அம்பலத்தில் ஆனந்த தாண்டவம் ஆடும் ஐயனின் தரிசனம் காண புறபட்ட ஒன்பதாம் நாள் (15-05-2011) யாத்திரிகள் அம்மையப்பர் நித்ய வாசம் செய்யும் திருக்கயிலை மலையின் முழு தரிசனம் பெற்றனர் மற்றும் கிரிவலமும் செய்தனர்.
டார்ச்சன் முகாமில் இருந்து தெற்கு முகத்தின் மேல் பகுதியும், கிழக்கு முகத்தின் முன் பகுதியும் தரிசனம் செய்கின்றனர். பின்னர் யமத்துவாரம் வரை வண்டியில் பயணம் செய்து அங்கிருந்து ஐயனின் தெற்கு முகத்தின் முழு தரிசனம், கணேசர் தரிசனம் செய்து. யமத்துவாரத்தில் நுழைந்து யமபயம் தவிர்த்த, ஐயனின் தேவபூமியில் நடந்து சென்று பின் மேற்கு முக தரிசனம் செய்து பின் வடக்கு முகத்தின் எதிரில் உள்ள முகாமிற்கு சென்று தங்கினர். இவ்வாறு இன்றைய தினம் ஐயனின் நான்கு முகங்களையும் தரிசனம் செய்தனர்.

இதுவரை பூவுலகில் இருந்த நாம் இதற்குள் நுழைந்தபின் ஐயனது சிவலோத்திற்குள் நுழைகின்றோம் என்பது ஐதீகம். யமத்துவாரத்திற்குள் நுழைந்து சிவபெருமானை தரிசனம் செய்பவர்களுக்கு யமபயம் கிடையாது. அகால மரணமும் கிடையாது. ஐயனால தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த பாக்கியம் கிட்டும். இங்கிருந்துதான் கைலாய கிரிவலம் தொடங்குகின்றது. மொத்தம் 52 கி.மீ தூரம் மூன்று நாட்களில் யாத்திரிகள் கிரி வலத்தை முடிக்கின்றனர்.
யமதுவாரத்தில் இருந்து அகோர முக தரிசனம்
இந்த ஆற்றின் கரையோரமாகவே முதல் நாள் கிரிவலம் செய்கின்றனர் யாத்திரிகள் இந்த ஆறே சிந்து நதியாக பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பாய்கின்றது.
மேற்கு முகத்தின் பல்வேறு தோற்றங்கள்
புராணங்களின் படி இம்முகம் தொங்கிய தாடி உடையதாய் வெளிப்பட்ட பற்களுடையதாகி, கண்டோர்க்கு அச்சமாய் கரிய நிறமாகி ( அல்லது நீலநிறமாகி) வயதான முகம் போல் வலத்தோளில் தெற்கு நோக்கி இருக்கும் முகம். இம்முகம் தனி சிவனாரான தக்ஷிணாமுர்த்தியை குறிக்கின்றது. பஞ்ச பூதங்களில் இம்முகம் அக்னியை குறிக்கின்றது. ஐந்தொழிலிலே அழித்தல் தொழிலை (சம்ஹார காரண முகம்) குறிக்கின்றது. ஐந்தெழுத்தில் 'சி'. ஐயன் அகோர ருத்ர ரூபம். அம்மை இச்சா சக்தி. இம்முகம் நீலக்கடலைப் போன்ற நீல ஒளி விடும் நீலக்கல்லாக ஒளிர்கின்றது என்பது ஐதீகம். இந்தியாவை நோக்கி உள்ள முகம் இதுதான். நமக்கு முதலில் தரிசனம் தரும் முகம். ஜடா முடியும் திரி நேத்ரங்களும் உள்ள முகம். அகோர முகம் மனக்குழப்பங்கள் உடனடியாக தீரும், எல்லா விதமான நோய்கள் போக்கும். அறிவுத்திறனும் ஞாபகத்திறமையும் அதிகரிக்கும்.
ஐயனுக்கு வலப்பக்கத்தில் உள்ள சிறு குன்றுதான் கணேசர். ஐயனின் தெற்கு முகத்தை தரிசனம் செய்யும் போது முதலில் அம்மையப்பரை கிரிவலம்செய்த கணேசரையும் தரிசனம் செய்கின்றோம்.சொர்ணமயமான ஊஞ்சலில் கமனீயமாய் அமர்ந்திருக்கும் பால் வெண்ணிறணிந்த பவள நிற எம்பெருமானையும், பச்சை நிற அம்பாளையும் எப்போதும் தமது மூச்சுக்காற்றால் குளிர்வித்துக் கொண்டு இருப்பவர் நந்தியெம்பெருமான். அவரையும் இம்முகத்திற்கு எதிரே மலை ரூபமாக தரிசனம் செய்கின்றோம். அசுர பலம் கொண்ட இராவணன் கயிறு கட்டி கைலாய மலையை இழுத்த வடு இந்த முகத்தில் நமக்கு காணக்கிடைக்கின்றது.
சத்யோஜாதம் என்று அழைக்கப்படும் இம்முகம் புராணங்களின் படி அரசம் பூ போல் வெண்மை நிறமாய் பிடரியில் மேற்கு நோக்கி இருக்கும் முகம். பஞ்ச பூதங்களில் பூமியை குறிக்கின்றது , ஐந்தொழிலில் படைத்தல் தொழிலைக் குறிக்கின்றது (பிரம்ம ஸ்ருஷ்டி காரண முகம்). ஐந்தெழுத்தில் 'ந'. இம்முகம் செந்றம் கொண்ட மாக்கக் கல்லாக ஒளிர்கின்றது என்பது ஐதீகம். இம்மும் அடிமுடி காணவவொண்ணா அண்ணாமலையாக, எவரும் அண்ணாத ( அண்டாத அண்டமுடியாத) அக்னி மலையாக, நெருப்புத்தூணாக, இயன் முதன் முதலில் திருஉருக்கொண்ட ஸ்தாணு லிங்க உருவாக வராக உருவில் திருமாலையும் தன்னோடு கொண்ட விஷ்ணு பாகத்தை குறிக்கின்ரது. கைலாயத்தில் மற்ற முகங்கள் குவிந்து உள்ளன ஆனால் இம்முகம் மட்டும் குழியாக உள் வாங்கி இருக்கின்றது. அனேகமாக பெரும்பாலான திருக்கோவில்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் போது கிழக்கு முக மண்டலமாகவோ அல்லது மேற்கு முக மண்டலமாகவோதான் பிரதிஷ்டை செய்வர். திருமயிலையிலே கபாலீஸ்வரர் சத்யோஜாத மூர்த்தியாக மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
உறைந்த லா சூ ஆறு
ஐயனுக்கு வலப்பக்கத்தில் உள்ள சிறு குன்றுதான் கணேசர். ஐயனின் தெற்கு முகத்தை தரிசனம் செய்யும் போது முதலில் அம்மையப்பரை கிரிவலம்செய்த கணேசரையும் தரிசனம் செய்கின்றோம்.சொர்ணமயமான ஊஞ்சலில் கமனீயமாய் அமர்ந்திருக்கும் பால் வெண்ணிறணிந்த பவள நிற எம்பெருமானையும், பச்சை நிற அம்பாளையும் எப்போதும் தமது மூச்சுக்காற்றால் குளிர்வித்துக் கொண்டு இருப்பவர் நந்தியெம்பெருமான். அவரையும் இம்முகத்திற்கு எதிரே மலை ரூபமாக தரிசனம் செய்கின்றோம். அசுர பலம் கொண்ட இராவணன் கயிறு கட்டி கைலாய மலையை இழுத்த வடு இந்த முகத்தில் நமக்கு காணக்கிடைக்கின்றது.
சத்யோஜாதம் என்று அழைக்கப்படும் இம்முகம் புராணங்களின் படி அரசம் பூ போல் வெண்மை நிறமாய் பிடரியில் மேற்கு நோக்கி இருக்கும் முகம். பஞ்ச பூதங்களில் பூமியை குறிக்கின்றது , ஐந்தொழிலில் படைத்தல் தொழிலைக் குறிக்கின்றது (பிரம்ம ஸ்ருஷ்டி காரண முகம்). ஐந்தெழுத்தில் 'ந'. இம்முகம் செந்றம் கொண்ட மாக்கக் கல்லாக ஒளிர்கின்றது என்பது ஐதீகம். இம்மும் அடிமுடி காணவவொண்ணா அண்ணாமலையாக, எவரும் அண்ணாத ( அண்டாத அண்டமுடியாத) அக்னி மலையாக, நெருப்புத்தூணாக, இயன் முதன் முதலில் திருஉருக்கொண்ட ஸ்தாணு லிங்க உருவாக வராக உருவில் திருமாலையும் தன்னோடு கொண்ட விஷ்ணு பாகத்தை குறிக்கின்ரது. கைலாயத்தில் மற்ற முகங்கள் குவிந்து உள்ளன ஆனால் இம்முகம் மட்டும் குழியாக உள் வாங்கி இருக்கின்றது. அனேகமாக பெரும்பாலான திருக்கோவில்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் போது கிழக்கு முக மண்டலமாகவோ அல்லது மேற்கு முக மண்டலமாகவோதான் பிரதிஷ்டை செய்வர். திருமயிலையிலே கபாலீஸ்வரர் சத்யோஜாத மூர்த்தியாக மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
இந்த ஆற்றின் கரையோரமாகவே முதல் நாள் கிரிவலம் செய்கின்றனர் யாத்திரிகள் இந்த ஆறே சிந்து நதியாக பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பாய்கின்றது.
மேற்கு முகத்தின் பல்வேறு தோற்றங்கள்
3 comments:
தெளிவான படங்கள்...
ஐயனின் திருமுகங்கள் பற்றிய விளக்கங்களுடன் கட்டுரை....
தொடர்கிறேன்
நிகழ்காலத்தில் சிவா
நன்றி நிகழ் காலத்தில் அடியேனும் தொடர்கிறேன். ஒரு தொடுப்பும் கொடுத்திருக்கின்றேன் அடியேனின் வலைப்பதிவில்.
உள்ளம் பெருங்கோவில்
ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு
வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு
சீவன் சிவலிங்கம்
ஐம்புலன்களும் காலா
மணிவிளக்கு .
திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
http://sagakalvi.blogspot.com/
Please follow
(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo
Online Books
http://www.vallalyaar.com/?p=409
Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454
Post a Comment