மானசரோவர் கரையில் ஹோமம்
அதிகாலை நேரத்தில் திருக்கயிலை நாதர் தரிசனம்
இரவில் சந்திர ஓளியில் மானசரோவரின் அழகையும் நிர்மலமான வானத்தில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களையும் கண்டு களித்தோம். அதிகாலையில் அருணோதய காலத்தில் திருக்கயிலாயத்தின் அழகையும் மானசரோவரின் அழகையும் கண்டு களித்தோம்.
சூரிய உதயத்தின் போது மானசரோவரின் அழகு
உதய கால வர்ண ஜாலம்
இன்றைய தினம் மானசரோவரின் கரையில் ஒரு முக்கியமான கடமையை முடித்தோம். சிவசக்திக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக யாகங்கள் செய்தோம். முதலில் அனைவரும் மானசரோவரில் புனித நீராடிவிட்டு, தங்கள் தங்கள் பூஜா மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்து அலங்காரம் முடித்து ஹோமகுண்டத்தின் அருகில் அனைவரும் அமர்ந்தோம்.
மேகம் நிறைந்த நிலையில் மானசரோவரின் அழகு
யாகத்தை ஆசீர்வதிக்கும் திருக்கயிலைநாதர்
யாகம் துவக்கம்
கணபதி ஹோமம், மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம், பஞ்சாட்சர ஹோமம், துர்கா ஹோமம் என்று ஹோமங்கள் செய்து சிவசக்திக்கு நன்றி செலுத்தினோம். ஒரு குழுவினர் வேதம் ஓதினர், ஒரு குழுவினர் திருமுறைகள் இசைத்தனர். ஒரு பக்கம் ஓம் நமசிவாய மந்திரம் ஓதுபவர்கள் என்று தெய்வீக சூழல் நிலவியது. அனைத்து பக்தர்களும் கொண்டு வந்த யாக பொருட்களால் மிகவும் திருப்திகரமாக யாகம் முடிவடைந்தது.
திருமுறைகள் இசைப்போர்
ருத்ரம் மற்றும் சாம வேதம் ஓதும் குழுவினர்
வலம் சுழித்து எழுந்த யாகத்தீ
யாத்திரையின் போது எல்லா தேவைகளையும் கவனித்துக்கொண்ட சேர்ப்பாக்கள்
சியூ கோம்பாவின் அழகு
இத்தார்சாலை டார்ச்சன் வரை செல்கின்றது
திருமகன் முருகன் தேவியேல் உமையாள்
திருமகள் மருமகன் தாயாம்
மருமகன் மதனன் மாமனேல் இமவான்
மலையுடை யரையர்தம் பாவை
தருமலி வளனாம் சிவபுரன் தோழன்
தனபதி சாட்டியக் குடியார்
இருமுகம் கழல் மூன்று ஏழுகைத்தலம் ஏழ்
இருக்கையில் இருந்த ஈசனுக்கே
-கருவூர் தேவர் விசைப்பா
யாத்திரை தொடரும் . . . . . . . . .
சியூ கோம்பாவின் அழகு
இத்தார்சாலை டார்ச்சன் வரை செல்கின்றது
மானசரோவரின் கரையில் ஒரு முக்கிய கடமையை திருப்திகரமாக முடித்தபின் பேருந்து மூலம் டார்ச்சன் புறப்பட்டு சென்றோம்.
திருமகன் முருகன் தேவியேல் உமையாள்
திருமகள் மருமகன் தாயாம்
மருமகன் மதனன் மாமனேல் இமவான்
மலையுடை யரையர்தம் பாவை
தருமலி வளனாம் சிவபுரன் தோழன்
தனபதி சாட்டியக் குடியார்
இருமுகம் கழல் மூன்று ஏழுகைத்தலம் ஏழ்
இருக்கையில் இருந்த ஈசனுக்கே
-கருவூர் தேவர் விசைப்பா
யாத்திரை தொடரும் . . . . . . . . .
No comments:
Post a Comment