Monday, January 13, 2020

வெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 13

சீனப்பகுதியில் முதல் நாள்

சீனப்பகுதி மிகவும் சுத்தமானதாகவும். செல்வச்செழிப்பு மிக்கதாக விளங்கியது. தார் சாலை சூரிய ஒளியில் மின்னியது. எங்கள் வாகனம் தயாராக இருந்தது, முக்கண் முதல்வரை தரிசனம் செய்யும் ஆர்வத்தில் அனைவரும் வாகனத்தில் சீக்கிரம் அமர்ந்து பயணத்தைத் துவக்கினோம். மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டால் கற்கள் கீழே விழாமல் இருக்கு வலையினால் தடுப்பு அமைத்திருந்தனர். இச்சுங்கச்சாவடியின் மூலமாக   முதலில் சரக்கு போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது, கொடாரி வழி அடைபட்டுவிட்டதால் தற்காலிகமாக தற்போது திருக்கயிலாய யாத்திரிகளையும் சென்ற வருடம் முதல் அனுமதிக்கின்றனர். மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போல நேபாளத்திற்கும், சீனாவிற்கும் இடையே ஆன வித்தியாசம் இருந்தது. இரு பக்கமும்  பல பனி மூடிய சிகரங்களை பார்த்து இரசித்துக்கொண்டே பயணத்தைத் தொடர்ந்தோம், வழியில் எந்த கிராமமும் கண்ணில் படவில்லை, பாதை மட்டும் கருநாகம் போல் வளைந்து வளைந்து இருந்தது. இப்பகுதியில் பயணம் செய்த களைப்பே தெரியவில்லை. பல  மலை ஏற்ற இறக்கங்களுக்குப்பின் கிரியோங் (Kriyong) ஊரை அடைந்தோம். நாங்கள் அன்றைக்கு தங்க வேண்டிய விடுதிக்கு அழைத்துச்  சென்றனர். வாகனத்தை விட்டு இறங்கியவுடன் குளிர் தெரிந்தது.  அனைவரும் கோட்டுகளை அணிந்து கொண்டோம்.




சாலைகள் தூய்மையாக இருந்தன

 கிர்யோங்  நதி


கிரியோங் விடுதி



கிரியோங் ஒரு சிறிய ஊர்தான்சதுரவடிவில்  மூன்று சுற்று சாலைகள் அமைந்திருந்தனசாலையின் இரு மருங்கும் கடைகள்பல தங்கும் விடுதிகள் இருந்தனயாத்திரைக்கு தேவையான கைத்தடிகேன்கள்பூசை பொருட்கள்இந்திய பொருட்கள்  அனைத்தும் இங்குள்ள   கடைகளில் இருந்தனவிடுதிக்கு மிக அருகில் மூன்றடுக்கு கோபுரத்துடன் கூடிய ஒரு புத்த விகாரம் இருந்ததுஅங்கு சென்று புத்தரை தரிசித்தோம்சுவற்றில் புத்தரின் வரலாறு  அற்புதமான ஓவியங்களாக வரைந்திருந்தனர்பின்னர் காலாற சிறிது நேரம் அவ்வூரை சுற்றிப் பார்த்தோம்ஆனால் ஊர் மிகவும் சுத்தமாக இருந்ததுநிறைய மின்வண்டிகள்(Electrical Vehicles) பயன்படுத்துகின்றனர்அதற்காக மின்னேற்றம் (Charging) செய்து கொள்ள வசதிகள் அனைத்து கடைகளிலும் இருந்தனமின்சாரத்தை சேமிப்பதில் இவர்கள் எப்போதும் கவனம் செலுத்துகின்றனர்


மூன்றடுக்கு விமானத்துடன் புத்த விகாரம் 


பிரார்த்தனை உருளைகள்

சுவரை அலங்கரிக்கும் அழகிய ஓவியங்கள்



 

மின் வாகனங்கள் 

மாலை சத்சங்கம் 




தங்கும் விடுதியில் கழிப்பறைமற்றும் சுடு தண்ணீர் வசதி இருந்ததுஇது ஒரு முன்னேற்றம்பொதுவாக யாத்திரிகள் இவ்வூரில் உடல் உயர்மட்டத்திற்கு பழகிக்கொள்வதற்காக ஒரு நாள் தங்குவார்கள்அடியோங்கள் காத்மாண்டுவில் அதிகப்படியான நாட்கள்  தங்கியதால்சுற்றுலா நிறுவனத்தினர் எங்களை  இங்கு தங்காமல் மறு நாளே புறப்பட வேண்டினர்இவ்வாறு சரியாக உடலை பழக்க்ப்படுத்தமல் சென்றதால் பலருக்கு பின்னர் சிரமம் ஏற்பட்டதுயாத்திரை எவ்வாறு இருந்தது என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களேகிரியோங்கிலிருந்து கிளம்பி சாகா நகரம் நோக்கி பயணம் செய்தோம்.  

No comments: