இராக்ஷஸ் தால்
இராவண ஏரி நடுவில் உள்ள தீவில்தான்
இராவணன் சிவபெருமானை நோக்கி தவம் செய்ததாக ஐதீகம்
சூரிய ஓளியில் இராக்ஷஸ்தால்
அனில் -உமா கோயல்
மானசரோவர் ஒரு நிறம் என்றால் இராக்ஷஸ் தால் இன்னொரு நிறம் |
குர்லா மாந்தாதா மலைச் சிகரங்கள்
பெரிய மலையின் எதிரே ஒரு குட்டி மலை
இந்த ஏரிகளின் கரையில் உள்ள கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி எவ்வளவு உயரத்திற்கு எவ்வளவு கற்களைக் கொண்டு வீடு அமைக்கின்றோமோ அவ்வளவு நன்மை என்பது பக்தர்கள் நம்பிக்கை இங்கு யாரோ ஒருவரோ அல்லது குழுவினரோ ஒரு குட்டி மலையையே உருவாக்கியுள்ளனர்.
சிறு குன்றில் தங்கள் கல்லையும் சேர்க்கும் கைலாஷ் கௌஷிக் தம்பதியினர்
மானசரோவரின் கிரி வலம் வரும் போது மானசரோவரின் இரட்டை ஏரியான இராக்ஷஸ்தால் மற்றும் ஒரு பக்கம் உள்ள குர்லா மாந்தாதா மலைத் தொடரின் சிகரங்களை கண்டோம் இப்பதிவில் அந்த படங்கள். அருகாமை(Close-up) புகைப்படங்கள் அனைத்தும் திரு. சுந்தர் அவர்களின் கை வண்ணம்.
*****************
திருஞான சம்பந்தர் தேவாரம்
திருக்கயிலாயம்
பாடல் எண் : 4
முந்நீர்சூழ்ந்த நஞ்சமுண்ட முதல்வர் மதனன்றன்
தென்னீருருவ மழியத்திருக்கண் சிவந்த நுதலினார்
மன்னீர்மடுவும் படுகல்லறையி னுழுவை சினங்கொண்டு
கன்னீர்வரைமே லிரைமுன்றேடுங் கயிலை மலையாரே.
தென்னீருருவ மழியத்திருக்கண் சிவந்த நுதலினார்
மன்னீர்மடுவும் படுகல்லறையி னுழுவை சினங்கொண்டு
கன்னீர்வரைமே லிரைமுன்றேடுங் கயிலை மலையாரே.
பொருள் :
இயற்கையாகத் தோன்றிய மலைக் குகைகளில் வாழும் புலிகள், பசியினால் சினமடைந்து
கல்லால் இயன்ற மலைமிசை உணவாதற்குரிய இரைகளையும், அருந்துவதற்கு நிலைபெற்ற நீரையுடைய
மடுக்களையும் தேடும் கயிலைமலையில் உறையும் தலைவர், கடலில் பரவித் தோன்றிய நஞ்சினைத்
திரட்டி உண்டவர் மன்மதனின் அழகிய உருவம் அழியக்கண்சிவந்த நுதலை உடையவர்.
தேவாரம் முழுவதையும் பொருளுடன் படிக்க இங்கு செல்க http://thevaaram.org/
யாத்திரை தொடரும்....................
No comments:
Post a Comment