தினமலர் நாளிதழில் வந்த செய்தி. 2013- 2014 நிதியாண்டில் திருக்கயிலாயம் மற்றும் முக்திநாத் புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் இந்த மானியாத்திற்காக விண்ணப்பம் செய்யலாம்.
http://temple.dinamalar.com/news_detail.php?id=25895
செய்தி இதோ:
புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்!
அரசிதழில் வெளியிடப்பட்ட அரசு ஆணைக்கான சுட்டி இதோ:
http://tnhrce.org/Maanasarovar.pdf
விண்ணப்பப் படிவத்திற்கான சுட்டி இதோ :
http://tnhrce.org/manosarover-tamil.pdf
முக்கிய அம்சங்கள்:
1. தமிழகத்தை சார்ந்த இந்துக்கள் மட்டுமே விண்ணப்பம் செய்யலாம். வட்டாச்சாரியர் சான்றிதழ் தேவை.
2. 2013-2014 நிதியாண்டில் யாத்திரை செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 70 வயதுள்ளவர்கள் தகுதி உடையவர்கள்.
3. ஒரு மாதத்திற்குள்ளாக வேண்டிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
4. இரு யாத்திரைகளிலும் 250 யாத்திரிகளுக்கு மானியம் வழங்கப்படும். திருக்கயிலாய யாத்திரைக்கு ரூ. 40000/- மற்றும் முக்திநாத யாத்திரைக்கு ரூ. 10000/- மானியம் வழங்கப்படும்.
5. வருமானம் குறைந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 250 பேருக்கு மேல் இருந்தால் குலுக்கள் நடத்தப்படும்.
6. திருக்கயிலாய யாத்திரையில் அரசு யாத்திரை மூலமாக செல்பவர்களுக்கு முன்னுரிமை, நேபாள் வழியாக சென்றவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
7. திருக்கயிலாய யாத்திரை சென்றவர்கள் உரிய படிவத்தில், வட்டாட்சியர் சான்று, இருப்பிட சான்று, வயது சான்று, கட்டண சான்று நகல், கடவு சீட்டு நகல், விசா நகல் மற்றும் பயண அட்டையுடன் 18-01-2014க்கு முன்பாக இந்து சமய நிலைத் துறை ஆணையருக்கு விண்ணப்பம் செய்யவும்.
8. முக்திநாத் யாத்திரை சென்றவர்கள் உரிய படிவத்தில், வட்டாட்சியர் சான்று, இருப்பிட சான்று, வயது சான்று, பயண சீட்டு நகல், புகைப்படங்கள் -3 மற்றும் பயண திட்ட நகலுடன் 18-01-2014க்கு முன்பாக இந்து சமய நிலைத் துறை ஆணையருக்கு விண்ணப்பம் செய்யவும்.
தகுதியுள்ள அன்பர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.