விமானத்திலிருந்து இமய மலையின் அற்புத காட்சி-1
எங்கள் யாத்திரையினருக்கு கிடைக்காத, இவர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு, பௌர்ணமியன்று மானசரோவரின் அந்த அற்புத அழகைக் கண்டு களிக்கும் வாய்ப்பு, ஆம் இவர்கள் ஹோர்ச்சு முகாமில் தங்கிய நாள் பௌர்ணமி நாள். பூர்ண சந்திரனின் அமுத ஒளியில் மானசரோவரின் அழகை வர்க்க வார்த்தைகளே இல்லை என்றார் என் நண்பர். அரசு நடத்தும் யாத்திரையில் ஆறு நாட்களுக்கு ஒரு குழு கிளம்புவதால், அனைவருக்கும் பௌர்ணமி தரிசனம் கிடைப்பதில்லை, ஆனால் தனியார் நிறுவனத்தினர் நடத்தும் இந்த யாத்திரை அனேகமாக பௌர்ணமியன்று மானசரோவரில் இருப்பது போல் தான் நடத்தப்படுகின்றது.
பன்னிரெண்டாம் நாள் காலையில் மானசரோவர் கரையில் பூஜைகளை முடித்துக் கொண்டு அதிகமாக தங்காமல் , பரியாங் , சாகா வழியாக ஒரு நாள் முன்னதாகவே காத்மாண்டுவை அடைந்தார்களாம். கிடைத்த அந்த ஒரு நாளில் காத்மாண்டுவிலிருந்து விமானம் மூலம் மலை தரிசனம் காண சென்றார்களாம். அட்டவனைப்படி பன்னிரண்டாம் நாள் 277 கி மீ மானசரோவரிலிருந்து ப்ரியாங் பயணம். பதிமூன்றாம் நாள் பரியாங்கிலிருந்து சாகா 185 கி. மீ பயணம், பதினான்காம் நாள் சாகாவிலிருந்து நைலாமூ அல்லது ஜாங்மூ பயணம் சுமார் 300 கி .மீ பயணம். பதினைந்தாம் நாள் காத்மாண்டு திரும்ப அடைதல்.
கௌரி சங்கர் சிகரங்கள்
கிடைத்த ஒரு நாளில் இமய மலையின் சிகரங்களை கண்டு களித்தார்களாம். எவரெஸ்ட் சிகரம், கௌரி சங்கர் சிகரம் கஞ்சன் ஜங்கா சிகரம் ஆகியவற்றை விமானத்திலிருந்து கண்டு களித்தார்களாம். பின் வெற்றிகரமாக யாத்திரை முடித்த மகிழ்ச்சியுடன் தாய் நாடு திரும்பினார். செல்லும் போது பனி அதிகமாக இருந்தால் வெறும் அஷ்டபத் வரை சென்று தரிசனம் செய்து விட்டு வந்து விட வேண்டியதுதான் என்று தான் சென்றார் என் நண்பர் ஆனால் ப்ரிக்கிரமாவும் முடித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
இரண்டு வழிகளிலும் இயற்கை žற்றங்களை சந்திக்க வேண்டியுள்ளது. சாதக பாதகங்கள் உள்ளன. ஆனால் நாம் எவ்வாறு வர வேண்டும் எப்போது வர வேண்டும், எந்த தரிசனம் பெற வேண்டும் என்பதை அந்த ப்ரபஞ்ச நாயகரே முடிவு செய்வதால் நமது கையில் எதுவும் இல்லை என்பது மட்டுமே உண்மை. எனவே உனது தரிசனம் தா என்று வேண்டுவதே நாம் செய்யக்கூடிய ஒரே செயல் மற்றவற்றை அவர் கவனித்து கொள்கின்றார்.
இனி நேபாள் வழியாக செல்லும் போது ஆகும் செலவு. ரூபாய் 59000/- காத்மாண்டுவிலிருந்து காத்மாண்டு வரை. இதில் செல்லும் போது இரு நாள் காத்மாண்டுவில் தங்கும் செலவு, சுற்றுலா, ஜ“ப் கட்டணம், உணவு, தங்கும் செலவு, ஒரு கேன் மானசரோவர் தீர்த்தம், வரும் போது காத்மாண்டுவில் தங்கும் செலவு ஆகியவை அடங்கும். சென்னையிலிருந்து காத்மாண்டு செல்லும் கட்டணம் நம்முடையது. போர்ட்டர் , குதிரை மற்ற பொருட்கள் சுமார் 15000/-. காத்மாண்டுவிலிருந்து அரை நாள் இமய மலை தரிசனத்திற்கு ரூபாய் 3500/- ஆக மொத்தம் சுமார் சுமார் 75000/- செலவாகும்.
விமானத்திலிருந்து இமய மலையின் அற்புத காட்சி-2
இத்துடன் இந்தியா வழியாக செல்லும் யாத்திரை பற்றி விரிவாகவும், நேபாளம் வழியாக செல்லும் யாத்திரைபற்றி சுருக்கமாகவும் கண்டீர்கள். கடந்த நான்கு வருடங்களாக சென்று வருபவர்கள் பல பேருடன் பேசியதில் ஒவ்வொருவரின் அனுபவும் ஒவ்வொரு விதமாகவே உள்ளது, ஆகவே அனைத்தையும் கூறுவது என்பது நிச்சயம் முடியாது , ஆயினும் இதுவரை கூறியவை நிச்சயம் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று அடியேன் நம்புகிறேன்.
இனி அடுத்த பதிவில் யாத்திரை சம்பந்தமான சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டு அந்த சிவசக்தியின் அருளால் இத்தொடர் நிறைவடையும். அதற்குப் பின்னரும் தரிசனம் தொடர்ந்து கொண்டிருக்கும் அவர்கள் அருளால்.
**************
Please also visit
" picasaweb.google.com/jeyceebee "
for more photos of the yatra.
No comments:
Post a Comment