக்கி விட்டோம்.




மேலும் கைலாய கிரிவலத்தின் போது குதிரை, போர்ட்டர்கள் முதலியவற்றுக்கும் , மற்றும் žனப்பகுதியில் செய்யும் செலவுகளுக்கும் žன யுவான் தேவைப்படும். தக்லகோட்டில் நாம் அமெரிக்க டாலர்களை žன யுவான்களாக மாற்றிக் கொள்ளலாம். பணமாற்றம் முடிந்தபின் அனைவரும் குஜராத் சதன் திரும்பினோம். பல பேர் தேர்ந்தெடுக்க படாதற்கு சிறிது வருத்தம் இருந்தது ஆயினும் அடியேனும் எனது அறை நண்பரும் தேர்ந்தெடுக்கப்படதற்கு 108ம் எண் அறையில் தங்க வைத்த இறைவனுக்கு 1008 நமஸ்காரங்கள் கூறி தூங்கச் சென்றோம்.






எங்கள் குழுவினர் (14வது குழு 2005)






எங்கள் குழுவினரின் சிறு அறிமுகம். மிகவும் வயதானவர் சீமா பண்டிட் என்னும் 66 வயதான மூதாட்டி ஜெயிப்பூரைச் சார்ந்தவர், இரண்டாவது தடவையாக எப்படியும் கயிலைநாதனை, ம வளர் கண்டரை, இலை புனை வேலரை, செஞ்சுடர் வண்ணரை, சாந்த மார்பரை, ஏறது ஏறியவரை, தரிசிக்க வேண்டும் என்ற திட சங்கல்பத்துடன் வந்தவர், சரியாக TMT செய்ய முடியவில்லை, எங்கள் குழுவில் இருந்த மரூத்துவரின் ஆலோசனையின் பேரில் Echo test எடுத்து ITBP மருத்துவரிடம் சண்டையிட்டு, இறையருளால் எங்கள் குழுவில் வந்தவர். இரண்டாவது வயதானவர் திரு, குல்கர்னி அப்பா ராவ், இவரது வயது 65. எங்களில் பலரை விட உடல் ஆரோக்கியத்துடன் இருந்தவர், மஹாராஷ்டிர மாலத்தில் உள்ள ஒமர்காம்வ் என்ற இடத்தை சார்ந்தவர். எங்கள் குழுவில் மொத்தம் ஐந்து பெண்கள், மூன்று பேர் தங்கள் கணவருடன் இந்த யாத்திரையை மேற்கொண்டனர். நாசிக்கை சேர்ந்த போக்ரே தம்பதியினர் (மருத்துவர்), குஜராத்தை சேர்ந்த அட்ரோஜா தம்பதியினர், மற்றும் கிம்ஜி தம்பதியினர் என்ற மூவர். இன்னொரு பெண் யாத்திரி மேற்கு வங்காளத்திலிருந்து வந்திருந்த ஷர்மிஷ்டா தத்தா அவர்கள். அதே மாநிலத்தைச் சேர்ந்த IITயில் பேராசியராக ப புரியும் திரு கஞ்சன் சௌத்ரி அவர்கள். குஜராத்திலிருந்து திரு ஜோஷ’, இரண்டாம் தடவை யாத்திரை வந்தவர், திரு கோஸ்வாமி , திரு ஜெய்ராம்டோண்டா, திரு பிஹாரிலால் புரோகித், திரு தினேஷ் படேல், திரு சுசில் குமார் மோடி, திரு பிரஜாபதி ஆகியோர் மற்றவர்கள். மஹாராஷ்டிராவிலிருந்து எனது அறை நண்பர் திரு சஷிகுமார் தபஸ்வி, மும்பையிலிருந்து திரு வினாயக் ரோக்டே( ஹோமியோபதி மருத்துவர்) ஆகியோர். தமிழர்கள் இருவர் அடியேனும், டில்லியில் பணி புரியும் திரு தனுஷ்கோடியும். வேறு தென் மாலங்களிலிருந்து வேறு யாரும் இல்லை. டெல்லியிலிருந்து திரு தேவேந்திர குமார் முட்கல், பல முறை 12 ஜோதிர் லிங்கங்களை சார் தாம் (Char Dham) என்றழைக்கப்படும் வடக்கில் உள்ள பத்ரி நாதம், மேற்கில் உள்ள துவாரகை, கிழக்கில் உள்ள பூரி ஜகந்னாதம், தெற்கில் உள்ள இராமேஸ்வரம், ஆகிய நான்கு தலங்களையும் பல முறை தரிசித்தவர் , மற்றும் இந்தோரைச் சேர்ந்த திரு இந்திரேஷ் புரோகித் இருவரும் இரண்டாவது தடவை யாத்திரை மேற்கொண்டனர். மேலும் ஜெயிப்பூரை சேர்ந்த திரு சஞ்ஜ“வ் மிட்டல், பிரோஜாபத்தை சேர்ந்த திரு மனிஷ் குமார் வர்மா. எங்கள் குழுவின் குறைந்த வயதுக்காரர் ஒரு žக்கியர் 25 வயதான திரு அமந்தீப் சிங் என்கிறவர். யமுனா நகரை சேர்ந்தவர். இவ்வாறு பல் வேறு வண்ண மலர்களைக் கொண்ட மாலையாக விளங்கியது எங்கள் குழு. தமிழர்களாகிய நமக்கு இந்த மாதிரி யாத்திரைகளில் இரு குறைபாடுகள் இருக்கும். ஒன்று உணவு ஆம் வட இந்திய உணவே இங்கு வழங்கப்படுகின்றது, மற்றொன்று ஹ’ந்தி மொழி மற்றவர்களுடன் கலந்துரையாட தேவை, அடியேன் நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 20 வருடங்களாக பயாற்றியுள்ளதால் அந்த இரண்டும் எந்த வகையிலும் பிரச்சினையாக இருக்கவில்லை.




யாத்திரை தொடரும்...............