Thursday, February 06, 2020

வெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 18

பொன்னார் மேனியன் தரிசனம்

இன்றைய தினம் கிரி வலம் சென்றவர்களுக்களுக்கு ஐயன் ஒரு அற்புத தரிசனம் வழங்கிய நாளாகவும் அதே சமயம்  சுற்றுலா நிறுவனத்தினரால் ஏமாற்றப்பட்ட நாளாகவும் அமைந்தது. முதலில் ஐயனின் தரிசனத்தின் சிறப்பைப் பற்றிக் காணலாம் அன்பர்களே. அன்பர்கள் முதல்நாள் தங்கிய இடம் டேராபுக் அதாவது திபெத்திய மொழியில் பெண் யாக்கின் குகை என்று பொருள்படும். இவ்விடம் ஐயனின் வடக்கு முகத்திற்கு எதிரே உள்ள இடம். தினமும் அதிகாலையில் அருணோதய காலத்தில் சூரியனுடைய மஞ்சள் கதிர்கள் ஐயனின் திருமுகத்தில் ஓளிரும் போது ஐயன் பொன்னார் மேனியராக அருட்காட்சி தருவார். அதில் ஒரே ஒரு சிறு தடங்கல் என்னவென்றால் மேக மூட்டம் இடையில் வராமல் இருக்கவேண்டும். பல சமயம் மேகமூட்டத்தின் காரணமாக பொன்னார் மேனியர் தரிசனம் கிடைக்காமல் போகும்கிரி வலம் சென்ற அன்பர்களுக்கு இவ்வருடம் ஐயன் அருமையான பொன்னார் மேனியன் தரிசனத்தைத் தந்தருளினார். முதலில் ஐயனின் திருமுடி மட்டும் சிவப்பாக மாறும் அது அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கி வரும்  ஒரு சமயத்தில் ஐயனின் திருமேனி முழுவதும் அருண நிறமாக ஜொலிக்கும். அடுத்த நிமிடம் அப்படியே பொன்னிறமாக மாறி  ஒளிரும் ஒரு நொடியில் இக்காட்சி மாறி ஐயன் இயல்பான வெள்ளியாக மிளிர்வார். இவ்வற்புதமான காட்சி அன்பர்களுக்கு கிட்டியது.



கிழக்கு முக பொன்னார் மேனியன் தரிசனம் (டார்ச்சன்)








வடக்கு முக பொன்னார் மேனியன் தரிசனம் 

இதற்கப்புறம் எப்போதும் நடைபெறும் நாடகம் நடைபெற்றது.  இதற்கு மேல் கிரி வலம் செல்ல இயலாது என்று போய் கூறி பலரை இத்துடன் திரும்பி சென்று விடலாம் என்று மூளைச்சலவை செய்து திரும்பிச்செல்ல ஒத்துக்கொள்ள செய்துவிட்டனர்.  ஆயினும் இரு அன்பர்கள் கிரி வலம் முழுமையாக செய்ய வேண்டும் என்று உறுதியுடன் நின்றனர்

திரும்பி சென்றுவிட ஒத்துக்கொண்டவர்களை முதலில் மருத்துவவண்டியில் (Ambulance) ஏற்றிய சுற்றுலா நிறுவனத்தினர்கிரி வலம் செல்வோம் என்று நின்ற இருவரையும் கட்டாயமாக இழுத்துக்கொண்டு  வந்து ஏற்றினர்திட்டமிட்டபடி யாத்திரை நடைபெறாமல் போனதால் அதற்காக கிரி வலத்தின் நாட்களை குறைக்க இவ்வாறு செய்திருக்கலாம்  என்று சமாதானம் அடையலாம்ஆனால் உண்மையாக நடந்தது என்னவென்றால் அது ஒரு பகல் கொள்ளை.  அனைத்து அன்பர்களும் தேவைப்பட்டால் குதிரையில் கிரி வலம் செல்ல  சீன பணமாகசுமார் 3000 யுவான்கள் கொண்டு சென்றிருந்ததை அறிந்திருந்தனர்எனவே  மருத்துவ வண்டிக்கு 1000 யுவான்கள்  ஆகும் என்று அனைவரிடமும் கறந்து விட்டனர்வண்டியில் வந்த அன்பர் வண்டி ஓட்டுனரிடம் பேசியதில் ஒருவருக்கு அவர்கள் 300 யுவான்கள் மட்டுமே கட்டணம் என்பது பின்னால் தெரிய வந்ததுதெரிந்தே அதிகமான பணத்தை கொள்ளையடித்தனர்சென்னையிலிருந்து நம்மை அழைத்துச் சென்றவர் இதை அறிந்திருந்தாலும் ஏதும் பேசாமல் இருந்தார்இதை கிரி வலம் சென்றவர்கள் திரும்பி டார்ச்சன் வந்து தெரிவித்த போது அடியேனுக்கு திருமுருகன்பூண்டியில் சுந்தரர் பாடிய பதிகம்தான் மனதில் தோன்றியது.

டார்ச்சன் வீதியில் 


அப்பதிகம் இதோ      


கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டு ஆறலைக்கும் இடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன் பூண்டி மாநகர் வாய்     
        இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.


வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லிக்
கல்லினால் எறிந்திட்டும் மோதியும் கூறை கொள்ளும் இடம்
முல்லைத் தாது மணம் கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய்
எல்லைக் காப்பது ஒன்று இல்லை யாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே
.


தயங்கு தோலை உடுத்த சங்கரா  சாம வேதம் ஓதி
மயங்கி ஊர் இடு பிச்சை கொண்டு உணும் மார்க்கம் ஒன்று அறியீர்
முயங்கு பூண்முலை மங்கையாளொடு முருகன் பூண்டி மாநகர் வாய்
இயங்கவும் மிடுக்குடையராய் விடில் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.


திருக்கயிலை நாதரிடம் ஐயா உம்மெதிரிலேயே இவ்வாறு செய்கின்றார்களே தாங்கள் ஏதும் செய்யாமல் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே என்று வேண்டத்தான் தோன்றியதுஅடியோங்கள் சுந்தரரும் அல்ல,  அரசன் அன்று கொல்வான்தெய்வம் நின்று கொல்லும் என்றபடி இவ்வாறு பலவகையிலும் ஏமாற்றியதற்கு அவர் அவர்களுக்குரிய தண்டனையை தருவார் என்று நம்புவோமாக.


இது மூன்றாவது முறை அடியேன் தனியார் நிறுவனத்தினர் நடத்தும் திருக்கயிலாய யாத்திரையில் செல்வதுமூன்று முறையும் யாரும் கூறுவது போல் நடந்து கொள்வதில்லைசீனாவுக்குள் சென்றவுடன் நம்மை அப்படியே சேர்ப்பாக்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர்கள் என்ன சொன்னாலும் அதற்கு அப்படியே ஒத்துக்கொள்கின்றனர்பலர் இவ்வாறு கிரிவலம் அழைத்துச் செல்லாமல் திருப்பி அழைத்து வந்து விடுகின்றனர் என்பதை அறிந்திருந்தோம்இம்முறை அது அடியோங்களுக்கும் நடந்ததுஅது மட்டுமல்லாமல் அறியாமலேயே அதிகமான பணத்தை பெற்றது மிகவும் மோசமான செயல்.  சென்னை சுற்றுலா நிறுவனத்தினர் இதற்கு உடந்தை என்பதை ஜீரணிக்க முடியவில்லைதனியார் சுற்றுலா நிறுவனத்தினர் மேல் இருந்த ஒரு நம்பிக்கை முற்றிலுமாக அகன்றுவிட்டது


கிரி வலம் செல்ல முடியாத வருத்தத்தில் ஒரு அன்பர் 

வண்டி ஓட்டுநர்


சாகா நோக்கி பயணம் 





இடையில் பாதை மராமத்து பணிகள்









வழியில் ஒரு உயரமான(5211 மீ) இடம்







கிரி வலம் சென்றவர்கள் மதிய வேளையில் திரும்பி வந்தனர்அதில் குமாரசாமி ஐயா அவர்கள் மிகவும் மன வேதனையுடன் இருந்தார்பாதை சரியாக இருந்தும்மற்ற குழுவினர் கிரிவலம் சென்றிருந்த போது இவர்கள் இவ்வாறு செய்துவிட்டனரே என்று அழுதார்ஒரு வகையில் அடியேன் அவர் இந்த யாத்திரை வருவதற்கு ஒரு காரணம் என்பதால் அடியேன் மனதிலும் ஒரு சஞ்சலம்இறைவா ஒரு சிவனடியாருக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு அடியேன் காரணமாகிவிட்டேன் என்னை மன்னித்து விடு என்று வேண்டிக்கொண்டேன்.
ஒவ்வொரு தடவை செல்லும் போதும் இத்தடவை முதல் யாத்திரைவிட சிறந்த தரிசனம் அல்லது அனுபவம் கிட்டும் என்ற ஒரு நம்பிக்கையில் அடியேன் சென்றேன் ஆனால் ஒவ்வொரு தடவையும் அது போன்ற தரிசனமோஅனுபவமோ கிட்டவில்லைஒவ்வொரு தடவையும் குறைந்து கொண்டேதான் வருகின்றது.  இத்தடவை கிரிவலம் கூட செல்ல முடியவில்லை.


அரசு மூலம் சென்ற யாத்திரை மற்றும் தனியார் முலம் சென்ற யாத்திரைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போதுஉடல் நலம் சரியாக உள்ளவர்கள் அரசு மூலமாக யாத்திரை செல்வதே உத்தமம் என்பது தெளிவுதனியார்கள் எப்படியும் நம்மை ஏமாற்றி விடுகின்றனர்.
மிகவும் சோகத்துடன் டார்ச்சனில் இருந்து புறப்பட்டோம்வழியில் பல பனி மூடிய சிகரங்களைக் கண்ணுற்றோம்நீண்டநேரம் பயணம் செய்து இரவு பத்து மணி அளவில் சாகாவை அடைந்தோம்.   அங்கும் ஒரு ஏமாற்றம்  சாதாரண விடுதியில் தங்க வைத்தனர்மறு நாள் பயணம் எவ்வாறு இருந்தது என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.  



No comments: