பௌர்ணமி நிலவில் மானசரோவர் கரையில்
மானசரோவரிலிருந்து முழு நிலவின் அழகு
பூரண சந்திரன் உதிக்கும் அழகு
முழு நிலவொளியில் மிளிரும் மானசரோவர்
வெள்ளை நிலா
இரவில் தங்கும் விடுதி
நிலாவை கையில் ஏந்தும் உமா கோயல்
பாபு, அடியேன், சுதார்
பாபு, ஹிமான்சு, சுதார், முகர்ஜி, அனில் குமார் கோயல்
பூர்ண நிலவில் மானசரோவரின் அழகை படம் எடுக்கும் அடியேன்
(பின்புறப்படம் எடுத்தவர் சுந்தர்)
03-06-2012 மற்றும் 04-06-2012 ஆகிய இரு நாட்கள் மானசரோவரின் கரையில் தங்கினோம். திட்டப்படி இரண்டாம் நாள் டார்ச்சன் சென்றிருக்க வேண்டும் ஆனால் அன்று புத்த பூர்ணிமா( வைகாசி பௌர்ணமி) நாள் என்பதால் திருக்கயியலாத்தின் அடிவாரத்தில் யமதுவாரத்திற்கு அருகில் சாகா தாவா என்னும் திபெத்திய புத்த பண்|டிகை நடைபெறுவதால் அன்று வெளி நாட்டினருக்கு டார்ச்சன் செல்ல அனுமதி இல்லை என்று சேர்ப்பாகள் கூறினார்கள்.
இரண்டு இரவுகளிலும் முழு நிலவில் மானசரோவர் ஏரியின் அழகை இரசித்தோம்.மாசு அடையாத , உயர் மட்டத்தில் இருந்து மிக அருகாமைப் படமாக சுந்தர் எடுத்த நிலவை முதல் படமாக பார்க்கின்றீர்கள். ஆயிரம் ஆயிரம் நட்சத்திரத் தோழிகளுடன் முழு நிலவி பவனி வரும் அழகையும்( எத்தனை புகைப்படம் எடுத்தாலும் அந்த அழகை காட்ட முடியாது) நேரில் வந்து தான் அனுபவிக்க வேண்டும். அதற்காவே அவன் அனுமதி கிட்டினால் மீண்டும் திருகயிலாய யாத்திரை வரலாம்.
இப்பதிவில் இரண்டு நாட்களிலும் இரவில் எடுத்த படங்கள் இடம் பெற்றுள்ளன. வரும் பதிவில் காலை அழகை இரசிக்கலாம் அன்பர்களே.
*****************
திருஞான சம்பந்தர் தேவாரம்
திருக்கயிலாயம்
பாடல் எண் : 5
ஒன்றும்பலவு மாயவேடத் தொருவர் கழல்சேர்வார்
நன்றுநினைந்து நாடற்குரியார் கூடித் திரண்டெங்கும்
தென்றியிருளிற் றிகைத்தகரிதண் சாரல் நெறியோடிக்
கன்றும்பிடியு மடிவாரஞ்சேர் கயிலை மலையாரே.
நன்றுநினைந்து நாடற்குரியார் கூடித் திரண்டெங்கும்
தென்றியிருளிற் றிகைத்தகரிதண் சாரல் நெறியோடிக்
கன்றும்பிடியு மடிவாரஞ்சேர் கயிலை மலையாரே.
பொருள் :இரவில் சிதறித் தனிமைப்பட்ட யானைகள் குளிர்ந்த மலைச் சாரலின் வழிகளில்
விரையச்சென்று கன்றும் பிடியுமாய் இணையும் கயிலைமலைக்குரிய இறைவர். ஒருவராக இருந்தே
பற்பல வடிவங்களைக் கொண்ட ஒப்பற்ற பரம்பொருளாவார். தம் திருவடிகளைஅடைய எண்ணும் அடியவர்கள்
பேரின்பத்தை அடையும் விருப்போடு நாடுதற்குரியவர்.
தேவாரம் முழுவதையும் பொருளுடன் படிக்க இங்கு செல்க http://thevaaram.org/
யாத்திரை தொடரும்....................
4 comments:
கண்கொள்ளாக் காட்சிகள்...
மானசரோவர், ஒளிரும் முழுமதி. இரண்டுமே குளிர்விக்கின்றன.
மிக்க நன்றி தனபாலன் ஐயா.
உண்மை மாதேவி, சர்க்கரை பந்தலில் தேன் மழை பெய்தது போலத்தான்.
Post a Comment