தாய்நாடு திரும்பினோம்
படான் தர்பார் சதுக்கம்
நரசிம்மர் சிலை
அடியேன் - ஜனார்த்தனன்
( அரண்மணை வளாகம்)
பைரவர்
ஓர் அழகிய கருடன் சிலை
சுவற்றில்தான் எத்தனை விதமான முகங்கள்
(இவ்வருட நில நடுக்கத்தில் இந்த புராதன கட்டிடங்கள் பல் சேதமடைந்து விட்டன, மறுபடியும் புதுப்பொலிவுடன் கட்டுவார்களா???)
ஹாரதி ஹோட்டலில்
இவ்வாறு இந்த மூன்றாவது யாத்திரையின் போது அவனருளால் சிவசக்தி தரிசனமும், ஹரிஹர தரிசனமும் திவ்யமாக கிட்டியது. இத்தடவை இரண்டு கடினமான யாத்திரைகளும் எந்தவிதமான விக்னமும் இல்லாமல் நிறைவடையும்படி அருள் பாலித்தார் மலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதர்.
பல் வேறு ஆலயங்களும் அரண்மணைகள்ம் நிறைந்த காத்மாண்டின் படான் தர்பார் சதுக்கம் சுமார் 10 நிமிட நடை தூரத்தில் இருந்ததால் சிலர் மாலையிலும் சிலர் காலையிலும் அங்கு சென்று சுற்றிப்பார்த்து விட்டு வந்தனர்.நேபாளத்தில் கன்னிப் பெண்ணை அம்மனாக வணங்கும் வழக்கம் உள்ளது. அந்த வாழும் அம்மன் சிக்கும் அரண்மணை குமாரி பஹல் என்று அழைக்கப்படுகின்றது. அங்கு சென்று குமாரியின் தரிசனமும் பெற்று வந்தனர். சிலர் மறுபடியும் பசுபதிநாதர் ஆலயம் சென்று நன்றி கூறிவிட்டு வந்தனர். அடியோங்களுக்கு ஐயனின் காலை அபிடேகம் தரிசனம் செய்யும் பெரும் பாக்கியம் கிட்டியது. காத்மாண்டுவில் ருத்ராக்ஷம் வாங்கினோம்.
காத்மாண்டு விமான நிலையம்
இவ்வாறாக திருக்கயிலாயம் மற்றும் முக்திநாத் யாத்திரைகள் அவனருளால் நிறைவு செய்து விமானம் மூலம் சென்னை திரும்பினோம். இதுவரை வந்து யாத்திரையை இரசித்த அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இப்பதிவுடன் 2014 திருக்கயிலாய பதிவுகள் நிறைவடைகின்றன. அவனருளால் அடுத்து ஒரு யாத்திரை சித்திக்கும் போது அந்த தகவல்களுடன் தங்களை சந்திக்கின்றேன் அன்பர்களே.
No comments:
Post a Comment