Tuesday, November 12, 2019

வெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 6

இன்று ஐப்பசி பௌர்ணமி பல சிவாலயங்களில் ஐயனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் முடிந்தவர்கள் ஆலயம் சென்று கோடி சிவ தரிசன பலன் நல்கும் அன்னாபிஷேகத்தை கண்டு இறைவன் அருள் பெற வேண்டுகிறேன். அன்னாபிஷேகத்தின் சிறப்பை பற்றி அறிந்து கொள்ள இங்கு செல்லவும்  அன்னாபிஷேகம்
*********



விசா சமயத்தில் கிடைக்காததால் காத்மாண்டில் தங்கிய இரண்டாம் நாள் தக்ஷிணகாளி என்றழைக்கப்படும் ஆலயத்தை தரிசித்தோம். காத்மாண்டில் இருந்து சுமார் 22 கி.மீ தூரத்தில் காட்டின் இடையே இரு ஆற்றின் சங்கமத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. ஃபரிப்பிங் என்னும் கிராமம்  வரை வாகனங்கள் செல்கின்றன. பின்னர் அங்கிருந்து நடந்து செல்ல வேண்டும். நம்மை ஒரு அலங்கார வளைவு வரவேற்கின்றது. உள்ளே இரு புறமும் பல கடைகள் உள்ளன. பூசை பொருட்கள் மற்றும் பலி மிருகங்கள் இக்கடைகளில் கிடைக்கின்றன. என்ன இப்போதும் பலியா? என்று நினைக்கின்றீர்களா? நமது பாரத தேசத்தில், தாந்திரீக முறையில் பூசை நடைபெறும் மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இன்றும் பல அம்மன் ஆலயங்களில் இன்றும் பலி கொடுக்கும் வழக்கம் உள்ளது. அவ்வாறே நேபாளத்திலும் பல அம்மன் ஆலயங்களில் இன்றும் பலியிடப்படுகின்றது. இத்தக்ஷிணகாளி ஆலயத்திலும் பலியிடும் வழக்கம் உள்ளது. குறிப்பாக செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகள் மிகவும் அதிகமாக ஆட்டுக்கிடாக்கள், சேவல், வாத்து அதிகமாக பலியிடப்படுகின்றனவாம்.


மனாங் விடுதி 

( அருமையான மரவேலைப்பாடு மற்றும் அஷ்ட மங்கலப்பொருட்கள்)





ஆலயம் செல்லும் வழி


பூர்ணவதீ கங்கையும் - உத்தரவதீ கங்கையும் சங்கமம்


மல்ல அரசன் ஒருவனின் கனவில் வந்து அம்மன் கூறியதால் இவ்வாலயம் இவ்விடத்தில் அமைந்ததாம். 1855ல் இராணி ராஷ்மோனி அம்மனை இங்கு ஸ்தாபித்தார் என்கின்றனர்அம்மனை வழிபட எதிரிகள் நாசம்மற்றும் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்குஹ்யேஸ்வரி அம்மன் ஆலயத்தில் திருமணங்கள் எவ்வாறு அதிகமாக நடைபெறுகின்றதோ அது போலவே இத்தலத்தில் திருமணங்கள் நடைபெறுகின்றன.



பிரம்மாண்ட காண்டா  மணி
(மணியில் செய்யப்பட்டுள்ள நுண்ணிய வேலைப்பாடுகளைக் காணுங்கள்)



பைரவர்



அடியோங்கள் சென்ற தினம் ஏகாதசி என்பதால் அன்று பலி இல்லை என்பதால் ஆலயத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்கூட்டமும் இருக்கவில்லைபாதையிலிருந்து படிகளின் வழியே கீழிறங்கி ஆற்றைக் கடந்து ஆலயத்தை அடைய வேண்டும் வழி முழுவதும்பக்தர்கள் பலியிடப்பட்ட மாமிசத்தை சமைத்து அம்மனுக்குப் படைக்க ஏதுவாக பல அறைகள் கட்டியுள்ளனர்நேபாளத்தில் நவராத்திரி தசைன் என்றழைக்கப்படுகின்றதுஅச்சமயத்தில் ஆயிரக்கணக்கில் பலி கொடுக்கப்படுகின்றது.





பூர்ணாவதி கங்கை என்று மேற்கிலிருந்து ஓடி வரும் ஒரு சிற்றாறும்உத்திரவதி கங்கை என்று வடக்கிலிருந்து  ஓடி வரும் ஒரு சிற்றாறும் கூடும் சங்கமத்தில் அமைந்துள்ளது ஆலயம்.  ஒரு மேடை தான் ஆலயம் ஒரு புறம் கணபதியுடன் சப்த மாதர்களில் சண்டி தவிர மற்ற பிராஹ்மி  மாகேஸ்வரிகௌமாரிவாராஹிநாரசிம்ஹிஇந்திராணி  ஆகிய ஆறு மாதர்கள் கோஷ்டத்தில் அருள் பாலிக்கின்றனர்காளியம்மன் ஒரு கூரையுடன் மட்டும் சர்வாலங்கார பூஷிதையாக  அஷ்ட புஜங்களுடன் அருட்காட்சி தந்தருளுகின்றாள்அம்மனுக்கு எதிரே உள்ள  மேடைக்கு மேலே நாகங்கள் தாங்கும் ஒரு விதானம் மட்டுமே உள்ளதுமேலும் பைரவரும் அருள் பாலிக்கின்றார்காண்டாமணிகள் அமைத்துள்ளனர்அம்மனின் வாகனமான சிம்மம் பல அம்மன் முன்னர் அமைத்துள்ளனர்பக்தர்கள் வேண்டுதலுக்கு பின்னர் அமைத்தனவாக இருக்கலாம்.  தீபங்கள் ஏற்ற ஏதுவாக பித்தளையில் விளக்குகள் அமைத்துள்ளனர்.  சிறிது படியேறி சென்றால் மற்றொரு மாதா ஆலயம் மேலே  உள்ளது அங்கிருந்து காட்டின் அழகை இரசிக்கலாம்.



கணேசர் மற்றும் சப்த மாதர்கள் 



பல்வேறு உயரத்தில் சிம்ம வாகனங்கள்

நாகங்கள் தாங்கும்  விதானம் 


விதானத்தின் உட்பகுதி



போதி சத்துவர் (ஃபர்ப்பிங் கிராமம்)







 காளி அம்மனை தரிசித்து திரும்பி வரும் வழியில் ஃபர்ப்பிங் கிராமத்தில் ஒரு பிரம்மாண்ட போதி சத்துவரின் சிலையை தரிசித்தோம்திபெத்திய   நேவாரி புத்தவிகாரங்கள் பல இக்கிராமத்தில் அமைந்துள்ளனபோதி சத்துவரை வணங்கி இரவு காத்மாண்டு வந்தடைந்தோம்மறு நாள் எங்கு சென்றோம் என்று அறிந்து 
கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.  

No comments: