Friday, August 21, 2020

திருக்கயிலாய புத்தகம் ஆங்கிலத்தில்

 திருசிற்றம்பலம் 


அடியேன் திருக்கயிலை பற்றிய நூலை முதலில் தமிழில் வரைந்தேன். பிரேமா பிரசுரத்தினர், அதை வெளியிட்டார்கள். இது வரை மூன்று பதிப்புக்கள் வந்துள்ளன. பல அன்பர்கள் அந்நூலை வாசித்து பலன் பெற்றுள்ளனர். 

அப்போதிலிருந்தே அப்புத்தகத்தை ஆங்கிலத்திலும் வெளியிடவேண்டும் என்ற எண்ணத்தை மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதர் அடியேனது உள்ளத்தில் ஏற்படுத்தினார். ஆயினும் பல வருடங்கள் கழித்து இப்போதுதான் திருவருள் கூடி வந்துள்ளது. 

தமிழ் படிக்க முடியாத ஆங்கிலம் படிக்கக்கூடிய அன்பர்களுக்கு இந்நூல் திருக்கயிலாய யாத்திரை பற்றி அறிந்து கொள்ள இந்நூல் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்நூலை சிவசக்தியின் திருப்பாதத்தில் சமர்ப்பிக்கின்றேன். 

தற்போது அடியேன் இந்நூலை அமேசானின் Kindle Direct Publishing (Kdp) மூலமாக பதிவிட்டிருக்கின்றேன்.

என்ற சுட்டியை பயன்படுத்தி தாங்கள் புத்தகத்தை வாங்க முடியும். அமேசானில் புத்தகங்களுக்கு கட்டணம் செலுத்தவேண்டும். புத்தகத்தை வாங்க முடியாத அன்பர்கள் அடியேனுக்கு மின்னஞ்சல் செய்தால் அவர்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்கின்றேன்.  அடியேனது மின்னஞ்சல் முகவரி  muruganandams@rediffmail.com .

நூலில் பல அரிய புகைப்படங்களுடன் இந்திய வழி மற்றும் நேபாள வழி அனுபவங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நூலை படித்தபின் தாங்களே திருக்கயிலை சென்று சிவபெருமானை தரிசித்து வந்த அனுபவத்தைப் பெற இந்நூலை படியுங்கள். தாங்கள் படிப்பதோடு மட்டும் அல்லாமல் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இச்செய்தியை கூறுவங்கள். யான் பெற்ற இன்பத்தை அனைவரும் பெறட்டும்.

கண்ணார் அமுதனே போற்றி!                               கயிலை மலையானே போற்றி! 

Saturday, May 09, 2020

இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே

கண்ணார் அமுதனே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி


 


திருக்கயிலாய யாத்திரிகளின் நெடு நாளைய கனவு இன்று நனவாகியுள்ளது என்ற செய்தியை இன்று நாளிதழில் படித்த போது இன்பத்தேன் வந்து காதில் பாய்ந்தது.

இந்தியா வழியாக இது வரை திருக்கயிலாய யாத்திரை மேற்கொண்ட அன்பர்கள் மிக அதிக தூரம் நடைப் பயணம் வழியாக செல்ல வேண்டி இருந்தது. அதனால் யாத்திரைம் காலமும் மிக அதிகமாக இருந்தது.

அடியேன் 2005 ஆண்டு சென்ற போது  யாத்திரை காலம் 30 நாட்களாக இருந்தது. பிறகு 2013ல் அது 25 நாடகளாக குறைக்கப்பட்டது.  2016ல் நாதுலா- கணவாய் வழியாக புது பாதை அறிமுகப்படுத்தப்பட்டது.

2020ல் இப்பாதை திறக்கப்பட்டுள்ளது. எனவே நடைப்பயணம் இல்லாமல் பேருந்து மூலம் லிபு கணவாய் வரை அன்பர்கள் பயணம் செய்யமுடியும். நேபாளம் வழியாக சென்று சுற்றுலா அமைப்பாளர்களிடம் ஏமாற வேண்டிய அவசியம் இனி இல்லை.

இனி நாதுலா கணவாய் வழியாக செல்வது நிறுத்தப்படும் என்று தெரிகிறது. மேலும் லிபு கணவாயை அடைய ஐந்து கி.மீ பாதை இல்லை அது  2022 ல் தான் முழுமையடையும் என்றும் தெரிகிறது.

முழு விவரம் வெளி வரவில்லை. இவ்வருட யாத்திரைக்கான அழைப்பும் இன்னும் வரவில்லை வந்தவுடன் அவ்விவரங்களுடன் தங்களை சந்திக்கின்றேன் அன்பர்களே.

ஓம் நமசிவாய 


Tuesday, February 11, 2020

வெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 20

யாத்திரை நிறைவு

கிரி வலம் செல்ல அனுமதிக்கதால் ஒரு நாள் முன்னதாகவே காத்மாண்டு வந்து சேர்ந்து விட்டோம்காத்மாண்டிலிருந்து செல்வதற்கு முன்னரே  இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தோம். இங்கு தங்குவதற்கான செலவுகளை சுற்றுலா நிறுவனத்தினர் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கூறிவிட்டதால் முன்னர் செய்திருந்த முன்பதிவை இரத்து செய்து விட்டு அன்றைய தினமே கல்கத்தா வழியாக வரும் விமானம் மூலம் இந்தியா புறப்பட்டோம்


காத்மாண்டுவிலிருந்து புறப்பட தயார் நிலையில்




காத்மாண்டிலிருந்து கொல்கத்தா பயணம்


கொல்கத்தாவில் ஒரு இனிப்புக்கடையில்


கொல்கத்தா  விமான நிலைய தங்கும் அறை


கொல்கத்தா விமான நிலையம்


கொல்கத்தா காளி ஆலயம்



 

சென்னை திரும்பினோம்


யாத்திரை நிறைவு

கல்கத்தாவிலிருந்து சென்னைக்கான விமானம் மறுநாள்தான் இருந்தது என்பதனால் கல்கத்தாவில் ஒரு இரவு தங்கினோம். கல்கத்தா சென்றதால் காளி மாதாவை தரிசிக்க சென்றோம்.  இவ்வாறாக இவ்வருட யாத்திரை மிகவும் ஏமாற்றம் நிறைந்ததாக முடிவடைந்தது. ஆயினும் ஐயனின் வெள்ளிப்பனி கோலத்தை தரிசிக்கும் பேறு பெற்றோம், கிரிவலம் சென்ற அன்பர்கள் பொன்னார் மேனி தரிசனமும் பெற்றனர். அவனருளால் இனி ஒரு வாய்ப்பு சித்தித்தால் அவ்வனுபவத்தோடு தங்களை சந்திக்கின்றேன் அன்பர்களே.


 திருச்சிற்றம்பலம்.

Sunday, February 09, 2020

வெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 19


மிகவும் சோகத்துடன் டார்ச்சனில் இருந்து புறப்பட்டோம். வழியில் பல பனி மூடிய சிகரங்களைக் கண்ணுற்றோம். நீண்டநேரம் பயணம் செய்து இரவு பத்து மணி அளவில் சாகாவை அடைந்தோம்.   அங்கும் ஒரு ஏமாற்றம்  சாதாரண விடுதியில் தங்க வைத்தனர். மறு நாள் பயணம் எவ்வாறு இருந்தது என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே



சாகாவில் தங்கிய விடுதி 




சாகா நகரம்





இடையில் ஒரு கணவாய்








இவ்வருட திருக்கயிலாய யாத்திரையின் நிறைநாள் சாகாவில் இருந்து அதிகாலையில் புறப்பட்டு சீன நேபாள எல்லையை நோக்கி பயணம் செய்தோம்கிரி வலம் செல்ல முடியாமல் போனதால் பலரும் மனக்குறையுடனே பயணம் செய்தோம்மேலும் எவ்வாறு ஏமாற்றப்பட்டோம் என்பதால் அது அதிகமாகவே இருந்ததுதிருக்கயிலை நோக்கி சென்ற போது  அவ்வளவு அதிகமாக கவனிக்கவில்லை திரும்பி வரும் போது இரு பக்கமும் பனி சூழ்ந்த பல சிகரங்கள் உள்ளன என்பதைக் கண்டோம்மேலும் சில இடங்களில் மலையைக் குடைந்து  சுரங்கப் பாதைகள் அமைத்துக் கொண்டிருந்ததை கவனித்தோம்இச்சுரங்கங்கள் முடிந்தால் மலை மேல் ஏறி பின் இறங்கி பயணம் செய்வதற்கு  பதிலாக சுரங்கத்தின் வழியாக செல்லும் போது பயண நேரம் மிகவும் குறையும்உயரமான கணவாய்களை அடைந்து பின் கீழிறங்கி பயணம் செய்து நிறைவாக எல்லையை மதிய நேரத்திற்கு அடைந்தோம். கிர்யோங்கில் மதிய உணவு உண்டோம், இங்கு சிறிது நேரம் காலதாமதமானது.  எந்தவித சிரமமும் இல்லாமல் எல்லையைக் கடந்தோம்.










கடவுசீட்டில் வெளியேறுவதற்கான முத்திரை பெற்று சிறு பேருந்து மூலம் காத்மாண்டு நோக்கி புறப்பட்டோம்அப்போது வண்டி ஓட்டுநர்  முன்னர் திருக்கயிலாய யாத்திரிகள் சென்ற கொடாரி நட்புப்பாலம் சரி செய்து விட்டனர்தற்போது சரக்குப் போக்குவரத்து ஆரம்பித்து விட்தனர்அடுத்த வருடம் எப்போதும் போல் யாத்திரிகள் அவ்வழியில் செல்ல முடியும் என்றார்மேலும்  இந்த ருசுவாகதிப் பாதையையும் சீன அரசு மராமத்து  செய்து மேம்படுத்தித்  தர ஒப்புக்கொண்டுள்ளது என்றார்எப்படியோ அன்பர்கள் அதிக சிரமம் இல்லாமல் திருக்கயிலைநாதரை தரிசிக்க முடிந்தால் மகிழ்ச்சியேகாத்மாண்டை அடைந்த போது நள்ளிரவாகி விட்டது.