இன்றைய தினம் திருக்கயிலாய கிரி வலத்தின் நிறை நாள். மலையரசன் பொற்பாவை மற்றும் திருக்கயிலை நாதரின் மாப்பெரும் கருணையினால் யாரும் பெற முடியாத அற்புத தரிசனம் பெற்று அவரை வலம் வந்து அவர் அருள் எங்கள் குழுவினர் அனைவரும் பெற்ற நாள். யாருக்கும் எந்த வித சிரமமும் எற்படால் காத்தது சிவசக்திதான். தூய அன்போடும் பக்தியோடும் நாம் முயற்சி செய்தால் அந்த பரமன் யாரையும் கை விடுவதில்லை, இன்று வரை அது சத்திய பிரமாணமாக நடந்து வருகின்றது. ஆகவே அன்பர்களே அம்மையப்பன் மேல் பாரத்தை போட்டுவிட்டு யாத்திரையை அவர் தாள் வணங்கி ஆரம்பித்தால் அவரே நம் கையைப்பிடித்துக்கொண்டு வந்து சேர்த்து விடுகின்றார் என்பது சத்தியம்.
மைசேர்ந்த கண்ட முடையாய் போற்றி
மாலுக்கு மோராழி யீந்தாய் போற்றி
பொய் சேர்ந்த சிந்தை புகா தாய் போற்றி
போகாதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
மெய்சேரப் பால்வெண்ணி றாடீ போற்றி
மிக்கார்க ளேத்தும் விளக்கே போற்றி
கைசே ரனலேந்தி யாடீ போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி (16)
திருக்கயிலாய கிரிவலத்தின் மூன்றாம் நாள், ஜாங்ஜெர்பூவிலிருந்து டார்ச்சென் செல்லும் பாதையிலும் நமக்கு கயிலாய மலையின் தரிசனம் கிடைப்பதில்லை. இடப்பக்கம் ஜாங் சூ ஆறு ஆழத்தில் ஓடுகின்றது, நாம் குர்லா மந்தாதா மலைகளையும், மானசரோவர், மற்றும் இராக்ஷஸ் தால் ஏரியையும் இன்றைய தினம் கண்ணுறலாம். முதல் இரண்டு நாள் கடினமான பயணத்திற்குப்பின் இன்றைய நடைப்பயணம் அவ்வளவு சிரமமானதாக தெரியவில்லை. டோல்மா கணவாய் தான் கிரிவலப்பாதையின் அல்ல அல்ல மொத்த யாத்திரையின் உயரமான இடம் என்பதால் மூன்றாவது நாள் கிரிவலம் இறக்கம் என்பதாலும் இருக்கலாம்.
ஜாங் என்றால் அதிசயம் என்று பொருள் அந்த ஜாங்-சூ நதியை ஒட்டியே பாதை செல்கின்றது. இரண்டு பக்கமும் நெடிதுயர்ந்த மலைத்தொடர்கள். வாழ்க்கை என்பது ஏற்றமும் இறக்கமும் . இன்பமும் துன்பமும் உடையது என்பதை உணர்த்துவது போல பாதையிலும் பல ஏற்றங்கள், இறக்கங்கள். இவ்வாறு இந்த புண்ய பூமியில் நடந்து செல்லும் போது என் மகனைப்பற்றி னைக்காமல் இருக்க முடியவில்லை. கர்ம பூமியாம் இந்த பூலோ கத்தில் ஜனனம் எடுத்து, அவன் யாருக்கும் எந்த துன்பமும் தராமல், யாராலும் அவனுக்கு எந்த துன்பமும் ஏற்படாமலும் தான் கழிக்க வேண்டிய கர்மங்களையெல்லாம் கழித்து, அந்த எம்பெருமானின் திருப்பாதங்களிலே சென்று சேர்ந்திருப்பான். இப்போது எங்கள் கோனுக்கும், எங்கள் பிராட்டிக்கும் தொண்டனாக சேவை செய்து கொண்டிருப்பான், அவன் எங்களுக்கு மகனாக பிறந்து அவனுக்கு நாங்கள் எந்த பிறவிலேயோ பட்ட கடனை தீர்க்க உதவி செய்த அந்த பரம் பொருளை வணங்கிக் கொண்டே காதல் ஆகி கசிந்து கண்ர் மல்கி திருவைந்தெழுத்தை ஜபித்துக் கொண்டே கிரி வலத்தை தொடர்ந்தேன்.
கணபதியும், முப்பத்து முக்கோடி தேவர்களும், கந்தர்வ கின்னரர்களும், யக்ஷர்களும், அப்ரஸ்களும், ரிஷ’களும், முனிகளும், எத்தனை எத்தனையோ புண்யவான்களும், சிவத்தொண்டர்களும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கால் பதித்து நடந்த அந்த தேவ பூமியில் அடியேனும் நடக்க அரூள் பாலித்த அந்த சிவசக்திக்கு அனந்த கோடி நன்றிகள் கூறி வணங்கினோம். கிடைத்த வாய்ப்பிற்காக பெருமைப்பட்டோம், ஜென்ம சாபல்யம் அடைந்ததற்கு மகிழ்ச்சி அடைந்தோம். மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அதை அனுபவித்தால் மட்டுமே உணர முடியும். எத்தனை பிறவிகளில் நாமும் நமது முன்னோர்களும் செய்த புண்ணீயத்த்தினால் இந்த பொன்னான வாய்ப்பு கிட்டி அம்மையப்பரை வலம் வரும் பாக்கியம் சித்தித்தது.
இன்றைய கிரி வலத்தின் போது அடியளந்து கும்பிட்டு கோராவை செய்யும் திபெத்திய பெண்களை கண்டோம், என்னே அவர்களது பக்தி, கையிலும், முழங்காலிலும் சிராய்ப்பு ஏற்படாமலிருக்க காப்புகள் அந்துள்ளனர். அந்த ஆக்சிஜன் குறைந்த குளிர் நிறைந்த இடத்தில் இவ்வாறு கடினமான உடலை வறுத்தும் செயல் செய்யும் அவர்களைக் கண்டு ஆச்சிரியப்படாமலிருக்க முடியவில்லை. வழியிலே பல இடங்களில், திபெத்தியர்கள் கற்களை குவியலாக அடுக்கி அதன் மேல் யாக்கின் கொம்புகளை வைத்துள்ளனர்.
கற்குவியலும் யாக் கொம்புகளும்
மேலும் அந்த கற்களில் அவர்களின் ஸ்லோகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. டார்சென்னிலிருந்து சுமார் 5 கி.மீ முன் வரை இப்போது வாகனம் செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. எங்கள் குழுவினரில் குதிரைகளில் பயணம் செய்யாதவர்கள், வாகனத்தில் ஏறி டார்ச்சென்னை அடைந்தனர். டார்ச்செனை அடையும் போது மீண்டும் தெற்கு மற்றும் கிழக்கு முகத்தின் ஒரு பகுதியின் தரிசனம் கிடைக்கின்றது. கிரி வலத்தை எந்த சிரமமும் இல்லாமல் முடித்த சந்தோஷத்தில் இறைவனுக்கு நன்றி தெரிவித்தோம்.
பின் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு குளித்து துணிகளை துவைத்து உலர்த்தினோம். பின் தனி டிரக் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு மும்பை புகைப்படக்ககாரர் கூறியஅலி ரோடு என்ற இடத்திற்கு சென்றோம்.
அம்மையப்பரின் திருவடியில் எங்கள் குழுவினர்
இந்த இடத்திலிருந்து கைலாய மலையின் தெற்கு முகத்தின் முழு தரிசனமும் கிடைக்கின்றது. யம துவாரத்திலிருந்து பெற்ற தரிசனத்தை விட அருமையான தரிசனம். அடுத்த நாள் பிரதோஷமும் சிவாராத்திரியும் இனைந்த நாள் எம்பெருமானை தரிசனம் செய்வது மிகவும் விசேஷம் என்பதால் காலையில் அஷ்டபத் வரை சென்று எம்பெருமானை தரிசனம் செய்து விட்டு பின் மானசரோவர் கிரிவலத்தை தொடங்குவோம் என்று முடிவு செய்தோம். வீட்டிற்கும், நண்பர்களுக்கும், வெற்றிகரமாக கயிலாய கிரி வலத்தை முடித்த செய்தியை கூறினோம்.
ஐயனின் அற்புத தரிசனம் கண்டபின் காரைக்காலம்மையார் படத்தின் பாட்டுத்தான் ஞாபகம் வந்தது காலை வெய்யிலே உன் தங்க றத்தையும், உச்சி வெய்யிலிலே உன் வெண்ணீறணிந்த மேனியையும், இரவினிலே உன் நீல கண்டத்தையும் தரிசனம் செய்கின்றேன் என்பது போல பல்வேறு வர்ணங்களிலும் எம்பெருமானை கிரிவலத்தின் போது தரிசித்தோம். உண்மையாகவே திருக்கயிலாயம் ஒரு விராட் சிவ லிங்கம் போல விளங்குகின்றது, தக்ஷி்ண மூர்த்தமாக தாரை போல கிழக்குப்பக்கம் உள்ள சிவஸ்தலம் விளங்க லிங்க ரூபமாக விண்னையும் மண்€ணையும் இனைப்பது போல திருக்கயிலாயம் விளங்குகின்றது.
இவ்விடத்தில் žனப்பகுதியின் குதிரைக்காரர்களைப்பற்றி சிறிது சொல்ல விழைகின்றேன், இந்தியப்பகுதியில் உள்ளவர்கள் போல் இவர்கள் அவ்வளவு ஒத்துழைப்பு தருவதில்லை, எப்போதும் பணத்திலேயே குறியாக உள்ளனர், மேலும் அவர்கள் பேசும் மொழியும் நமக்கு புரிவதில்லை என்பதால் எல்லாம் சைகை பாஷைதான். அதிலும் அவர்கள் இஷ்டப்படிதான் குதிரைகளில் நம்மை உட்கார அனுமதிக்கின்றனர். ஆகையால் நாம் குதிரையில் சென்றாலும் கிட்டதட்ட பாதி தூரம் நாம் நடந்தே பரிக்கிரமாவை முடிக்கிறோம். எங்கள் குழுவில் சிலருக்கு இவர்களினால் சிறு துன்பம் ஏற்பட்டது.
No comments:
Post a Comment