Wednesday, August 14, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -40 (திருக்கயிலாய யாத்திரை-2012)

மூன்றாம் நாள் கிரி வலம் 

மூன்றாள் நாள் கிரி வலத்தை துவக்குகின்றோம்

கிரி வலத்தின் போது அமீத் அஹர்வால்

                                                              கிரி வலத்தின் போது நிஷ்டா பாண்டே

சீரான பாதை  வெயிலாகவும் இருந்தது 

ஜாங் ஜெர்பூ ஆற்றின் இரு கரையிலும் வாகனம் செல்லும் வகையில்
 பாதைகள் தயார் ஆகிக் கொண்டுள்ளன


கிரிவலப்பாதையிலிருந்து குர்லா மாந்தாதா  மலைச் சிகரம்






பிரார்த்தனை ஸ்தலம்



எங்கள் குழுவினர்



கருட தரிசனம் 

 சிலர் குதிரையில் பயணம் செய்தனர்

 அஜய் கௌசிக்


திபெத்திய குழந்தை - தாய்


கோரா வரும் திபெத்தியப் பெண்

 முதலில் மண்டியிடுகிறார்


பின்னர் சாஷ்டாங்க நமஸ்காரம்



இறுதியில் அஷ்டாங்க நமஸ்காரம் 

இப்படியே  முழு கிரி வலப் பாதையும் அடி விழுந்து கும்பிட்டு கோராவை முடிக்கின்றனர்.


10ம் நாள் கிரி வலம் முடித்து சாகா வரை பேருந்து  பயணம் (580 கி.மீ)

மறு நாள் காலை எப்போதும் போல் எழுந்து காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு கிரி வலத்தை முடிக்க கிளம்பியபோதுதான் தெரிந்தது  வலது முழங்காலை நகர்த்த முடியவில்லை என்று, எப்படியாவது சென்று விடலாம் என்று சிறிது தூரம் நடக்க முயற்சி செய்தேன் முடியவில்லை. வேறு வழியில்லை குதிரையில்தான் செல்ல முடியும் என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டு நின்ற போது இரு குதிரைக்காரர்கள் கண்ணில் பட்டனர். ட்ராங்டோ வருகின்றீர்களா? என்று கேட்க 100 யுவான்களுக்கு வர சம்மதித்தனர். இவ்வாறாக கிரி வலத்தின் மூன்றாம் நாளும் குதிரையில் பயணம் செய்யும்படி ஆனது. வரும் வழியில்  திவ்யமாக மானசரோவர் மற்றும் குர்லா மாந்தாதா மலைச் சிகரங்களின் தரிசனம் கிட்டியது. மூன்று நாள் கிரி வலத்திலும் இன்றைய தினம்தான் மிகவும் சுலபமானது. பாதையும் சமவெளியில் உள்ளது, ஒரி சிறிதளவுதான் ஏற்ற இறக்கம், நன்றாக வெயில் அடித்தது. யாருக்கும் எந்தவித சிரமமும் இருக்கவில்லை.

கருப்புக் கண்ணாடி அணியாமல் பனிப்பகுதியில்  யாத்திரை செய்த எங்கள் குழுவைச் சார்ந்த திரு.முகர்ஜி அவர்களுக்கு கண்கள் சிவந்து விட்டது கன்னமெல்லாம் கன்னிப் போய் ரோஜா நிறம் ஆகிவிட்டது. எங்களிடம் இருந்த கண் மருந்து போட்டோம். ஆகவே அவசியம் புறஊதா கதிர்களை தடுக்கக்கூடிய கருப்புக் கண்ணாடி எடுத்துச்சென்று பயன்படுத்துங்கள்.  பின்னர் அனைவரும் மதியம் சுமார் 12 மணியளவில் ட்ருங்டோ (Trungto) வந்து சேர்ந்தோம். எந்த குறையும் இல்லாமல் அருமையான தரிசனம், மற்றும் கிரி வலத்தை  முடிக்க அருள் புரிந்ததற்காக முக்கண் முதல்வருக்கும், அன்னை மலை மகளுக்கும் நன்றி கூறினோம்.   பின்னர் எங்களுக்காக அங்குக்  காத்துக்கொண்டிருந்த பேருந்தில் ஏறி டார்ச்சன் வந்தடைந்தோம்.






No comments: