Thursday, November 10, 2011

திருக்கயிலாய யாத்திரை 2011 -11

இப்பதிவில் காத்மாண்டுவில் இருந்து யாத்திரிகள் சென்ற இரு திருக்கோவில்களில் முதலாவதான மனோ காம்னா தேவி திருக்கோவில் சென்று வந்த படங்களை பார்த்து மகிழுங்கள். மனோ காம்னா என்றால் மனதில் தோன்றும் விருப்பம். அதாவது பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும் அன்னை என்று பொருள். இத்திருக்கோவில் கண்டகி  திரிசூலி நதிக்கரையில் அமைந்துள்ளது என்பது சிறப்பு.


செல்லும் வழியில் சில கடைகள்


மனகாம்னா தேவி செல்ல
இழுவை இரயில் நிலையம்

நிலையத்தின் முகப்பு


மனோ காம்னா தேவி கோவில்

வடநாட்டுக்கோவில்கள் போல் இரண்டு அடுக்குடன் மரத்தில் கோபுரம் எவ்வளவு எழிலாக உள்ளது. சிற்பங்களும் அருமை.

பறவைப்பார்வையில் திரிசூலி நதி




மனோகாம்னா தேவி கோவில் நுழைவு பூங்கா



இழுவை இரயில் வண்டியில் திரு இரவி

பிரார்த்தணை மணிகள்

எண்ணம் நிறைவேற









Wednesday, November 09, 2011

Kailash Yatra 2011 - 11

As the yatri's saved one day by not undertaking the full perikrama, they visited nearby holy places two they visited are Manakamna Devi temple and Muktinath which is also called Salagramam an 108 Divya Desam of Mahavishnu. Muktinath  temple is  situated on the bank of Kandaki iver in which we get the Saligrammam, stone manifestation of Mahavishnu used for worship . In this post you see the views of Manakamna Devi temple. Most of the comments are there in the photos as written by shri Ravi himself.


On way to Manakamna Devi temple


Rope way station to Manakamna Devi

Elevation of Ropeway station



Manakamna Devi temple

View of  Thrisuli  river from above



















Yatra continues.........

Tuesday, November 08, 2011

திருக்கயிலாய யாத்திரை 2011 -10

மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் அற்புத தரிசனமும், அரிதில் கிடைக்கப்பெறும் மானசரோவர் தீர்த்த ஸ்நானமும் முடித்த அன்பர்கள் மானசரோவரில் இருந்து காத்மாண்டு திரும்பி வரும் வழியில் எடுத்த சில படங்கள் இப்பதிவில் கண்டு இன்புறுங்கள் அன்பர்களே.



வரும் வழியில் ஒரு பனி மூடிய சிகரம்


பனி ஆறு

திரும்பி வரும் போது சீக்கிரமாகவே திரும்பி வந்து காத்மாண்டை அடைந்தனர். கிரி வலம் செல்லததால் ஒரு நாள் மீதம் ஆனதால் அந்நாளை காத்மாண்டிற்கு அருகில் உள்ள சில த்ருக்கோவில்களுக்கு செல்ல பயன் படுத்திக்கொண்டனர். அந்த தரிசனத்தை அடுத்த பதிவில் காணலாம்.


காத்மாண்டு நகர காட்சி


விக்ன விநாயகர்

ஹோட்டலில் திரு இரவி அவர்கள்

பேறு பெற்ற அன்பர்கள் சிலர்


Kailash Yatra 2011 - 10

In this post you are seeing some of the pictures taken during the return journey as well as some of the shots of the hotel in which the yatri's stayed at Kathmandu.

A snow clad peak

On way back to Kathmandu




View of Kathmandu street





Co yatri's of Shri Ravi


Sunday, November 06, 2011

திருக்கயிலாய யாத்திரை 2011 -9

15-05-2011 அன்று முதல் நாள் கிரி வலத்தை மட்டும் முடித்த யாத்திரிகள் அடுத்த நாள் சென்ற வழியை திரும்பி வந்து தார்ச்சன் ஆதார முகாமை அடைந்து அடுத்த நாள் காத்மாண்டுவிற்கு திரும்பும் பயணத்தை துவங்கினர். வரும் வழியில் மானசரோவர் ஏரியில் பின்னும் ஒரு முறை புனித நீராடினர் அப்போது எடுத்த படங்களில் சில இப்பதிவில்.






கௌரி - சங்கர்

மானசரோவரை சக்தியாகவும், திருக்கயிலாயத்தை சிவமாகவும். இரண்டும் இணைந்த இந்த காட்சியாஇ சிவசக்தி ரூபமாக கௌரி-சங்கர் என்றும் அழைப்பர். சிவசக்தி தரிசனம் சகல பாவ விமோசனம்.



Another view of Manasarovar




குர்லா மாந்தாதா மலைத்தொடர்கள்


மானசரோவரும், இராக்ஷஸ்தால் ஏரியும் திருக்கயிலாய மலைத்தொடர்கள் மற்றூம் குர்லா மாந்தாதா மலைத்தொடர்களுக்கு இடையில் அமைந்துள்ளன. குர்லா மாந்தாதாதா இராமபிரானின் பாட்டனார். இவர் இங்கு தவம் செய்ததால் இம்மலைத் தொடர்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.


உறைந்து பனியாகிப் போன பிரம்மபுத்திரா நதி





பிரம்மபுத்திரா சலனப்படம்


Saturday, October 29, 2011

Kailash Yatra 2011 - 9


After partly undertaking the parikrama on 15-05-2011 the yatri's returned to Darchen basecamp and from there left for Kathmandu. On the way back on 17-05-2011, they reached Hore and there had the darshan of Manasarovar on the return journey. Witness the scene of great Manasarovar on this post.




Holy Manasarovar Lake





GOWRI - SHANKAR



Combined view of Kailash and Manasarovar is called Gowri - Shankar meaning ShivaParvati. You are witnessing himalayan ranges and Manasarovar lake.



Both Manasarovar and Rakshas Tal are situated between teo great Himalayan ranges one is the Kailash range and the other is the Gurla Mandata ranges.

Another view of Manasarovar




Gurla Mandata Ranges on the other side of Manasarovar






Frozen Brahmaputra River







Video of Frozen Brahmaputra




Friday, October 28, 2011

திருக்கயிலாய யாத்திரை 2011 -8

முதல் நாள் கிரி வலத்தின் போது யமதுவாரத்தில் நுழைந்து ஐயனின் தெற்கு முக தரிசனம் மற்றும் நந்தி, கணேசர் தரிசனம் பெற்று அங்கிருந்து கால்நடையாகவும், குதிரை அல்லது யாக்கின் மேல் பயணம் செய்து டேராபுக் நோக்கி லா சூ நதியின் கரையோரமாக பயணம் செய்து வரும் வழியில் முதலில் ஐயனின் சத்யோஜாத முகமான மேற்கு முகத்தின் தரிசனம் பெற்றபின் பெறும் தரிசனங்கள் இவை.






சத்யோஜாத முகத்தின் முன்புறம் உள்ள
நந்தியெம்பெருமான் தரிசனம்



மேற்கு முகமும் வடக்கு முகமும் இனைந்த காட்சி
மற்றும் நந்தி




மேற்கு வடக்கு முக தரிசனம்




வடக்கு முகத்தின் உச்சியில் ஐயனின் நாகக்குடையை ஸ்பஷ்டமாக தரிசனம் செய்கின்றீர்கள்.






வடக்கு முக தரிசனம்



காப்பு மலைகளாக அவலோகேஸ்வரர் மற்றும் வஜ்ரபாணிக்கிடையே உதிக்கின்ற செங்கதிர்போல திருக்கயிலாயம்














முதல் நாள் டேராபுக் முகாமில் யாத்த்ரிகள் தங்குகின்றனர். இம்முகாம் வடக்கு முகத்தின் நேர் எதிரே அமைந்துள்ளது. நாங்கள் சென்ற வருடம் திருக்கயிலையின் பக்கம் ஜன்னல்கள் இருந்தன தற்போது அதை மாற்றி கதவுகள் அப்பக்கம் அமைத்துள்ளனராம். அறையின் உள்ளே வரும் போதும் செல்லும்போதும் ஐயனின் அருமையான தரிசனம் பெறும் ஒரு அருமையான வாய்ப்பு தற்போது கிட்டுகின்றது.













அதிகாலையில் பொன் வண்ண எம்பிரான்






16-05-2011 கிரி வலத்தின் இரண்டாம் நாள் அதிகாலையிலேயே எழுந்து யாத்திரையின் மிகவும் உயரமானதும் கடினமானதுமான அன்னை மலை மகள் பார்வதியின் இருப்பிடமான டோல்மா கணவாய்க்கு சென்றிருக்க வேண்டும் ஆனால் பனிப்பொழிவு அதிகமாக இருக்கின்றது என்று காரணம் கூறி இவர்களை யாத்திரை அழைத்துச்சென்ற தனியார் நிறுவனத்தினர் அனுமதி கொடுக்காததால் டேராப்புக்கில் அதிகாலை சூரிய உதய தரிசனம் பெற்று பின் திரும்பி ஆதார முகாமிற்கு திரும்பி வந்து விட்டனர்.



















முதலில் அருணொதய காலத்தில் சிவப்பு வர்ணம்





வெயில் நன்றாக அடிக்கும் போது
ஸ்வேத வர்ணத்தில் எம்பிரான்










வாம தேவ முகம்: மாதர் முகம் போல் ஆபரணமந்து வெட்சிபூ றமாய் இடத்தோளின் மீது வடக்கு நோக்கி இருக்கும் முகம், பஞ்ச பூதங்களில் நீரை குறிக்கின்றது. ஐந்தொழிலில் காத்தல் தொழிலைக் ( விஷ்ணு ஸ்திதி காரண முகம்) குறிக்கின்றது. ஐந்தெழுத்தில் ''. அம்மை ஆதி சக்தி, இம்முகம் பளபளக்கும் தங்கமாக பொன்னார் மேனியனாக திகழ்கின்றது என்பது ஐதீகம். கையிலங்கிரியிலே மிகவும் ஸ்பஷ்டமாய் தரிசனம் தரும் முகம் இம்முகம். மேலே நாகம் குடைப்பிடிக்க இடப்பக்கத்தில் அம்மையையும் அப்பரும் சிவ சக்தியாக தரிசனம் தரும் முகம் இதுதான். முக்கண் முதல்வரையும் மலையரசன் தன் பொற்பாவையையும் ஒரு சேர இம்முகத்திலே தரிசனம் செய்கின்றோம். கயிலாயம் என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும் முகமும் இதுதான். வாம தேவ முகம் சகல செய்வினை தோஷத்தை போக்கியருளும் சர்வ சக்தி படைத்த முகம், பூத பிரேத பயங்களையும், அலுவலக பணியில் ஏற்படும் அச்சதையும் தீர்க்கும்.



ஐயனின் அருள் ஒளியில் திளைக்கும் இரவி அவர்கள்









யாத்திரை தொடரும்…