Saturday, October 31, 2015

நாதுலா கணவாய் வழி திருக்கயிலாய யாத்திரை - 7

மானசரோவரின் கரையில் 



மூன்று நாள்  கிரி வலத்தை அவனருளால் நிறைவு செய்த அன்பர்கள் பின்னர் மானசரோவர் கரையில் வந்து இரண்டு இரவுகள் தங்கினர். மானசரோவரில் புனித நீராடினர். கரையில் யாகம் நடத்தி சிவ பார்வதிக்கு நன்றி செலுத்தினர்.   


மானசரோவர் தடாகம் 

மானசரோவர் கரையில் யாகம் 



அதிகாலை நேரத்தில் மானசரோவரின் அழகு




அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் தேவர்கள் நட்சத்திரங்களாக வந்து மானசரோவரில் நீராடி சிவபார்வதியை தரிசிக்கும் கண்கொள்ளா காட்சியை காணும் பாக்கியம் இவர்களுக்கு கிட்டியது என்பது மிகவும் மகிழ்ச்சியாக, மனம் உருகி அந்த மலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் கருணையை கொண்டாடி கூறினார் சிங் அவர்கள்.     

                                                                                                                                                                                                                                                                                                                                                   யாத்திரை தொடரும் . . . . . . 

Kailash Yatra via Nathu La pass -6

2nd Day's Parikrama

Eastern extension of Kailash

Snow covered peaks

Thisday the pilgrims cross the highest point in the whole yatra Dolma Pass which is revered as the residence of Mother Parvati. Worship Mother get her blessings and then  have the darshan of Gauri Kund which is the bathing Ghat of Mother Parvati and collect the holy water of Gauri Kund which is believed to have medicinal qualities and climb down and continue a loooooooooooong trek upto Zhuthukphuk and stay there. 

Snow on the route nearing Dolma Pass




Gauri Kund - the bathing ghat of Mother Parvati



 LOOOOng Trek to Zhutulphuk after the descent from Dolma Pass


This day Kailash is not visible as it is obscured by the guard mountains. The trek continues on the banks of Zhong Chu  River. 

Mani stones with Buddhist Mantras


On the banks of Zhong Chu River 
                                                                                                                                                                                                                                                                                                                                     Yatra continues . . . . . . 

Sunday, October 11, 2015

நாதுலா கணவாய் வழி திருக்கயிலாய யாத்திரை - 6

இரண்டாம் நாள் கிரிவலம் 


திருக்கயிலாயத்தின் கிழக்குத் தொடர்ச்சி 


இன்றைய தினம் யாத்திரையின் உயரமான டோல்மா கணவாயில் பார்வதி அன்னையை தரிசனம் செய்து பின்னர் கௌரி குண்டம் தரிசித்து கீழே இறங்கி வந்து நீண்ட தூரம் நடந்து வந்து ஜாங்ஜெர்பூ வந்து தங்குகின்றனர்.   

டோல்மாவை நெருங்கும் போது  பாதையில் பனி




கௌரி குண்டம் 



டோல்மாவில் இருந்து இறங்கி நடைப்பயணம் 


இன்றைய தினம் திருக்கயிலாயத்தின் தரிசனம் கிட்டுவதில்லை. ஜாங் சூ ஆற்றின் கரையோரம் நடக்கின்றனர். 

புத்த மந்திரங்கள் எழுதப்பெற்ற மணிக்கற்கள் 


ஜாங் சூ ஆற்றங்கரையில் 
                                                                                                                                                                                                                                                                                                                                     யாத்திரை தொடரும் . . . . . . 

Kailash Yatra via Nathu La pass -5

1st day of Kailash Parikrama 

The earlier groups which performed the yatra from Darchen proceeedd to Quhu stayed there on the banks of Manasarovar and performed the yagna and returned back to Darchen and proceeded to the holy Circumbulation of Kailash. But this group straight away proceeded for the parikrama of Kailash and then on the return journey satayed for two nights on the banks of Manasarovar. They were not able to visit Asthapath. 

The summit of Kailash as seen from Darchen 

From Darchen one gets to see only the sunmmit of the South face of Kailash. From Yamdwar one get the fulll view of teh South face along with Ganesh and Nandi 

Yandwar

The land above yamdwar is considered holy land. So yamdwar is a portal to the holyland. The yatris enter into yamdwar and worship the Lord and then proceed  on the parikrama. 

The trek route 

Prostrating Tibetans 


A waterfall on the way


Satyojat- the west face

On the first day of parilrama one gets tosee alll the faces of teh Lord, from Darchen and yamdwar on e can see the south face, in between thet see the west face and at the completion of the yatra they stay at Deraphuk where they see the North face of the lord. 


மேற்கு முக தரிசனம்


                                                                             
                                                                                                                                                    
The river flowing from North face

North face 
The yatris stay at Deraphuk which is just opposite to this face of the  Lord at the conclusion of the first days parikrama. 
                                                                         Yatra continues .......

Wednesday, October 07, 2015

நாதுலா கணவாய் வழி திருக்கயிலாய யாத்திரை -5

திருக்கயிலாய கிரிவலம் - முதல் நாள்

இவ்வழியில் முதலில் யாத்திரை மேற்கொண்ட மற்ற குழுக்கள் எல்லாம் டார்ச்சனில் இருந்து மானசரோவர் ஏரிவலம்  மற்றும் யாகம் முடித்து மீண்டும் திருக்கயிலாய கிரிவலம்   மேற்கொண்டு பின்னர் அங்கிருந்து அப்படியே டாங்போ திரும்பினார்கள். ஆனால் இவர்கள் முதலில் டார்ச்சனில் இருந்தே திருக்கயிலாய கிரி வலத்தை மேற்கொண்டார்களாம். முதல் நாள் கிரி வலத்தின் சில காட்சிகளை இப்பதிவில் காண்கின்றீர்கள். 

டார்ச்சனில் இருந்து திருக்கயிலாய தரிசனம் 

டார்ச்சனில் இருந்து தெற்கு முகத்தின் உச்சியின் தரிசனம் மட்டுமே கிட்டுகின்றது அக்காட்சியை கான்கின்றிகள். 

யமத்துவாரம்

பொதுவாக யாத்திரிகள் யமதுவாரத்தில் நுழைந்து  தெற்கு முகத்தையும் கணேசரையும், நந்தியெம்பெருமானையும் தரிசனம் செய்து ஐயனை அடிவீழ்ந்து வணங்கி பின்னர் கிரிவலத்தை துவக்குகின்றனர். இதற்கு மேல் உள்ள பகுதி தேவ பூமி என்பது ஐதீகம். 


கிரி வலப்பாதை 

அடி விழுந்து வணங்கி கிரிவலம் செய்யும் திபெத்தியர்கள் 


கிரி வலம் செய்யும் வழியில் ஒரு அருவி 



இந்த முதல் நாள் கிரி வலத்தின் போது ஐயனின் அனைத்து முகங்களையும் தரிசனம் செய்யும் பாக்கியம் உள்ளது.  டார்ச்சனில் இருந்து தெற்கு முகத்தின் உச்சி, யமதுவாரத்தில் இருந்து தெற்கு முகத்தின் முழு தரிசனம், பின்னர் மேற்கு முக தரிசனம், முதல் நாள் கிரி வலத்தின் நிறைவாக டேராபுக்கில் வடக்கு முகத்தின் திருவடியில் தங்குகின்றனர்.   


மேற்கு முக தரிசனம்



வடக்கு முக நதி 

வாமதேவம் 

                                                                             
                                                                                                                                       யாத்திரை தொடரும் . . . . . .