Saturday, May 09, 2020

இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே

கண்ணார் அமுதனே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி


 


திருக்கயிலாய யாத்திரிகளின் நெடு நாளைய கனவு இன்று நனவாகியுள்ளது என்ற செய்தியை இன்று நாளிதழில் படித்த போது இன்பத்தேன் வந்து காதில் பாய்ந்தது.

இந்தியா வழியாக இது வரை திருக்கயிலாய யாத்திரை மேற்கொண்ட அன்பர்கள் மிக அதிக தூரம் நடைப் பயணம் வழியாக செல்ல வேண்டி இருந்தது. அதனால் யாத்திரைம் காலமும் மிக அதிகமாக இருந்தது.

அடியேன் 2005 ஆண்டு சென்ற போது  யாத்திரை காலம் 30 நாட்களாக இருந்தது. பிறகு 2013ல் அது 25 நாடகளாக குறைக்கப்பட்டது.  2016ல் நாதுலா- கணவாய் வழியாக புது பாதை அறிமுகப்படுத்தப்பட்டது.

2020ல் இப்பாதை திறக்கப்பட்டுள்ளது. எனவே நடைப்பயணம் இல்லாமல் பேருந்து மூலம் லிபு கணவாய் வரை அன்பர்கள் பயணம் செய்யமுடியும். நேபாளம் வழியாக சென்று சுற்றுலா அமைப்பாளர்களிடம் ஏமாற வேண்டிய அவசியம் இனி இல்லை.

இனி நாதுலா கணவாய் வழியாக செல்வது நிறுத்தப்படும் என்று தெரிகிறது. மேலும் லிபு கணவாயை அடைய ஐந்து கி.மீ பாதை இல்லை அது  2022 ல் தான் முழுமையடையும் என்றும் தெரிகிறது.

முழு விவரம் வெளி வரவில்லை. இவ்வருட யாத்திரைக்கான அழைப்பும் இன்னும் வரவில்லை வந்தவுடன் அவ்விவரங்களுடன் தங்களை சந்திக்கின்றேன் அன்பர்களே.

ஓம் நமசிவாய 


No comments: