Saturday, January 18, 2020

வெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 14

பொதுவாக உயர்மட்டங்களில் அதாவது 10000 அடி உயரங்களுக்கு மேல்  பயணம் செய்யும் போது  ஒவ்வொரு ஆயிரம் அடிக்கும் ஒரு நாள் வீதம்  தங்கி செல்ல வேண்டும் அப்போதுதான் உடல் அந்த தட்பவெப்ப நிலைக்கும், குறைந்த பிராணவாயுக்கும் ஏற்றதாக மாறும் இதை ஆங்கிலத்தில் Acclaiamtization என்று கூறுவார்கள்இவ்வாறு இல்லாமல் ஒரே அடியாக பயணம் செய்தால் High Altitude sickness  எனப்படும் உயர்மட்ட நோய்க்கு ஆளாக வாய்ப்புகள் உள்ளன. சில சமயம் அந்நோய் உயிரைக் குடிப்பதாகவும் மாறவாய்ப்பு உள்ளதுஎனவே பொதுவாக இவ்வழியில் திருக்காயிலாயம் செல்பவர்கள் இந்நகரத்தில் ஒரு நாள் தங்கிச் செல்வார்கள் ஆனால் அடியோங்கள் மூன்று நாட்கள் எதிர்பாராதவிதமாக காத்மாண்டுவில் தங்க நேர்ந்ததால் இங்கு தங்காமல் மறு நாளே யாத்திரையைத் தொடர்ந்தோம்



பனி படர்ந்த சிகரங்கள்



வழியில் ஒரு  பெட்ரோல் நிலையம் 

( அத்துவான மலைப்பிரதேச பாலை வனத்தில்  சாலை, மின்சாரம், தொலைத் தொடர்பு என்று  அனைத்து  வசதிகளையும் உருவாக்கி வைத்துள்ளது சீன அரசு.)







மலைத்தொடரில் வளைந்து வளைந்து செல்லும் பாதை


உயரமான இடம் ( 5200  மீ)


இடையே மதிய உணவு


பிரம்மபுத்ரா ஆறு 


ஆற்றின் கரையில் சாகா நகரம்




பிரம்மாபுத்ரா ஆற்றின் குறுக்கே அமைத்துள்ள பாலம்

இப்பாலம் சமீபத்தில்தான் கட்டப்பட்டது, அதற்கு முன் படகு மூலம்தான் யாத்திரிகளும் அவர்களுடைய வாகனமும் ஆற்றை கடந்தனர்.  அதனால்  பயணத்தில்  மிகவும் தாமதமேற்பட்டது.  


உலகின் உயரமான பீடபூமியில் பயணம் என்பதால் பாதை ஏற்றமும் இறக்குமாகத்தான் இருந்ததுதார் சாலைதான்அதிகமான போக்குவரத்து இருக்கவில்லைஎப்போதாவது ஒரு கிராமம் கண்ணில் பட்ட மற்றவகையில் இரு புறமும் பனி படர்ந்த மலைச் சிகரங்கள்தான் கண்ணில் பட்டனவழியில் இரு கணவாய்களைக் கடந்தோம் அதில் ஒரு கணவாயின் உயரம் 5200 மீஅங்கு வண்டியை சிறிது நேரம் நிறுத்தினார்இறங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டோம்ஊதற்காற்று விசு விசு என்று வீசியதுபின்னர் பயணத்தை தொடர்ந்தோம் மதிய உணவு வேளைக்கு சாகா நகரத்தை அடைந்தோம்பிரம்மபுத்ரா நதியைக் கடந்தோம்முன்னர் சாகாவில் தங்கவைப்போம் என்று கூறியிருந்தனார்அவ்வாறு செய்யவில்லைஎன்ன என்று கேட்டபோது சாகாபில் தங்கப்போவதில்லைபுதுடோங்பா செல்லப் போகிறோம் என்றார்கள்.




புது டோங்பாவில் தங்கிய விடுதி


புஷ் ஜியா பாங்மா ஹோட்டல்

( சூரிய மின் ஒளி வெப்ப கலன் டாங்க், இதனால் அனைத்து அறைகளிலும் சுடு தண்ணீர் இவ்வருடம் கிடைத்ததது)



டோங்பாவிலிருந்து மானசரோவர் செல்ல ஆயத்தம்






டோங்பாவை அடைந்தபோது மாலை நேரமாகி விட்டதுஇத்தடவை குளிர் அதிகமாக இருந்தது.  அடியோங்கள் அங்கு சென்ற நேரத்தில் மழை 
வேறு பெய்ததால் குளிர் இன்னும் அதிகமாகியதுபலருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதுசென்ற தடவை தங்கிய அதே விடுதியில்தாம்  இம்முறையும் தங்கினோம்அனைத்து அறைகளிலும் இத்தடவை சுடுதண்
ணீர் வசதி செய்திருந்தனர்ஆனால் அந்த நடுங்கும் குளிரில் யாரும் குளிக்கத்தான் முடியவில்லை முகம் கழுவ மட்டுமே சுடுதண்ணீரைப் பயன்படுத்தினோம்இரவு அங்கு தங்கியபின் மறு நாள் மானசரோவர் நோக்கி பயணப்பட்டோம்.   

No comments: