மானசரோவரின் கரையில்
அந்தி சாயும் வேளையில் பொன்னார் மேனி தரிசனம்
ஐயனின் அருமையான முதல் தரிசனம், மானசரோவரில் புனித நீராடல், குர்லா மாந்தாதா சிகரங்கள் மற்றும் இராக்ஷஸ் தால் ஏரி கண்டு களித்து விட்டு மாலை சூரியன் மறையும் நேரம் ஜைடியை (குஹு) அடைந்தோம். அன்றிரவும் மறு நாளும் இங்கு தங்கினோம்.
ஜைடியில் அமைந்துள்ள புத்த விகாரத்தின்
அருகில் உள்ள பெயர்ப்பலகை
மானசரோவர் ஏரி வலம் மற்றும் திருக்கயிலாய கிரி வலப்பாதையில் பல இடங்களில் இது போன்ற பெயர்ப்பலகைகளைக் காணலாம். இதில் கிரிவலப்பாதை விவரம் மற்றும் ஏதாவது அவசர உதவி தேவையென்றால் நாம் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது.
சியூ புத்த விகாரத்தில் உள்ள ஒரு ஸ்தூபி
குன்றின் மேலிருந்து பறவைப் பார்வையில் மானசரோவரின் அழகு
சிறு குன்றின் மேல் அமைந்துள்ள சியூ புத்த விகாரம்
மானசரோவர் கரையில் மொத்தம் 8 புத்த விகாரங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் ஜைடியில் உள்ள புத்த விகாரம் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது. மானசரோவரை அடைந்தவுடன் அங்கு சென்று மாலை வெயிலில் ஐயன் தங்க மயமாக மின்னும் அழகை கண்டு இரசித்தோம்.
பிரார்த்தனை உருளைகள்
அந்தி சாயும் நேரத்தில் வர்ணஜாலம்
வான மகள் நாணி சிவந்ததால் எங்கு காணினும் ஒரே ஆரஞ்சு நிறமாக இருந்தது.
திபெத்தில் பயணம் செய்த போது குரு பத்மசம்பவர் இந்த்ச புத்த விகாரத்தில் ஒரு வாரம் தங்கியிருந்தாரம் மற்றும் பல அற்புதங்களையும் அவர் இங்கு செய்திருக்கின்றார். சீன புரட்சியின் போது இந்த புத்த விகாரமும் சேதப்படுத்தப்பட்டது. பின்னர் புதுப்பிக்கப்பட்டது. அடியோங்கள் சென்ற சமயம் விகாரத்தில் உள்ள ஓவியங்களுக்கு புது வர்ணம் தீட்டப்பட்டுக்கொண்டிருந்தனர். சந்தன மரத்தால் ஆன பத்மசம்பவரின் அழகிய சிலை இந்த புத்த விகாரத்தில் அமைந்துள்ளது.
சியூ புத்த விகாரத்தில் உள்ள ஓவியங்கள்
புத்த விகாரத்தின் மர வேலைப்பாடு
முழு நிலவின் மறு நாள் மானசரோவர் கரையில்
நேபாளத்தில் நிலச்சரிவின் காரணமாக ஒரு நாள் தாமதமாக மானசரோவர் கரைக்கு வந்து சேர்ந்தோம், ஆயினும் சந்திரனில் சீதள ஒளியில் மானசரோவரின் அழகையும் வானத்தில் ஆயிரக்கணக்கில் நட்சத்திரங்கள் மின்னும் அழகையும் கண்டு களித்தோம். திரும்பி வந்து மறு நாள் ஹோமத்திற்கான ஏற்பாடுகளை செய்தோம்.
அண்ணலே எணையாண்டு கொண்டு அருளிய அமுதே
விண்ணிலே மறைந்தருள்புரி வேதநாயகனே
கண்ணினால் திருக்கயிலையில் இருந்த நின் திருக்கோலம்
நண்ணி நான் தொழ நயந்தருள்புரி என பணிந்தார் - அப்பர்
யாத்திரை தொடரும் . . . . . . . . .
No comments:
Post a Comment