Tuesday, September 03, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -44 (திருக்கயிலாய யாத்திரை-2012)

                                    சாகாவிலிருந்து  காத்மாண்டு திரும்புதல்

பசுமையான  சாகா நைலாம் பாதை

அருமையான தார் சாலை



வழியில் பிரார்த்தனைக் கொடிகள்.....


சுரங்கப் பாதைகள் 




நீர் வீழ்ச்சிகள்

என்று பார்த்துக்கொண்டே  நைலாம் தாண்டி...

கொடாரி வந்தடைந்தோம்

நட்புப்பாலம் - கொடாரி


சீன கட்டிடங்கள்

யாத்திரை சுகமாக முடித்த மகிழ்ச்சியுடன் 
 அடியேன் மற்றும் பாபு

கொடாரி வீதிகளில் விளையாடும் சிறுவர்கள்



காத்மாண்டு பயணம் செய்த பேருந்து


11ம் நாள் சாகாவிலிருந்து காத்மாண்டு பயணம் (501 கி.மீ)


மறு நாள் காலை எழுந்து சாகா நகரை ஒரு சிறு வலம் வந்தோம், ஒரு பெரிய இராணுவ முகாம்கள் நிறைந்த  நகரம்தான்,  பல பள்ளிகள் உள்ளன, சீருடையில் பல பள்ளி சிறார்கள் சென்று கொண்டிருந்தனர், பல உயர்தர ஹோட்டல்களையும் கண்டோம். காலை சுமார் 8  மணிக்கு சாகாவிலிருந்து கிளம்பினோம். முதல் நாள் பயணம் செய்ததோ பாலை வனப் பாதை இன்று பயணம் செய்ததோ பசுமையான பாதை.  சென்ற வழியிலேயே திரும்பி வந்தோம், நைலமை நெருங்கிய போது நகரின் உள்ளே செல்லாமல் அப்படியே புறச்சாலை வழியாக பயணித்து  கொடாரியை அடைந்தோம். அங்கு சைனாவில் இருந்து வெளியே வருவதில் எந்த சிரமமும் இருக்கவில்லை. நாங்கள் எங்களது மதிய உணவை முடித்துவிட்டு அங்கு  விளையாடிக் கொண்டே, யாத்திரிகளிடம் சாக்லெட், தின் பண்டங்கள் ஆகியவற்றை  பெற்றுக் கொண்டிருந்த கொடாரி குழந்தைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.  நாங்கள் கொண்டு சென்ற பொருட்கள் மற்றும்  எங்களின் பைகள் எல்லாம்  அன்றைய தினம்  சீனர்கள்  திருப்பித்தரவில்லை, சீனப் பகுதியிலேயே இருந்து விட்டது. பேருந்து வந்து சேர்ந்தவுடன் அங்கிருந்து காத்மாண்ட்டிற்கு புறப்பட்டோம் வழியெங்கும் ஒரே போக்குவரத்து நெரிசல் மிகவும் மெதுவாகத்தான் வண்டி ஊர்ந்தது. காத்மாண்டு வந்து சேரும் போது  இரவாகிவிட்டது. அங்கு தேமல் பகுதியில் உள்ள மர்ஸ்யாங்க்டி (Marshyangdi) ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்திருந்தனர். அன்றிரவு அருமையாக உறங்கினோம். 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களுடன் பயணம் அருமை... தொடர்கிறேன்...

இராஜராஜேஸ்வரி said...


"கயிலை மலையானே போற்றி! போற்றி!

அருமையான பயணப் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!