Tuesday, July 09, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -36 (திருக்கயிலாய யாத்திரை-2012)

பனி படர்ந்த டோல்மா மலையில் 

இரண்டாம் நாள் கிரிவலம் அதிகாலையில் ஐயனின் தரிசனம்

 சந்திரன் இன்னும் மறையவில்லை

 அருணோதயக் காட்சி

 மலை உச்சிகளில் சூரிய ஒளிகுதிரைகளுக்காக காத்திருக்கிறோம்குதிரையில் ரஷ்மி அம்மா


பனி படர்ந்த டோல்மா மலையில் இரண்டாம் நாள் கிரிவலம்

ஒருவர் பின் ஒருவராக  கடுமையான மலையேற்றம் 
 வெள்ளிக் கவசம் பூண்ட கிழக்கு முகத் தொடர்ச்சி
மேகம் மற்றும்  பனியில்லாத சமயத்தில் கிழக்கு முக தொடர்ச்சி


                                                                   வழியில் அஹர்வால் மற்றும் சுதார் சுடு நீர் பருகும் நிஷ்டா பாண்டே

 ஓய்வெடுக்கும் ஒரு குழுவினர்

டோல்மாவை நெருங்குகிறோம்

 இதோ டோல்மா


 கருட பார்வையில் நாங்கள் நடந்த ஒரு வழிப் பாதை

ஒன்பதாம் நாள்- டோல்மா தரிசனம்  டேராபுக்கிலிருந்து ஜுடுல்புக் நடைப் பயணம்

திருக்கயிலாய கிரி வலத்தின் இரண்டாம் நாள்  காலை எழுந்து வெளியே வந்து பார்த்தால் எங்கும் பனி மயம் ஐயனும் நிர்மால்யமாக வெள்ளிப் பனியில் காலை சூரிய ஒளியில் மின்னிக் கொண்டிருந்தார். அப்போதுதான் புரிந்தது முதல் நாள் இரவு நன்றாக பனி பெய்திருக்கின்றது என்று, கிரி வலம் செய்த அசதியில் நன்றாக உறங்கி இருக்கின்றோம் என்று. ஐயனை வணங்கி காலைக் கடன்களை முடித்துக்கொண்டு கிரி வலத்தை தொடங்கினோம். பாதி குழுவினரின் கூடாரங்கள் கண்ணில் படவில்லை. கிரி வலப்பாதையை நோக்கிய போது சீராக எறும்புகள் செல்வது போல  வரிசையாக ஒரு வழிப் பாதையில் பக்தர்கள் ஏறிக்கொண்டிருந்தனர். முன் தினம் போலவே மதிய உணவவிற்காக ஒரு பொட்டலம் தந்தனர் நாம் நம்முடைய நொறுக்குத் தீனியை எடுத்து செல்வது அவசியம்தான்.

எங்கு நோக்கினும் ஒரே வெள்ளைப் பனிதான் ஒரு இடத்தில் கூட பாறகளை இயற்கை நிறத்தில் காண இயலவில்ல. சென்ற தடவை சென்ற போது எங்கள் குழுவினர் மட்டுமே அன்றைய தினம் கிரி வலம் செய்தோம். இன்றோ எத்தனை குழுக்கள் என்பது தெரியவில்லை. ஆயினும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் இருப்பர். கிரி வலத்திற்கு இப்போத்தான் அனுமதி கிடைத்தது என்பதாலும்,முதல் நாள் சாகா தாவா பண்டிகை என்பதால் அதைப் பார்க்க வந்த பக்தர்களாகவும் இருக்கலாம் ஆயினும் கூட்டம் அதிகமாவே இருந்தது. மலையேற்றப் பாதையில் ஒருவர் பின் ஒருவராக இராணுவ வீரர்கள் போல பக்தர்கள் மலை ஏறிக்கொண்டிருந்தனர்.

எங்கள் குழுவில் சிலர் இன்றைய தினம் குதிரையில் செல்ல விரும்பினர். டோல்மா வரைக்கும் 200யுவான்களுக்கு அவர்களுக்கு குதிரை கிடைத்தது. குதிரைக்காரர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரே நாளில் இரண்டு மூன்று தடவை மேலும் கீழும் செல்ல முடியும் என்பதால்  சிறு தூரம் செல்லவே விரும்பினர். முதல் நாள் பெய்த பனி உருகி உருகாத பனியில் சிறு சிறு அடியிட்டு மிகவும் மெதுவாக ஏறினோம். செங்குத்தான ஏற்றம், வழுக்கும் பாதை , பக்தர்களும் அதிகம் ஆகவே மெதுவாகவே மலை ஏற முடிந்தது. ஐந்தெழுத்து மந்திரத்தையும் அன்னையின் மந்திரத்தையும் மனதில் ஜபித்துக் கொண்டே சுமார் மூன்று மணி நேரம் மலையேறி டோல்மா கண்வாயை அடைந்தோம். 

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான படங்களின் மூலம் பயணித்தோம்... வாழ்த்துக்கள்....

gayathri said...

very very beautiful and awe-inspiring narration. Breath-taking pictures. Is there anyway I can get the pix as a slides how?

Hariharan

gayathri said...

very very beautiful and awe-inspiring narration. Breath-taking pictures. Is there anyway I can get the pix as a slides how?

Hariharan

Muruganandam Subramanian said...

மிக்க் நன்றி தனபாலன்

Muruganandam Subramanian said...

There is an option in picasa to convert pictures into slides I will try that and then later send the same to you, it will take some time pl bear with me. Givw your eamil id so that i will be able to mail the same to you.