Sunday, January 26, 2020

வெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 16

மானசரோவர் புனித நீராடல்

மானசரோவரின் கரையில் இரவு தங்கினோம். அதிகாலையில் இருள் பிரியாத நிலையில் எழுந்து சில அன்பர்கள் மானசரோவரில்  இறங்கி குளிக்கும் பாக்கியம் கிட்டியது. சூரிய வெளிச்சம் வந்த பின் எழுந்தவர்களுக்கு அப்பாக்கியம் கிட்டவில்லை. தங்கும் விடுதிகளுக்கு அருகில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்திருந்தனர். மேலும் எங்களை அழைத்து சென்ற சேர்ப்பாக்களும் யாராவது ஏரியில் இறங்கி குளித்தால் எங்களது அனுமதி இரத்தாக்கும் எனவே எங்களுடன் ஒத்துழையுங்கள், என்று வாளிகளில் மானசரோவர் தீர்த்தத்தை முகர்ந்து கொடுத்தனர்பெருபான்மையோர் கரையில் நின்று அத்தீர்த்தத்தில் குளித்தோம். ஒரு வருடம் மே மாதம் யாத்திரை செய்த போது ஏரி முழுவதும் உறைந்திருந்தது. அவ்வருடம் எனவே பனியை உடைத்து தண்ணீரை இவ்வாறு வாளியில் முகர்ந்து குளித்தோம். இவ்வருடமும் அதே போலத்தான் குளிக்க முடிந்தது.




மானசரோவர் கரையிலிருந்து திருக்கயிலை நாதர்  தரிசனம்




புனித நீராடல் 




அபிஷேகம் 

அடுத்து அவரவர்கள் கொண்டு வந்திருந்த மூர்த்திகளை மானசரோவரின் கரையில் வைத்துஎதிரே இருக்கின்ற திருக்கயிலை நாதருக்கு அபிஷேகம்பூசைகள் செய்வது போல பாவித்து அபிடேகம் செய்து பூசனைகள் செய்தோம்நன்றாக மழை பெய்து அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று மலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரை இறைஞ்சினோம்










 வில்வ தளங்களால் அர்ச்சனை




அடுத்து  சுற்றுலா நிறுவனத்தினரின் சார்பில் நடைபெற்ற யாகத்தில் பங்கேற்றோம்பௌர்ணமியன்று நடைபெற்றிருக்க வேண்டிய யாகம் தாமதமாக வந்ததினால் மூன்று நாள் கழித்து நடைபெற்றதுயாத்திரிகளில் ஒரு சிவாச்சாரியார் இருந்தார் அவரே யாகத்தை சிறப்பாக நடத்தினார்அனைவரும் பிரசாதம் பெற்றுக்கொண்டோம்.




மானசரோவர் கரையில் யாகம்


சியூ புத்த விகாரம்



மானசரோவர் விடுதி

பிறகு மதிய உணவிற்குப்பின் டார்ச்சனுக்கு புறப்பட்டோம்இத்தடவை சியூ புத்த விகாரம் செல்ல முடியவில்லைடார்ச்சன் செல்லும் வழியிலும் ஐயனின் அருமையான வெள்ளிக் கவசம் போர்த்திய தரிசனம் கிடைத்ததுஎந்த வித சிரமமும் இல்லாமல் டார்ச்சன் வந்தடைந்தோம்இங்கும் சென்ற தடவை போல சோதனை இருக்கவில்லைஇங்கும் ஏமாற்றம் தொடர்ந்தது அவர்கள் கூறியபடி தங்கும் விடுதியில் தங்க வைக்கவில்லை ஒரு மோசமான விடுதியில் தங்க வைத்தனர்.. ஐயனின் பல்வேறு கோலங்களை தரிசித்தோம்.


டார்ச்சனில் இருந்து திருக்கயிலாய தரிசனம் 


சரியாக உடல் பலப்படாததால் பலருக்கு உடல் நிலை சரியாக இல்லாமல் இருந்தது சேர்ப்பாக்கள் அனைவரது இரத்த அழுத்தத்தையும்உடலில் உள்ள பிராண வாயுவின் அளவையும் பார்த்துசரியாக உள்ளவர்களை மட்டுமே கிரி வலத்திற்கு அனுமதித்தனர்அடியேனுக்கு இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருந்ததால்  கிரி வலம் செய்யும் வாய்ப்பு இத்தடவை கிட்டவில்லைஎல்லாம் அவன் செயல்என்று மனதை தேற்றிக்கொண்டு அவரின் காலடியில் அமர்ந்திருந்தேம்குழுவினரில் பாதிக்கு மேற்பட்டவர்கள்  செல்ல முடியாமல் போனதுகிரி வலத்தை அனைவரும் முழுதாக முடித்தனரா என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே

No comments: